Kalaignar Nagar டைம்பாஸ்
சினிமா

Kalaignar Nagar : 23 மணி நேரத்தில் உருவான கலைஞர் நகர் திரைப்படம் !

முதல் நாள் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பிச்ச ஷூட்டிங் அடுத்தநாள் மதியம் 1.23 மணிக்குதான் முடிஞ்சிருக்கு.

ராதிகா நெடுஞ்செழியன்

இயக்குநர் சுகன் குமார் தான் இந்த சாதனைய பண்ணியிருக்காரு. இதுக்கு முன்னாடியே 'பிதா' அப்டின்ற திரைப்படத்த 23.23 மணி நேரத்துல இயக்கி சாதனை படச்சிருக்காரு சுகன் குமார்.

"கலைஞர் நகர்"ன்ற அவருடைய அடுத்த திரைப்படத்த 22.53 மணி நேரத்திற்குள்ள முடிச்சி சாதனை படச்சிருக்காரு‌, கூடவே அவரு ஏற்கனவே பண்ண சாதனைய முறியடிச்சிருக்காரு. இந்த சாதனை தமிழ் சினிமாவுக்கு ஒரு புது அடையாளமா பார்க்கப்படுது.

1999ல 'சுயம்வரம்' திரைப்படம் 24 மணி நேரத்துக்குள்ள உருவாக்கப்பட்ட படம்னு கின்னஸ் சாதனை படைச்சது‌. இது திரையுலகத்துல மிகப்பெரிய ரெக்கார்ட்டா பார்க்கப்பட்டுச்சு. இப்போ இந்த ரெக்கார்ட தான் "கலைஞர் நகர்" இயக்குனர் 'சுகன் குமார்' முறியடிச்சிருக்காரு.

இந்த படத்த பத்தி இயக்குநர் சுகன் குமார், "பெரிய பெரிய இயக்குநர்கள்லாம் பிரமாண்டமா படம் எடுக்குறாங்க. இந்த சின்ன படத்த நாங்க பிரம்மாண்டமா எடுத்திருக்கோம். அதுமட்டுமில்லாம இந்த படத்த 23 மணி நேரத்துக்கு 7 நிமிடங்களுக்கு முன்னாடியே முடிச்சிட்டோம்.

மேடை நடனக் கலைஞர்கள மையப்படுத்தி எடுக்கப்பட்டதுதான் இந்த படம். இந்த படத்த எடுக்குறதுக்கு நான் மட்டும் முக்கிய காரணம் கிடையாது, இதுல என்னுடைய கடைசி உதவியாளர் வரைக்கும் உழைச்சிருக்காங்க" அப்படின்னு நெகிழ்ச்சியோட பகிர்ந்திருக்காரு.

என்னதான் இந்த படம் 23 மணி நேரத்துக்குள்ள எடுக்கப்பட்டிருந்தாலும், இந்த படத்துல 3 பாடல்கள், 2 சண்டை காட்சிகள், காமெடினு கமர்சியல் படங்களுக்கு தேவையான எல்லா விஷயங்களும் இருக்கு. மேடை நடன கலைஞர்கள மையப்படுத்துன இந்த படம், உண்மை சம்பவத்த தழுவினதுனு சொல்லியிருக்காங்க.

கலைஞர் நகர் படத்துல பிரஜின் ஹீரோவாவும், ஸ்ரீபிரியங்கா ஹீரோயினாவும் நடிச்சிருக்காங்க. கூடவே லிவிங்ஸ்டன், ஐஸ்வர்யா, திருக்குறழி, விஜய் ஆனந்த், ரவி, ரஞ்சித் முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்காங்க.

கலைஞர் நகர் படத்துக்காக 5 கேமராக்கள படக்குழு பயன்படுத்தியிருக்காங்க‌. முதல் நாள் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பிச்ச ஷூட்டிங் அடுத்தநாள் மதியம் 1.23 மணிக்குதான் முடிஞ்சிருக்கு. உண்மை சம்பவத்த மையப்படுத்தியிருக்க இந்த கதைய, பாடல் காட்சி, சண்டை காட்சிகளோட சேர்த்து ஒரே நாள்ல படமா எடுத்திருக்குறது மிகப்பெரிய விஷயம்னு சினிமா ரசிகர்களும் திரையுலக சேர்ந்தவங்களும் தெரிவிச்சிருக்காங்க.