Manju Warrier
Manju Warrier Timepassonline
சினிமா

Manju Warrier : Inspiration அஜித் சார்தான் - புது BMW bike இல் கலக்கும் மஞ்சு வாரியர் !

ராதிகா நெடுஞ்செழியன்

தமிழ் திரையுலகத்துல தனுஷ் கூட அசுரன் படத்துல ஜோடி சேர்ந்து, நம்ம தல அஜித் கூட துணிவு படத்துல நடிச்சவங்க தான் மஞ்சு வாரியர். அவங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தாலே தெரியும் மஞ்சு வாரியருக்கு பைக் மேலே எவ்ளோ Crazeனு.. விதவிதமான  பைக் கூட எடுத்த புகைப்படங்கள பதிவிடுறதுல ரொம்பவே ஆர்வம் காட்டுவாங்க மஞ்சு.

அது மட்டும் இல்லாம தல அஜித் கூட பைக்லையே லடாக் போயிட்டு வந்த அப்புறம் மஞ்சு வாரியருக்கு பைக் மேல இருக்க craziness இன்னும் அதிகம் ஆயிடுச்சு . லடாக் பயணத்துக்கு அப்புறம் பைக்ல டிராவல் பண்ணணும்னு நிறைய பேட்டிகள்ல சொல்லியிருக்காங்க.

மஞ்சு வாரியர் இருசக்கர வாகனத்துக்கான ஓட்டுனர் உரிமம் அதாவது லைசென்ஸ் வாங்கிட்டாங்க !  மஞ்சு வாரியர் BMW WR 1250 GS பைக்கை வாங்கியிருக்காங்க‌. இந்த பைக்ல ஒக்கார்ந்தபடி விதவிதமான போஸ் குடுத்து Photos எடுத்து அவங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துல பதிவிட்டு இருக்காங்க மஞ்சு. இந்த போஸ்ட்ல நம்ம தல அஜித் குமாரையும் டேக் பண்ணி இருக்காங்க.. கூடவே இன்ஸ்பிரேஷன் அப்படினும் டேக் பண்ணியிருக்காங்க.. மஞ்சு வாரியர் பொருத்தவரைக்கும் பைக் ரைடிங்ல இன்ஸ்பிரேஷன் நம்ம தல அஜித் தான்.

மஞ்சு வாரியர் அவங்களுக்கு டிராவலிங் மேல இருக்க இன்ட்ரெஸ்ட்ட அடிக்கடி பகிர்ந்துப்பாங்க.. இன்ஸ்டாகிராம் பக்கத்துல அவங்களுடைய பைக் ரைடிங் photosல இருக்க கேப்ஷன் அவங்களுக்கு பைக் மேல இருக்க அதீத ஆர்வத்த காட்டிடும் ‌...  "இவ்வளவு பெரிய உலகம் ஆனா எவ்வளவு கம்மி நேரம்" அப்படின்னு மஞ்சு போட்டு இருந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் பைக் ரைடிங்னா மஞ்சு வாரியருக்கு எவ்வளவு பிடிக்கும்னு காட்டுதுல..

மஞ்சு வாரியர்கிட்ட பைக் தவிர மினி கூப்பர் மற்றும் ரேஞ்ச் ரோவர் கார்களும் இருக்கு. இப்போ இந்த லிஸ்ட்ல தான் BMW WR 1250 GS பைக்கை இணைச்சிருக்காங்க மஞ்சு...

"கைய பிடிக்க, கட்டி அணைக்க எனக்கென ஒரு பைக்கே போதும் ‌... நேரம் மறக்க தூரம் கடக்க என்னோட பைக்கே போதும்.." இந்த லைன் மஞ்சு வாரியருக்கு கரெக்டா இருக்கும்ல !!