எலும்புல ஏற்பட்டுற ஒரு வித கேன்சரால பாதிக்கப்பட்டிருக்காங்க 9 வயது சாக்ஷி. இந்த சாக்ஷி பெங்களூர் சாமராஜ்பேட்ல இருக்க ஶ்ரீ சங்கரா கேன்சர் ஹாஸ்பிடல்ல சிகிச்சை எடுத்துட்டிருக்காங்க. 9 வயது ஆகுர சாக்ஷி இப்போ மூன்றாம் வகுப்பு படிக்குறாங்க. சாக்ஷியோட அப்பா மகிந்தர் ஒரு தச்சர். அம்மா சுரேகா ராணி ஒரு இல்லத்தரசி. சாக்ஷியோட சிகிச்சை காலங்கள்ல இவங்க ரெண்டுபேருதான் உதவியா இருக்காங்க.
கன்னட திரையுலகுல முன்னனியில இருக்குறவருதான் கிச்சா சுதீப். இவரு திரைப்படங்கள்ல கடந்து சமூக சேவைகள்லயும் ஈடுபடுவாரு. சாக்ஷிக்கு கிச்சா சுதீப்னா ரொம்பவே பிடிக்கும். அவர பாக்கணும்னு சாக்ஷிக்கு ஆசை. இந்த ஆசையதான் கிச்சா சுதீப் நிறைவேற்றியிருக்காரு. அந்த வகையில இவரோட ரசிகையான சாக்ஷிய ஹாஸ்பிடல்ல சந்திச்சிருக்காரு சுதீப்.
சிகிச்சை எடுத்துட்டு இருக்க மருத்துவமனைல சுதீப்ப பாக்கணும்ன்ற தன்னோட ஆசைய சொல்லியிருக்காங்க சாக்ஷி. ஒரு வழியா முயற்சி பண்ணி சாக்ஷியும் சுதீப்பும் மீட் பண்ணிட்டாங்க. சுதீப் சாக்ஷிகிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு கூடவே ஆட்டோகிராப்பும் போட்டு குடுத்திருக்காரு. சுதீப் சாக்ஷிகிட்ட பேசும்போது சாக்ஷி ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.
சுதீப்ப சந்திச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருந்ததா சாக்ஷி சொல்லியிருக்காங்க. ராணா திரைப்படத்துல வர தித்திளி பாடல் சிகிச்சை காலங்கள்ல அவங்கள ஊக்கப்படுத்துனதாவும் சொல்லியிருக்காங்க. ரசிகர் கூட்டத்த சந்திக்கிறதுக்கே டைம் ஒதுக்காத சில நடிகர்கள் மத்தியில ஒரே ஒரு ரசிகை அதுவும் கேன்சரால பாதிக்கப்பட்ட ரசிகைய பாக்க நேர்லயே வந்து நேரத்த செலவு பண்ணியிருக்காரு சுதீப்.. அந்த மனசு தான் சார் கடவுள் !!