Jailer  timepass
சினிமா

Jailer Review : Rajini முத்துவேல் பாண்டியாக ஜெயித்தாரா? - ஜெயிலர் படத்தின் Plus, Minus என்ன?

முதற்பாதி ரஜினி படமாகவும் நெல்சன் படமாகவும் சரியாக கைக்கூடி வந்திருக்கிறது. ரஜினி காந்த்தின் மாஸ் ப்ரெஸன்ஸ் படம் முழுவதுமே..

டைம்பாஸ் அட்மின்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் 'ஜெயிலர்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமன்னா, மோகன் லால், வினாயகன், சிவராஜ் குமார், சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் ப்ளெஸ், மைனஸ்களைப் பார்ப்போம்.

கதை: ஒரு முன்னாள் ஜெயிலரான ரஜினி காந்த் தன் குடும்பத்தைக் காக்க களமிறங்கி, சிலை திருட்டு கும்பலை எப்படி தும்சம் செய்கிறார் என்பதுதான் ஜெயிலர் படத்தின் கதை.

Plus:

1. ரஜினி காந்த்தின் மாஸ் ப்ரெஸன்ஸ் படம் முழுவதுமே க்ளிக் ஆகியிருக்கிறது.

2. முதற்பாதி ரஜினி படமாகவும் நெல்சன் படமாகவும் சரியாக கைக்கூடி வந்திருக்கிறது.

3. அனிருத் பிஜிஎம். படம் டல் அடிக்கும் இடத்தில் எல்லாம் படத்தை தூக்கிப் பிடிக்கிறது.

4. முதற்பாதியில் ஒர்க் ஒவுட் ஆன டார்க் காமெடி பாணி. முக்கியமாக, யோகி பாபு பகுதி.

5. இரண்டு பாடல்கள்.

6. மோகன் லால், சிவ் ராஜ்குமாரை சரியாகப் பயன்படுத்தியது.

7. ஒரு வழக்கமான ரஜினிகாந்த் பார்முலா மாஸ் கதையை தன் ஸ்டைலில் சொல்ல முயன்றிருக்கிறார் நெல்சன். அதில் பாதி கிணற்றைத் தாண்டியிருக்கிறார். 

Minus :

1. செகண்ட் ஆப் டார்க் காமெடி.

2. விறுவிறுப்பில்லாத இரண்டாம்பாதி திரைக்கதை. எக்கச்சக்க கதாபாத்திரங்கள், அதற்கான பின்கதைகள், லாஜிக் ஓட்டைகள்.

3. வலுயில்லாத ப்ளாஷ் பேக்.

4. ரஜினி காந்த்திற்கு இணையாக மெயின் வில்லன் வினாயகன் கதாபாத்திரத்தைக் கட்டமைக்க தவறியது.

Verdict : முதற்பாதியில் ஜெயித்த நெல்சன், இரண்டாம் பாதியில் சோதிக்கிறார். ஆனாலும், ரஜினி படமாக மொத்தத்தில் ஜெயிக்கிறது.