நடிகர்கள்  timepass
சினிமா

பெண் வேடமிட்டு ‘சொதப்பிய’ நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

ரஜினி பெண் வேடத்துல நடிச்சிருக்காரான்னு பிலிம் பொட்டியைக் கலைச்சுப் பாத்ததுல. ’பணக்காரன்’ங்கிற படத்துல ’நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ன்கிற பாட்டுல

டைம்பாஸ் அட்மின்

சினிமாவுல மட்டும்தான் மீசையோடவே ஆண் நடிகர்கள் பெண் கெட்டப்புல வர்ற கொடுமையெல்லாம் நடக்கும். என்னதான் பெண் வேஷமிட்டு வந்தாலும் நமக்கு குபுக்குன்னு சிரிப்பு வராம இருந்ததில்ல. அதிலும் குறிப்பிட்ட சில நடிகர்கள் லேடி கெட்டப்புல கனவுல பாத்தாக்கூட கத்திக் கதர்ற அளவுக்கு கொடூரத்தோட உச்சத்துல இருப்பாங்க. அவ்ளோ பூச்சாண்டித்தனமா இருந்தாலும் லேடி கெட்டப்புல இருக்கிற அவங்க போட்டோவு நம்ம ஆளுங்க பால், பாயாசம், பஞ்சாமிர்தம், எல்லாம் ஊத்தி கொண்டாடி குதூகலிப்பாங்க. அப்படி பெண் வேஷம் போட்ட சில நடிகர்களைத்தான் இப்போ பாக்கப் போறோம்.

1 . நடிகர் சரத்குமார் முகத்தை எல்லாம் பெண்ணா நெனைச்சுப் பாருங்க செம டெரரா இருக்குள்ள. எல்லா நடிகர்களுக்குமே இயக்குனர் மணிரத்னத்தோட ஒரு படத்துலயாச்சும்னு நடிக்க ஆசைப்படுற மாதிரி. ஒரு ஃபிலிம்லயாச்சும் லேடி கெட்டப் போடணும்னு ஆசை இருக்குமோ என்னவோ. அதைவிட பெண் ரசிகைங்க மனசுல இடம் பிடிக்கிறதுக்காகவும் நடிக்க பிரியப்பட்டிருக்கலாம்.

அப்படி சரத்குமார் ’கட்டபொம்மன்’ படத்துல லேடி கெட்டப்புல கர்லாக் கட்டை மாதிரியே திடகாத்திரமா இருப்பார். என்னதான் ஒரு ஆண் பெண்ணைப்போல நளினம் காட்டினாலும் பொருந்துறது இல்ல. அதுவும் சரத்குமாருக்கு சுத்தமா செட்டாகலை. அதுக்கப்புறம் ’காஞ்சனா’ படத்துல திருநங்கையா புடவை கட்டிகிட்டு நடிச்சிருப்பாரு. அது ஓரளவுக்கு செட்டாகிருக்கும். அதுக்கப்புறம் அவரே ஆசைப்பட்டாலும் கொடுக்கிறதுக்குத்தான் எந்த இயக்குனரும் தயாரா இல்லை.

2 . பிரசாந்த் ’ஆணழகன்’ படத்துல அழகா, அம்சமா பட்டுப்புடவை கட்டிக்கிட்டு தலை நிறைய பூச்சரம் தொங்கவிட்டு, லேடி கெட்டப் போட்டாலும் அவரோட ஹய்ட்டுக்கும், பாடி ஸ்டெச்சருக்கும் சஜாண்டிக்கா இருக்கிறதைப் பாத்த தமிழ் ரசீகச் சமூகம் அடேங்கப்பா இவ்ளோ பெரிய பொண்ணான்னு விரல் மேல வாயைக் கொண்டுபோய் வைக்கிற அளவுக்கு ஆச்சர்யப்படாங்க.

நளினம், நெழிவு சுழிவு ஓரளவுக்கு ஒத்துப்போனாலும் மெகா சைஸ் லேடியா இருந்ததால யாருக்கும் பெருசா ஈர்க்கலை. அதுக்கப்புறம் பெண் கெட்டப்புல எந்த படத்துலயும் வந்ததா நினைவுல இல்ல. பெண் கெட்டப் வர்றது இருக்கட்டும். முதல்ல படம் வந்தாதான கெட்டப்ப பத்திப் யோசிக்கிறதுக்கு.

3 . ரஜினி எதாச்சும் படத்துல பொம்பளை கெட்டப்புல நடிச்சிருக்காறான்னு பிலிம் பொட்டியைக் கலைச்சுப் பாத்ததுல. ’பணக்காரன்’ ங்கிற படத்துல ’நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ ன்கிற பாட்டுல பல கெட்டப் போட்டு வந்து ஆடுற ரஜினி ஒரு இடத்துல லேடி கெட்டப்புலயும் மீசையோட வந்து சின்ன டான்ஸ் மூவ்மெண்டு போட்டுட்டுப் போவார். சும்மா காமெடிக்காக பெண் வேஷத்துல வந்தாலும் அதையும் விசிலடிச்சு அவரோட ரசிகருங்க கொண்டாடி ஏத்துக்கிட்டாங்க.

அதுக்கப்புறம் சொல்றபடி வேற படங்கள்ல லேடி கெட்டப் போடலைன்னுதான் சொல்லணும். அந்த ஒரு போட்டோதான் இன்னைக்கு வரைக்கும் ரசிகருங்க மனசுல ’பச்சக்’ னு ஒட்டிக்கிச்சு. சமீபத்திய ரஜினி அறிக்கைனால மனசுலயும் ரஜினி போட்டோவை வெச்சிகிறதா வேணாமான்னு ரசிகருங்க குழப்பத்துல இருக்காங்க.

4 . இவங்க எல்லாத்தையும்விட சத்யராஜ் போட்ட லேடி கெட்டப்தான் சினிமாவுக்கு வந்த மிகப்பெரிய சோதனை. அந்த பரிட்சாத்த முயற்சியை’ மாமன் மகள்’ ங்கிற படத்துல பண்ணிருப்பார். ஆள் இருக்கிற உயரத்துக்கும். அகலமான உடம்புக்கும் பெரிய பட்ஜெட்ல போட்ட செட்டு மாதிரியே இருப்பார். சீரியஸா பேசுற டயலாக் கூட சிரிக்க வேண்டியதா இருக்கும். அதுக்கப்புறம் ’சந்திரமுகி’ கெட்டபுல காமெடி சீன்ல நடிச்சிருப்பாரு. அது கதாபாத்திரமே காமெடிங்கிறதால பிரச்சனை இல்ல.

அதிலயும் ரா..ரா பாட்டுக்கு காலை, கையை ஆட்டிகிட்டு ஒரு டான்ஸ் ஆடுவாரு பாருங்க. உண்மையான பரத நாட்டியக் கலைஞர்கள் பாத்தாங்கன்னா குளிர் ஜுரம் வந்து குப்புறப் படுத்திருப்பாங்க. அந்த அளவுக்கு மூவ்மெண்ட் கொடுத்து மூச்சடைக்க வெச்சிருப்பார்.

5 . அடுத்ததா ’சியான்’ விக்ரம். ’கந்தசாமி’ ங்கிற படத்துல பெண் வேஷத்துல வந்து சில ஆட்களை அடிச்சி பந்தாடுற சீன். எந்த கெட்டப் போட்டாலும் அதுக்கு தகுந்த மாதிரி உடம்பை மாத்திக்கிற விக்ரம். அந்த படத்துலயும் ஓரளவுக்கு ஒர்க்கவுட் பண்ணி ஸ்லிம்மாகி நடிச்சிருப்பார்.

என்னதான் லேடி கெட்டபுக்குப் பொருத்தமா இருந்தாலும் ’இது நம்ம சியான் விக்ரமுடா’ன்னு ரசிகர்கள் கண்டுப்புடிச்சி கமெண்ட் பண்ற அளவுக்குத்தான் இருக்கும். ஆனாலும், பாராட்டாம இருக்க முடியாது. ’எல்லா கெட்டப்பும் போட்டுப் பார்த்த நாம லேடி கெட்டப்பையும் போட்டுப் பாத்துட்டோம்’னு சியானுக்கு கூட கொஞ்சம் திருப்தியாதான் இருந்திருக்கும்.

6 . கமலைப் பத்தி சொல்லவே வேணாம். கெட்டப் போடறதுக்குன்னே வரம் வாங்கிட்டு வந்தவர். ’அவ்வை சண்முகி’, ’தசவதாரம்’, இன்னும் சில படங்கள்ல சின்னச் சின்னதா லேடி கெட்டப் போட்டிருப்பார். ’அவ்வை சண்முகி’, ’தசவதாரம்’னு ரெண்டு படங்கள்லயும் வயசான லேடி கெட்டப்புங்கிறதால எப்படி வெட்டி ஒட்டி, பட்டிப் பாத்தாலும் பெண்ணுக்கான முகம் வரலைன்னுதான் சொல்லணும்.

ஆனாலும், இன்னும் பல படங்கள்ல லேடி கெட்டப்புல நடிக்க வாய்ப்பு வந்தாலும் மனுஷம் புடவையோடவும், பெண்ணுக்கான மிமிக்ரி குரல்லோடவும் கிளம்பிடுவாரு.

7 . விவேக், யோகிபாபு, சூரின்னு எத்தனை நடிகர்கள் என்னென்ன விதத்துல லேடி கெட்டப் போட்டாலும், தல வடிவேலுவோட லேடி கெட்டப்புக்கு முன்னாடி யாரும் கிட்டையே வர முடியாது கரு கருன்னு அப்படி ஒரு அழகு.. ஒவ்வொரு பெர்பாமென்ஸையும் பாத்துகிட்டே இருக்கலாம். அதுலயும் ’பாட்டாளி’ படத்துல வயசுப்பொண்ணு கெட்டப்புல, தோள்ல மஞ்சப்பையோட வந்து பண்ற அலப்பறைய சொல்ல வேண்டியதில்லை.

வார்த்தைக்கு வார்த்தை குபீர் சிரிப்பை வரவெச்சுடும். சில படங்கள்லதான் லேடி கொட்டப்போட்டு நடிச்சிருந்தாலும் அத்தனையும் பிரமாதமா இருக்கும். இன்னைக்கு கூட பெண் வேஷம் போட்டாலும் வயசான பாட்டி மாதிரி அவ்ளோ பொருத்தமா இருப்பாரு நம்ம வைகைப்புயல்.

- எம்.ஜி.கன்னியப்பன்.