Tamanna timepass
சினிமா

Tamanna வின் இந்த செயல் பிடிக்காது - உடைத்து பேசும் காதலர் Vijay Varma ! | Lust Stories 2

அவர் மிகவும் ஜெனியூன், அவரது சினிமா நடிப்பை பார்த்து மட்டுமே அவரை சித்தரிக்க முடியாது. ஏனெனில்‌ நிஜ வாழ்க்கையில் அவர் மிகவும் அமைதியானவர்

சு.கலையரசி

தானும் விஜய் வர்மாவும் தற்போது டேட்டிங் செய்து வருவதாக தமன்னா கூறியிருந்தார். 17 வருடங்களாக சினிமா துறையில் பணியாற்றி வரும் தமன்னா தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் படத்தில் விஜய் வர்மாவுடன்  இணைந்து நடித்துள்ளார். இவர்களின் ஃபோட்டோஷீட் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பல கமென்ட்ஸ்களைப் பெற்றுள்ளது.

திரையுலகின் தற்போதைய ஹிட் ஜோடியே தமன்னாவும் விஜய் வர்மாவும் தான். அவர்களின் புகைப்படங்கள், பேட்டிகள், சமூக வலைத்தள போஸ்ட்கள் இவை அனைத்துமே இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

அண்மையில் விஜய் வர்மா செய்தியாளர்களுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் "ஒவ்வொரு தம்பதியினரிடமும், ஒவ்வொருவருக்கும் பிடிக்காத சில பழக்கவழக்கங்கள் இருக்கும் அதேப்போல எனக்கு தமன்னாவை பிடித்திருந்தாலும் அவரிடம் எனக்கு பிடிக்காத சில செயல்களும் உண்டு. தமன்னாவிடம் எனக்கு பிடிக்காதது அவரின்  வெறித்தனமான உடற்பயிற்சி. உடற்பயிற்சிக்காகவே பெரும்பாலும் நாளை செலவிடுகிறார்.

ஜிம்மிற்குச் செல்வதால் குறைந்த நேரமே  தூங்குவார். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நல்ல தூக்கம் வேண்டும் என்று நான் அவளிடம் சொல்கிறேன். ஆனால் அவள் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கிவிட்டு ஜிம்மிற்கு செல்வார்" என்று கூறினார் விஜய் வர்மா.

இதுபற்றி செய்தியாளர்களிடம் தமன்னா பேசுகையில் "நான் நிறைய சாப்பிடுவதால் எனக்கு உடற்பயிற்சி அவசியம். எனக்கு விஜயிடம் பிடிக்காதது என்று எதுவும் இல்லை. அவரை எரிச்சலடையச் செய்ய சில சேட்டைகள் செய்வேன். ஆனால் எதுவுமே வொர்க்கவுட் ஆகவில்லை. அவர் மிகவும் ஜெனியூன், அவரது சினிமா நடிப்பை பார்த்து மட்டுமே அவரை சித்தரிக்க முடியாது. ஏனெனில்‌ நிஜ வாழ்க்கையில் அவர் மிகவும் அமைதியானவர்" என்று தமன்னா கூறியுள்ளார்.