தமிழ் சினிமாவில் அழுகாச்சி நடிகர்கள்

ஆக்ஷன்னு குரல் கொடுத்தா எம்ஜிஆர் முகத்த கையால பொத்திட்டு, மூலைக்கு போயி முட்டுக்கொடுப்பாரு. உடம்பு மட்டும் குலுங்கும். சீனோட ஆரம்பம் பார்க்காதவன் உள்ள வந்தா, ’சிரிச்சிகிட்டு இருக்கார்’னு நெனைப்பாங்க.
தமிழ் சினிமா
தமிழ் சினிமாடைம்பாஸ்

1 . இந்த காலம் மட்டுமில்ல எந்த காலத்துக்கும் அழுகாச்சிக்கு ஒரு ஆள் இருக்கார்னா அது சிவாஜிதான். மனுஷன் பிழியப் பிழிய அழுவாரு. அதுலயும் கண்ணீர் வடிச்சாருனா கண்ணாடி கோப்பைல பிடிச்சி வெக்கிற அளவுக்கு ஃபீலி்ங் திலகமா மாறிடுவாரு.. உதாரணத்துக்கு ஒரு படம், ம்கூம்.. நூத்துக்கு எண்பது சதவிகிதம் படங்கள்ல கண்ணீரும் கம்பளையுமாத்தான் இருப்பாரு.

அதுலயும் ’திரிசூலம்’ படத்துல தன் முதுகுல தானே சவுக்குல அடிச்சிகிட்டு… ’உன்னைப் பிரிஞ்ச வேதனைய டைரியில எதுதலம்மா ஏ முதுகுல எழுதிருக்கேன்’ னு முதுகை ரூல்டு நோட்டு மாதிரி வரி வரியா பிரிச்சி மேஞ்சிருப்பாரு. அதெல்லாம் அழுது… அழுது மூக்கை சிந்துன காலம்.

2 . அதுலயும் இவர் இருக்காரு பாருங்க. விஜயகுமாரின்னு ஒரு நடிகை. அழறதுன்னா அல்வாவை அஸ்கா சர்க்கரை தொட்டு சாப்புடுற மாதிரி. ஒரு நாள் முழுக்க அழ சொன்னாக்கூட அழுதுட்டு பேமெண்ட் பற்றி கவலைப்படாம போயிட்டே இருப்பாங்க.

தமிழ் சினிமா
போலீஸ் சினிமா செய்வது எப்படி?

இவரை கல்யாண வீட்டுல பார்த்தா கூட கொஞ்ச நேரம் கட்டிப்பிடிச்சி அழலாம் போல இருக்கும் இவரோட முகம்.. சோகத்துக்குன்னே நேர்ந்துவிட்ட பிராபர்ட்டின்னா அது இவர்தான். இவருக்கெல்லாம் கடன் கொடுத்தவங்க திரும்ப கேக்கறதுக்கே மனசு வராது. அந்த அளவுக்கு முகத்துல எந்த நேரமும் சோக மேகம் சூழ்ந்திருக்கும்.

3 . விஜயகுமாரியோட நேர் கோட்டுல நூல் பிடிச்ச மாதிரி இருக்கிறவர் நம்ம ஜெமினிதான். ஜெமினி படம்னாலே மியூசிக் டைரக்டருங்க பேக்ரவுண்ட் வாசிக்க… தம்மாத்துண்டு செனாய் வாத்தியத்தை கொண்டு வந்து மொத்த படத்துக்கு ஈ… ஈ… ஊதினா போதும். அந்த அளவுக்கு சோகத்தின் சொர்க்கம்னா அது ஜெமினிதான்.

அதிலயும் ’கல்யாண பரிசு’ படத்துல ’காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்’ ஸாங்குல பூந்து… பூந்துன்னு அழுவாரு. ஒரிஜினல் காளை மாடு பாத்தாக்கூட கண் கலங்குற அளவுக்கு அடக்க முடியாம அழுகாச்சி காட்டுவாரு.

தமிழ் சினிமா
தமிழ் சினிமா ஹீரோக்களின் சாகச சம்பவங்கள்

4 . அடுத்து, அவர் அழும்போதெல்லாம் நம்மளை சிரிக்க வெச்ச மகான் எம்.ஜி.ஆர். ஆக்ஷன், அழுகாச்சின்னு டைரக்டர் குரல் கொடுத்தா போதும் முகத்த ரெண்டு கையாலயும் பொத்திகிட்டு, மூலைக்கு போயி முட்டுக்கொடுத்துக்குவாரு. உடம்பு மட்டும் லேசா குலுங்கும். அந்த சீனோட ஆரம்பம் பார்க்காதவன் உள்ள வந்தான்னு ’தலைவர் சிரிச்சிகிட்டு இருக்கார்’னு நெனைக்கிற அளவுக்கு ஜி அசத்துவாப்புல.

இதைவிட கொடுமை அழுது முடிச்சி திரும்பி கண்ணீரை துடைப்பாரு பாருங்க. அதான் காமெடியின் உச்சம். அதுலயும் ’எங்கள் வீட்டுப் பிள்ளை’ படத்துல நாலஞ்சு இடத்துல அழுகாச்சி சீன் வரும். சீக்கிரம் நடிக்க வெச்சி முடிச்சி விடாம ’இன்னொரு தபா.. இன்னொரு தபா’ ன்னு தலைவரை அழவெச்சி சிரிச்சிகிட்டு இருந்திருக்காரு அந்தப் படத்தோட டைரக்டர்..

5. தேவயாணி மாதிரி ஒரு அழுகாச்சி நடிகைய பாத்திருக்கவே முடியாது. ஆயிரத்துக்கு அழுங்கன்னா ஐம்பதாயிரத்துக்கு அழுவாங்க. அவருக்கு ஈடு கொடுத்து அழ இன்னொரு நடிகை பொறக்கவும் இல்ல பொறக்கப் போறதும் இல்லை. அப்படியொரு ஃபெர்பாமென்ஸ்.

தமிழ் சினிமா
Hidden Facts of தமிழ் சினிமா இயக்குனர்கள் - இதெல்லாம் நோட் பண்ணிருக்கீங்களா?

உதாரணத்துக்கு ஒண்ணு ரெண்டு படத்தைச் சொல்லி அசிங்கப்படுத்த வேணாம். மொத்த படத்துலயும் கிளிசரின் டப்பாவோடதான் அலைஞ்சிருக்காங்கன்னா பாத்துக்கங்க. சும்மா தமாசுக்கு ’கொஞ்சம் அழுது காட்டுங்க’ ன்னு கேட்டாக்கூட ரெண்டு சொட்டு கண்ணீர் வடிச்சிட்டு அடுத்த வேளைய பாக்குற ஆள் இவர்.

6. அடடா… கமலை விட்டுட்டு ஒரு அழுகாச்சி விஷயம் இருக்க முடியுமா…? ஏகப்பட்ட படத்துல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியிருந்தாலும் ’நாயகன்’ படத்துல ’ஆ… ஆ’..ன்னு அழுததுதான் இன்னைக்கு வரைக்கும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுங்களுக்கு கமல் ஊத்துன ’மசாலா பால்’ னா மிகையில்லை. அந்த அளவுக்கு ’ஆ… ஆ’ வுலயே அவளோ அழுகாச்சிய உள்ள வெச்சி டைட்டா அழுத்திக் கொடுத்திருப்பாரு. அதுக்கே ஆஸ்கார் குடுத்திருக்கணும்.

அந்த படம் ரிலீஸ் ஆனப்போ ஆஸ்கார் கமிட்டி லீவு போட்டுட்டாங்களோ என்னவோ… கிடைக்காமப்போச்சி. அப்புறம், யாருக்குப் போறாத காலமோ தெரியல ரஜினியோட ’பாபா’ படத்தை திரும்ப ரிலீஸ் பண்ணப்போறாங்களாம். அது மாதிரி கமலோட ’மன்மதன் அம்பு’ படத்தையும் ரிலீஸ் பண்ணா நல்லா இருக்கும். அதுல ரொம்ப ஃபீல் பண்ணி கமல் பண்ணிருப்பாரு. அதுக்குத்தான்.

தமிழ் சினிமா
'ரஜினி நடை, எம்ஜிஆர் விக், கலர்கலரா கோட்சூட்' - எப்படியிருக்கிறது லெஜண்ட்?

7 . இவங்க எல்லாரையும் தன்னோட ’லெஜெண்ட்’ ங்கிற ஒரே ஒரு படம் மூலமா ஒட்டுமொத்த நடிக, நடிகைகளையும் ’ஓரம்போ… ஓரம்போ’ ன்னு உட்கார வெச்சிட்டு ஃபீலிங்கை பிசைஞ்சி.. பிசைஞ்சி வாயிலயே ஊட்டிவிட்டிருப்பாரு நம்ம சரவணன் அருள்.

சர்க்கரை நோயாளிகளுக்காக அவர் படுற வேதனை கொஞ்ச நஞ்சமில்ல. படம் பார்த்த (இலவச டிக்கெட்டில்) சர்க்கரை நோயாளிங்க ’இந்த தம்பி சிரமப்படுறதுக்கு சர்க்கரையே மேல்’னு ஃபீல் பண்ற அளவுக்கு உணர்ச்சிய கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தெறிக்க விட்டிருப்பாரு. நமக்கு என்ன பயம்னா அடுத்த படத்தோட அறிவிப்பை வெளியிட்டு நம்மள அழ வெச்சிடக் கூடாதுங்கிறதுதான்.

– எம்.ஜி. கன்னியப்பன்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com