Love  Love
சினிமா

Love : 'சிவாஜி, திருடா திருடி,..' - மோதலாகி காதலில் முடிந்த தமிழ் சினிமாக்கள் !

தான் வாசிக்கிற ’நாதஸ் இல்லாம டான்ஸ் மூவ்மெண்ட் இல்ல’ ன்னு சிம்மக்குரலோனும், ’என்ன மாதிரி டான்ஸர்ஸ் போடுற ஸ்டெப்ஸுக்காக கண்டுப்புடிச்ச இன்ஸ்யூமெண்ட்தான் நாதஸ்வரம்னும் ரெண்டு பேருக்கும் ஃபைட்டாகிடுது.

டைம்பாஸ் அட்மின்

தமிழ் சினிமாவுல ஹீரோ – ஹீரோயின் ஆரம்பத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் காண்டு ஏத்தி கலாய்ச்சிக்கிறாங்கன்னா அவங்களுக்குள்ள லவ்வு ஸ்டார்ட் ஆகிருச்சின்னுதான் அர்த்தம். ஆனா என்னாகுமோ ஏதாகுமோ, சேருவாங்களா, மாட்டாங்களா..?ன்னு எண்டு கார்டு போடுறவரைக்கும் நம்மள சீட்டு நுனியில உட்காரவெச்சி சீடை சாப்பிடுற அளவுக்கு ’பெப்பு ஏத்திகிடே இருப்பாங்க நாமளும் சினிமாதானேன்னு சீரியஸாகாம பெஞ்சி சீட்டைப் பிச்சு பஞ்சை பறக்க விட்டிருப்போம். அப்படி சில படங்களைப் பார்த்துடுவோம்.

1 . ’தில்லானா மோகனாம்பாள்’ னு சிவாஜி – பத்மினி நடிச்ச படம். சிவாஜி நாதஸ்ஸாவும், பத்மினி டான்ஸராவும் நடிச்ச படம். ரெண்டு பேருக்கும் அடிக்கடி முட்டிக்கும். வாய்க்கா வரப்பு தகராறு எல்லாம் இல்ல. தான் வாசிக்கிற ’நாதஸ் இல்லாம டான்ஸ் மூவ்மெண்ட் இல்ல’ ன்னு சிம்மக்குரலோனும், ’என்ன மாதிரி டான்ஸர்ஸ் போடுற ஸ்டெப்ஸுக்காக கண்டுப்புடிச்ச இன்ஸ்யூமெண்ட்தான் நாதஸ்வரம்னும் ரெண்டு பேருக்கும் ஃபைட்டாகிடுது. அப்றம் சிவாஜிக்கும் –பத்மினிக்கும் பால் கசந்து, படுக்கை நொந்துடுது.

ஒன்பதாவது ரீலுக்கு அப்புறம் இந்தியாவே வேணானுட்டு சிவாஜி மலேசியா போக முடிவெடுக்க… அவர் மேல பத்மினிக்கு நீரு பூத்த நெருப்பு மாதிரி இருந்த காதல், ’நீ.. தில்லானா வாசி, அதுக்கு நான் ஆடுறேன். யாரு ஜெயிக்கிறாங்கன்னு ஒரு கை பாத்துக்கலாம்’ னு பத்மினி, சிவாஜிக்கு ஸ்போர்ட்ஸ் டார்கெட் பிக்ஸ் பண்ணித் தடுக்க… சிவாஜி கைல சிவப்பு சாயம் கசியக் கசிய நாதஸ் வாசிக்க, தமிழ்தாய்கள் அத்தனை பேருக்கும் கண்ணீர் கசியவிட்டப் படம். அப்றம் ஒரு வழியா 19 வது ரீல்ல ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துருவாங்க.

2. எம்.ஜி.ஆர் ஹீரோ, சரோஜாதேவி ஹீரோயின், படம் ’அன்பேவா’. சிங்கத்தோட குகையில மாட்டுன மான் மாதிரி எம்.ஜி.ஆரோட கெஸ்ட் ஹவிஸுக்குள்ளயே.. அவர்தான் பில்டிங் ஓனர்னு தெரியாம அங்கயே போயி தங்குவாரு சரோ. எம்.ஜி.ஆரும் தன்னோட பெயரை மாத்தி ஹவுஸ்ல தங்குவாரு. அப்றம்.. ரெண்டு பேரும் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் காய் விட்டுகிட்டு பங்காளி சண்டைக்காரங்க மாதிரி முகத்தைத் திருப்பிக்குவாங்க. ’இந்த வீட்டை விட்டே உன்னை விரட்டி அடிக்கிறேன்’ னு புரட்சித்தலைவர்கிட்ட சவால் விடுற சரோ. அவரை விரட்ட அடியாட்கள் வரைக்கும் செட் பண்ணுவாங்க.

ஹீரோ அடிவாங்குவாரா என்ன…? அடியாட்களை துவம்சம் பண்றார். அப்றம் கொஞ்சம் கொஞ்சமா ச,தேவிக்கு காதல் துளிர்விட ’லவ் பேர்ர்ட்ஸ்’ பாட்டும், காதல் இன்னும் கொஞ்சம் டீப்பானதும் ’ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ னும் டூயட்ல முடியும். கிட்டத்தட்ட எம்.ஜி.ஆருக்கு 60 வயசுக்கு மேலய்ம், சரோஜாதேவி 40 வயசுக்கு மேலயும் நடந்துட்டு இருக்கிற காலத்துல காதல் அரும்பின படம் ’அன்பே வா’.

3. ’திருடா திருடி’ ன்னு தனுஷும், சாயாசிங்கும் நடிச்ச படம். படம் பேரை மறந்தவங்களுக்கு ‘மன்மத ராசா.. மன்மத ராசா’ பாட்டை சொன்னா புரியும். அதுல ரெண்டு பேரும் பீப்.. சுவுண்டு போடுற அளவுக்குத் திட்டிக்குவாங்க. ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் பாத்துக்கிறதே கேவலமா நினைக்கிற அளவுக்கு காண்டும், கடுப்புமா இருப்பாங்க. தனுஷ் பிரெண்டுகளோட சாயாசிங்கை கலாய்க்கிறதும், பதிலுக்கு சாயாசிங்க தனுஷை போன் போட்டு டோஸ் விடுறதுன்னும், பாதி படம் வரைக்கும் ரகளையாப் போகும்.

இப்டி மோதல்ல ஆரம்பிச்ச இவங்க அறிமுகம், பின்னாடி கிளைமாக்ஸ்ல பத்து ரவுடிப் பசங்ககிட்ட சாயாசிங்க பீச்சுல தனியா மாட்டிக்க, ஹீரோவான தனுஷ் அந்த ரவுடிங்ககிட்டேர்ந்து ஹீரோயினியை காப்பாத்தி, சந்தோஷமா படம் முடியும். என்னதான் கெட்ட கெட்ட வார்த்தைல திட்டிகிட்டாலும் காதல்ல அதெல்லாம் கவிதையாயிடுது.

4 . இயக்குனர் ஷங்கர் இயக்கிய படம் சிவாஜி. இந்தப் படத்துல ரஜினிதான் ஹீரோ– ஸ்ரேயாதான் ஹீரோயின். அமெரிக்கா ரிட்டனான ரஜினிக்கு இந்தியப் பெண்தான் வேணும்னு ஷு போட்ட ஒத்தக் காலோடு நிப்பாரு. அப்பதான் பூஜை கூடையோட கண்ணுல படுவாங்க படத்து ஹீரோயின் ஸ்ரேயா. பாத்ததும் சூப்பர் ஸ்டார் ஃபாலோ ஸ்டாராகி லோ.. லோன்னு ஸ்ரேயா பின்னாடியே சுத்துவாரு. ஸ்ரேயாவும் பின்னாடி சுத்துறது ரஜினியா இருந்தாலும் கதைப்படி வெறுப்பக் காட்டிக் காட்டி விலகிப் போய்ட்டே இருப்பாரு.

ரஜினியும் விடாம வாண்டடா வண்டியில ஏறி ஸ்ரேயா வீட்டுக்கு விருந்துக்குப் போறது, விருந்துல காரமான மிளகாய கிரில் சிக்கன் மாதிரி தின்னுட்டு… காரம் நாக்குல ஏறி கண்ணு வழியா கண்ணீர் விடுறதுன்னு அமர்க்களம் பண்ணிருப்பாரு. மனசு இரக்கம் காட்டி லவ்வுக்கு ஓகே சொல்லுவாங்க ஸ்ரேயா. அப்றம் என்ன ஒரு பக்கம் கடமை இன்னொரு பக்கம் கல்யாணம்னு ரெண்டுலயும் ஜெயிப்பாரு ரஜினி.

5. விஜயகாந்த் நாயாகனாகவும், ராதா நாயகியாகவும் நடிச்ச படம் ’அம்மன் கோவில் கிழக்காலே’ விஜயகாந்த் அவர் பாட்டுக்கு மரத்தடியிலயும், குளத்து மேட்டுலயும் ஆர்மோனியப் பொட்டிய அமுக்கிப் பாட்டுப்பாடிகிட்டு இருந்தவரை பணக்காரத் திமிரைக் காட்டி விஜயகாந்தை உண்டு இல்லைனு பண்ணிருவாரு ராதா. ஆர்மோனியப் பெட்டிய காரேத்தி கொல்ற (உடைக்கிற) அளவுக்கு துணிஞ்சிருவாரு. இதுக்குப் பழி வாங்க தன் காமெடி ஜமாவோட புரட்சிக் கலைஞர் திட்டம்போட்டு ராதாவை கலாய்க்கிறது, அவமானப்படுத்தி அசிங்கப்படுத்துறதுன்னு ஆள் மாத்தி ஆள் சண்டைக் கோழிங்க மாதிரி முறைச்சிகிட்டு இருப்பாங்க.

ஒரு தபா பழிவாங்கறதோட உச்சமா விஜயகாந்தை காதல் பண்ற மாதிரி லவ்வு டயலாக்கெல்லாம் பேசி. ’உம் முன்னு சொல்லு உசுர விடுறேன். ’சரின்னு சொல்லு செத்துப்போறேன்’கிற ரேஞ்சுக்கு டயலாக்கெல்லாம் விட்ட ராதா. பொண்ணு கேட்டுப் போன விஜயகாந்தை புண் படுத்தி அனுப்புவாங்க. கிளைமாக்ஸ் நெருங்க.. நெருங்க… விஜயகாந்த் நல்லவரு.. வல்லவரு… கலங்கமில்லாத கருப்பு தங்கம்கிற மாதிரி ப்யூர் லவ்வை பொழிவாங்க ராதா. அப்றம் என்ன சுபம் டைட்டில்தான்.

- எம்.ஜி.கன்னியப்பன்.