ஒரு காலத்துல இஞ்சினியர்ஸ்க்கு இருந்த மதிப்பே தனி ப்ரோ! அது என்ன ஒருகாலம்.. ஜஸ்ட் 20 இயர்ஸ் பேக்.. அவிய்ங்க என்னவொரு பீக்ல இருந்தாங்க தெரியுமா? "நீ என்ன பெரிய கலெக்டரா?ன்னு சொல்ற மாதிரி, "ஆமா இவரு பெரிய இஞ்சினியரு.. கேட்ட உடனே பொண்ணு கொடுத்துருவாங்க" என்ற டாக்லாம் அப்ப உண்டு. சரி இப்ப அதுக்கு என்ன? ஒண்ணுமில்ல.. இன்னக்கு இஞ்சினியர்ஸ் டே இல்லியா? அதான் அவங்களை சமூகம் எப்படி பார்த்தது, பார்க்குது என்றதை விட சினிமா அந்த இன்ஜினியர்ஸை எப்படி காட்டிச்சுதுன்னு ஒரு ரவுண்ட் வரலாம்..
இண்டியன்ஸ்ல (பாரத்னு இன்னும் அபிஷியலா மாத்தல தானே?!) எப்படி ஆண்டி இண்டியன் க்ளீன் இண்டியன்னு சொல்றாங்ளோ அதே மாதிரி சினிமாவிலும் கெட்ட இஞ்சினியர்ஸ் நல்ல இஞ்சினியர்ஸ் உண்டு..
பாலசாந்தர் டைரக்ஷன்ல சிவாஜி நடிப்பில் அந்தநாள்னு ஒரு படம். அது 1954-ல் வந்த படம் வென்றபடம்! அந்தப்படத்துல சிவாஜி ஒரு இஞ்சினியர் தான். ரேடியோ இஞ்சினியர். தன்னோட திறமையை இகழ்ந்த தன் சொந்த நாட்டுக்கு எதிரா சதி பண்ணுவாப்டி சிவாஜி. "மக்களுக்கு எதிராக சதி செய்தால் விதி முடியும் என்பது தானே சினிமா விதி" So அந்த ரேடியோ இஞ்சினியரான சிவாஜியை போட்டுத்தள்ளிடுவாங்க.
"சொல்றதெல்லாம் கதை சுடுறதெல்லாம் வடை"ன்னு நம்ம கெளதம் மேனன் இஞ்சினியர் லைப்-ஐ பத்தி வித்தியாசமா விவரிப்பாப்டி. "ஒரு வாகனத்தோட மேனிபக்சர் என்னன்னு அக்குவேரா ஆணிவேரா விவரிக்கிற ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் தான் ஹீரோவா இருப்பார். ஆனா அவர் பொழுதன்னைக்கும் ஹீரோயினோட அழகை தான் விவரிப்பார். உதாரணத்துக்கு லவ் பண்ற பொண்ணோட face கொஞ்சம் ஆயில்னெஸா இருந்தால் நம்ம மெக்கானிக்கல் என்ன சொல்வான், "ஏம்டி உன் மூஞ்சிலாம் ப்ரேக் ஆயில் போட்ட மாதிரி இருக்கு" ம்பான்.
ஆனால் கெளதம் மேனென் ஹீரோ, "அவ முகத்துல இருக்குற ஆயில்னெஸ் போறதுக்காக என் ஆயுளை லெஸ் பண்ணிக்கலாம்னு எனக்குத் தோணிச்சிது. தோணும்ல.. தோணணும்ல"ன்னு மைண்ட் வாய்ல பேசுவாப்டி. இதைப் பார்க்குற நம்மாளுக்கு மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்?
ஆனால் கெளதம் மேனன் மின்னலே படத்தில ட்ரிபிள் E , படிக்குற இஞ்சினியர்ஸுக்கும், மெக்கானிக்கல் படிக்கிற இஞ்சினியர்ஸுக்கும் இருந்த தீண்டாமையை கரெக்டா சொல்லிருப்பாப்டி. ட்ரிபிள் E கெத்து, மெக்கானிக்கல் வெத்துனு சீன் வச்சார் மெனென். ட்ரிபிள் E-ல பெண்கள் எடுப்பா இருக்குறதாவும், மெக்கானிக்கல் இஞ்சினியர்ஸ்ல பெண்கள் லிஸ்ட் குறைவுன்னும் ஒரு நிகழ்கால வரலாற்றுண்மையை பதிவு செய்தார்.
"உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் புரட்சித் தலைவர் (எடப்பாடி புரட்சித் தமிழர்) எம்.ஜி.ஆர் கூட இஞ்சினியர் தான். இவர் வெளிநாட்டில் படித்து மிகப்பெரிய டெக்னிக்கல் ஐட்டங்களை எல்லாம் கரைச்சுக் குடித்தவராக வருவார். டூயட் பைட் என்று பாடினாலும் Full time போகஸா தன் தொழில் மூலமா நாட்டுக்கும் மக்களுக்கும் எதுனா பண்ணணும்னே நினைக்கிற இஞ்சினியரா இருப்பார்.
ஆரம்பம் படத்துல ஆர்யா கூட இஞ்சினியர் தான். ஹாய் டூட் பண்ணலாமா ட்ரீட்? என்ற Mood-ல் வாழும் ஆர்யா AK கூட சேர்ந்து நாட்டோட தலையெழுத்துக்காக மெனக்கெடுவார். நிஜத்துல ஒரு இஞ்சினியர் நாட்டைக் காப்பாத்தணும்னு முடிவெடுத்தா.. அவன் வேலை பார்க்குற கம்பெனி வேறொரு முடிவெடுக்குமாம் Verified சகோஸ்!
ரோஜா படத்துல வர்ற அரவிந்த் சாமி சாப்ட்வேர் இஞ்சினியர். அவர் தீவிரவாதிகளின் குறியீடுகளை கண்டுபுடிச்சு நாட்டுக்கு நல்லது பண்ற மெட்டிரியல். So அதனால் கொத்தா தூக்கப்படுவார். ஆகஸ்ட் 15 அன்று மட்டுமே ஞாபகம் வரும் நம் தேசியக்கொடியை அவர் காப்பாத்துற மொமெண்ட் கூஸ்பம்ஸ். அதனால ஐடி பாய்ஸ் அவருக்கு தம்ஸப் காட்டலாம்.
நண்பன் படத்துல விஜய் இஞ்சினியரா படிச்சுட்டு இருப்பார். க்ளாஸ் டாப்பரா இருக்குற அவர் ப்ரபோசருக்கே க்ளாஸ் எடுக்குற விதம்லாம் வேறலெவல்ல இருக்கும். தன் படிப்பு மூலமா புதுசா சில அப்டேட்களை வச்சு அவர் ஹீரோயின் அக்காவுக்கு பிரசவம் பார்க்குற மேட்டர்லாம் நோட் பண்ண வேண்டிய ஒன்னு. நல்லா படிக்குறது முக்கியம். நம்மை நாம அனலைஸ் பண்ணி படிக்குறது அதைவிட முக்கியம்னு ஒரு கருத்தும் சொல்லிருப்பார் இஞ்சினியரான நண்பன் விஜய்.
இஞ்சினியர்ஸ்ல எந்த இஞ்சினியர்ஸுக்கு காதல் சீக்கிரம் வொர்க்கவுட் ஆகும்னு பார்த்தா நிச்சயமாக கம்ப்யூட்டர் இஞ்சினியர்ஸுக்குத் தான். கோ வொர்க்கர்ஸா எதிர்பாலினம் பக்கத்திலே இருக்குற வாய்ப்பு அவங்களுக்குத் தான் உண்டு. Can you join with me one coffee? என்று சிம்பிளா பேசிட முடியும். அல்லது அவங்களை கரெக்ட் பண்ணுவதற்காக அவங்க எரர் பண்ண ஒரு மேட்டரை சரி பண்ணி மேனஜர்ட இருந்து அவங்களை காப்பாத்துற விசயங்களை செய்யும் வாய்ப்பும் அதிகம்.
யாரடி நீ மோகனி படத்துல தனுஷ் ஒருபடி மேல போயிருப்பார். அவருக்கு ஹெட் ஆக இருக்குற நயனுக்கே ஒயின் ஊத்திக்கொடுத்து லவ்-ஐ கெய்ன் பண்ணதுலாம் சிவில் இஞ்சினியர்ஸ் கண்ணீர் விட்டு காணும் மொமெண்ட். அதைவிட சில மணி நேரத்துலே கோடிங்ல பண்ண தப்பு, டெவலப்ல பண்ண தப்பு எல்லாத்தையும் படிச்சு சரி பண்ணி நயனை நயந்து பார்க்க வச்சுருப்பார் சாப்ட்வேர் இஞ்சினியர் தனுஷ்.
Love மேட்டர்ல சிவில் இஞ்சினியர்ஸ் தான் பாவப்பட்டவங்களா இருக்கிறாங்க. ஆனா அவங்களை வேறலெவலுக்கு கொண்டு போனது தனுஷ் தான். விஐபி படத்துல தனுஷ் காட்டிய கம்பீரமும் ஊட்டிய கான்பிடண்டும் ரொம்பவே பெருசு. Gpay-la 1000 கேட்டாலே நம்பரை ப்ளாக் பண்ற நண்பர்கள் சூழ் உலகம் இது. ஆனால் ஒரு இஞ்சினியருக்குப் பிராப்ளம்னு சொன்னதும் மொத்த இஞ்சினியர்ஸும் வந்து நிப்பாங்க விஐபி-ல. நிச்சயமாக படம் பார்க்கும் போது லாஜிக் பார்க்கத் தோணல..பேரன்பை தான் பார்க்கத் தோணுச்சு.
சிவில் இஞ்சினியரும் லவ் பண்ணி சாதிக்க முடியும் என்ற உதாரணத்தை தமிழ் சினிமாவில் காட்டியவர்களில் முக்கியமானவர் சேரன். பாண்டவர் பூமி படத்துல, "இஞ்சினியர் என்பவன் வூடு கட்றவன் மட்டுமில்ல..அவனால ஒரு பொண்ணு மனசுல மாளிகையும் கட்ட முடியும்"னு காட்டியிருப்பார் சேரன்.
இப்பலாம் வீடு கட்ட ப்ளான் கொடுக்குற இஞ்சினியருக்கும் செங்கல்லை எடுத்துக் கொடுக்குற சித்தாளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லைன்னு பொண்ணுங்க முடிவு பண்ணிட்டதா ஒரு app ஆய்வு சொல்லிருக்கு. ஆனால் வெறும் இஞ்சினியரா இருந்தே பெரும் பில்டரா மாறி கோடிகளில் கொழிக்கும் சினிமா இஞ்சினியர்கள் இப்பவும் இருக்காங்க. உதா: நம்ம வி ஐ பி தனுஷ்!
ஒரே துறை பொறியாளர்கள் life-ல கூட வெவ்வேறு சூழல்கள் இருக்கும்னு பதிவு பண்ணதும் நம்ம சினிமா தான். கே.வி ஆனந்த் படத்துல வர்ற இஞ்சினியர் லைப்ல சில டார்க் ஏரியா உண்டு. உளவியல் ரீதியாக ஐடி பாய்ஸ் கேர்ள்ஸ் சந்திக்கும் நெருக்கடியை அவர் பதிவு பண்ணிருப்பார். சமீபத்தில் வந்த லிப்ட் படத்துல டார்கெட்-ஐ முடிச்சே ஆகணும் என்ற ப்ரசரை ஐடி பீல்ட் தர்றதா பதிவு பண்ணிருப்பாங்க.
ஆனால் ஒன்னு மட்டும் உண்மை! சினிமாவில் காட்டுற மாதிரியா Full enjoyment என்பதெல்லாம் சம்பளம் வந்த ஒன்வீக் மட்டும் தான் என்கிறார்கள் ஐடி இஞ்சினியர்ஸ்.
1970-களில் அரசு ரோடு போடவும் சிலபல கட்டடங்கள் கட்டவும் சிவில் இஞ்சினியர்ஸை பெருசா வளர்த்துச்சு. இப்ப இது மால், மாடர்ன் கட்டிடடம், உயரடுக்கு மாடி, வேறலெவல் டிசைனிங்கில் பில்டிங் என சிவில் துறை எங்கோ போய்ட்டு. அதேபோல் 90-களில் வேகமெடுக்கத் துவங்கிய ஐடி பீல்ட் உருவாக்கிய சமூக மாற்றம் நினைச்சே பார்க்க முடியாதது. இன்னைக்கு இணையம் மூலமா நாம ஈசியா செய்ற எல்லாத்தையும் ராப்பகலா யோசிச்சு உருவாக்குனது நம்ம ஐடி கய்ஸ் தான்.
அதேபோல் தான் மெக்கானிக்கல் இஞ்சினியர்ஸும்,. இன்னைக்கு வாகனங்களும் எந்திரங்களும் விதவிதமான தரத்துல இருக்குன்னா அதுக்குப் பின்னால் இருப்பவது இஞ்சினியர்ஸ் தான். அப்புறம் சினிமா படைப்பாளிகளுக்கு ஒரு தகவல்.. ஹீரோவை இஞ்சினியரா காட்டின படங்களில் 70% மேல் ஹிட்டு தான்!
ஹேப்பி இஞ்சினியர்ஸ் டே மக்கா...!
- எம்.ஜெகன் கவிராஜ்.
வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், கலகலப்பான மீம்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.
Follow us : https://bit.ly/3Plrlvr