Trisha
Trisha timepass
சினிமா

Ponniyin Selvan : Trisha, Jayam Ravi இன் Twitter Bluetick நீக்கம் - சோழ வம்சத்திற்கு நேர்ந்த சோகம் !

டைம்பாஸ் அட்மின்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது ஆரம்பமாகி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள் முக்கிய நகரங்கள் படக்குழு முகாமிட்டு, புரமோஷன் பணிகளைச் செய்யவுள்ளது. இதுதவிர சமூக வலைதளங்களிலும் படக்குழுவினர் வித்தியாசமாக முறையில் புரமோஷன் செய்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான சமயத்தில் நடிகை திரிஷா டிவிட்டரில் தனது பெயரை குந்தவை என மாற்றினார். அதேபோல் வந்தியத்தேவன் என கார்த்தியும், அருண்மொழிவர்மன் என ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலன் என விக்ரமும் பெயரை மாற்றி இருந்தனர். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளதால், அதனை புரமோட் செய்யும் விதமாக தற்போது நடிகை திரிஷா டுவிட்டரில் தனது பெயரை 'குந்தவை' என மாற்றி இருக்கிறார். பெயரை மாற்றியதும் அவரது ப்ளூ டிக் பறிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷாக் ஆன நடிகை திரிஷா மீண்டும் தனது பெயரை ஏற்கனவே இருந்தபடியே திரிஷா என மாற்றி இருக்கிறார். அப்படி இருந்தும் அவருக்கு ப்ளூ டிக் மீண்டும் வழங்கப்படவில்லை.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ப்ரோமோஷனுக்காக நடிகை த்ரிஷாவும் ஜெயம் ரவியும் தங்ளது டுவிட்டர் ஹேண்டில்களை குந்தவை, அருண்மொழி வர்மன் என மற்றியிருக்கிறார்கள் டிவிட்டர் புதிய விதிப்படி பெயரை மாற்றினால் ப்ளூ டிக் மறைந்து விடும். அதனால் த்ரிஷாவும் ஜெயம் ரவி இருவரின் ப்ளூ டிக்கையும் நீக்கியிருக்கிறது டுவிட்டர் நிர்வாகம்.