Jawan
Jawan timepass
சினிமா

Jawan part 2 இல்ல Uncut Version ரிலீஸ் பண்ணுங்க - ஜவான் நடிகை கோரிக்கை | SRK

டைம்பாஸ் அட்மின்

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகிய வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது ஜவான் திரைப்படம். இந்தப் படம் வெளியாகிய பத்து நாட்களிலேயே, ரசிகர்கள் பார்ட் 2 கேட்டு ஆர்ப்பரிக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நடித்த டங்கள் பட புகழ் நடிகை சானியா மல்கோத்ரா சமீபத்தில் நேர்காணல் ஒன்றை அளித்தார். அப்போது, அப்படத்தின் தயாரிப்பாளர்கள் 'Extended version' வெளியிட வேண்டும் என்று எழுந்த கோரிக்கை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ,"மக்கள் இப்படத்தை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது" என்று கூறினார்.

மேலும் அவர், "மக்கள் அப்படத்தில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஜவானின் அழகு இதுதான் என்கிறார். ஒரு பார்வையாளர் என்ற முறையில், நீட்டிக்கப்பட்ட பதிப்பை (Extended Version)யும் பார்க்க விரும்புகிறேன். திரைப்பட குழு அதைக் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். இல்லை என்றால் ஜவான் 2 படத்தை தயாரித்து அதில் என்னை நடிக்க வைப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

- பா.சையத் சஜானா