Rudhran
Rudhran டைம்பாஸ்

Rudhran : பால்குடம், பாலபிஷேகம், பறவை காவடி - செஞ்சியைக் கலக்கிய Raghava Lawrence ரசிகர்கள் !

இரண்டு ரசிகர்கள், முதுகில் கொக்கியடித்து கிரேனில் தொங்கியபடி தியேட்டர் வரை 1.5 கி.மீ தூரத்திற்கும் மேலாக வந்து, ராகவா லாரன்ஸ் பேனருக்கு பாலபிஷேகம் செய்துள்ளனர்.
Published on

"உங்களையே நம்பி இப்படியெல்லாம் பண்ணுறாங்களே மக்கள், அவங்களுக்காக என்ன செய்ய போறீங்க" - தட் விவேக் மொமென்ட்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள தியேட்டரில் நேற்று முன்தினம் 'ருத்ரன்' திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெற்றிபெற வேண்டி, விழுப்புரம் மாவட்ட ராகவா லாரன்ஸ் நற்பணிமன்றம் சார்பாக, செஞ்சி அருகே உள்ள அம்மன் சன்னதியில் இருந்து பெண்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்றனர். அதில், இரண்டு ரசிகர்கள், முதுகில் கொக்கியடித்து கிரேனில் தொங்கியபடி தியேட்டர் வரை 1.5 கி.மீ தூரத்திற்கும் மேலாக வந்து, ராகவா லாரன்ஸ் பேனருக்கு பாலபிஷேகம் செய்துள்ளனர்.

அப்போது, ராகவா லாரன்ஸ் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, செஞ்சி மார்கமாக சென்னைக்கு திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, செஞ்சி நான்குமுனை சந்திப்பு அருகே ரசிகர்கள் காத்திருக்க, அவ்வழியாக வந்த லாரன்ஸ், காரின் சன் ரூப்ஃபை ஓப்பன் செய்துவிட்டு வெளியே வந்து, ரசிகர்களுக்கு கை அசைத்து இருக்கிறார். ரசிகர்களோ அவருக்கு மாலை மரியாதை செய்திருக்கிறார்கள். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

- அ.கண்ணதாசன்.

Rudhran
Serialகளுக்கு ஏன் சினிமா பெயர்கள் வைக்கிறாங்க? - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 8
Timepass Online
timepassonline.vikatan.com