நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் காமிகான் பயணத்தின் போது, ஆஸ்கார் விருது பெற்ற ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோரை சந்தித்துள்ளார். அப்போது, கமல்ஹாசன் இருவரின் 40 ஆண்டு கால நட்பை நினைவு கூர்ந்து, அவருடனான தொழில் பயணத்தை நினைவு கூர்ந்தார்.
வெஸ்ட்மோர் மற்றும் கமல்ஹாசன் இருவரும் 'இந்தியன்', 'அவ்வை சண்முகி' மற்றும் 'தசாவதாரம்' உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு பிடித்தமான ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோர்தான் என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். 'இந்தியன்-2' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வருகின்றன.