2022ல சமந்தா தனக்கு ஆட்டோ இம்யூன் நோயான மயோசிடிஸ் இருக்கிறதா தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல அறிவிச்சிருந்தாங்க.
அந்த பதிவுல கேப்ஷன்னா, "நிவாரணத்திற்குச் சென்ற பிறகு இதைப் பகிரலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இதற்கான சிகிச்சையானது நேரம் எடுக்கும். நாம் எப்போதும் வலுவாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நான் மெதுவாக உணர்கிறேன்.
இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்வது எனக்கு சிரமமாக உள்ளது. நான் விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் இருந்திருக்கின்றன. அது போல் உணர்ந்தாலும் கூட, இதை இன்னும் ஒரு நாளும் கையாள முடியாது என்பதுபோல உணர்கிறேன், எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது" அப்டின்னு போட்டிருந்தாங்க.
இந்த நோய்க்காக சமந்தா சினிமாலருந்து ஒரு வருடம் பிரேக் எடுத்து அமெரிக்கால சிகிச்சை எடுக்கப்போறதா செய்திகள் வெளியாச்சு. ஆனா சமீபத்துல வெளியான செய்தில சமந்தா, விஜய் தேவரகொண்டா கூட நடிச்சிருக்க குஷி திரைப்படத்துல சமந்தாவுடைய காட்சிகள் முடிஞ்ச பிறகு ஆறு மாத காலம் இடைவேளை எடுக்குறதா சொல்லியிருக்காங்க.
இந்த தற்காலிக ப்ரேக்னால எந்த ஒரு புது ப்ராஜெக்ட்டும் சமந்தா கையில எடுக்கலயாம் இப்போதைக்கு.