shah rukh khan timepassonline
சினிமா

Jawan வெற்றியை வித்தியாசமாகக் கொண்டாடிய Shah Rukh Khan

நடனமாடியதற்காக குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, புதிய கோரிக்கையையும் முன்வைத்தார் King Khan!

ஜவான் வெற்றியைத் தொடர்ந்து, தனது பிஸியான நேரத்தை இணையத்தில் ரசிகர்களுக்காக ஒதுக்கி அவர்களின் கேள்விகள், வாழ்த்துக்கள் மற்றும் உரையாடலில் கலந்துகொண்டார் பாலிவுட் பாஷா ஷாருக் கான்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு ரசிகர், ஷாருக் கானுடனான சாட்டிங்கில், பள்ளிக் குழந்தைகள் அவரின் `ஜோமே ஜோ பதான்' பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பகிர்ந்து 'கேந்திரியா வித்யாலயா வசந்த் குஞ்ச் மாணவர்கள் தனது ‘ஃப்ன் டே’ வை கொண்டாடுகிறார்கள்' என்ற தலைப்புடன் பகிர்ந்திருக்கிறார். இந்த அழகான வீடியோவிற்கு பதிலளித்த ஷாருக்கான், தனது பாடலுக்கு நடனமாடியதற்காக குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, புதிய கோரிக்கையையும் முன்வைத்தார்.

ஆம், 'ஜவான் பாடலான ஜிந்தா பந்தாவுக்கும் நடனமாடுங்கள்' என்று அன்போடு அவர்களைக் கேட்டுக் கொண்டார். ஷாருக்கானின் பதிலில், "ரொம்ப நன்றி குட்டிகளே! ஜூம் ஜோ பத்தானுக்கு நடனமாடியதில் உங்களுக்கு ஒரு ’ஃபன் டே’ கிடைத்ததில் மகிழ்ச்சி! இப்போது ஜிந்தா பந்தாவிற்கு நடனமாடுங்கள். பேரன்பின் நன்றிகள்!'' என்று சொல்லியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, மற்றொரு ரசிகர் தனது படத்தை வெளியிட்டு, ஜவான் திரைப்படத்தை தான் பார்த்தவிதத்தை எழுதியுள்ளார். "வழக்கம் போல் தனியாகப் பார்த்தேன். எனக்குப் பக்கத்தில் இருந்தவர் கேட்டார், 'உங்களுக்கு இந்தியப் படங்கள் பிடிக்குமா அல்லது ஷாருக்கான் மட்டும்தானா?' இதற்குப் பதில் அனைவருக்குமே தெரியும். 'எப்போதுமே, ஷாருக் கான் தான்!' என்று சொன்னேன் என்கிறார்.

அவருக்குப் பதிலளித்த SRK, "மிக்க நன்றி... என் படங்களையும் தனியாக ரசிக்க முடியும் என்று எனக்குச் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் நான் திரையில் இருக்கும்போது, உங்கள் இதயங்கல் இருக்கிறேன். அதனால் நான் எப்போதும் உங்களுடன் தானே இருக்கிறேன். அப்படித்தான் நான் என்றும்முங்கள் மனதில் இருக்க விரும்புகிறேன்!” என்று சொல்லி அந்த ரசிகரை நெகிழ வைத்தார்.

இதற்கிடையே ஜவான் வெற்றியைக் கொண்டாடும்விதமாக தன் 'மன்னத்' வீட்டின் முன்புறம் உள்ள திறந்தவெளி பால்கனியில் நின்று தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். விதவிதமாக ரசிகர்களுக்கு போஸ் கொடுத்து நன்றி சொன்னவர், தன் உதவியாளர்கள் மூலம் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

- சையத் சஜானா. பா