leo
leo timepassonline
சினிமா

Leo : Ticket Booking இல் புதிய சாதனை படைத்த லியோ - எத்தனை லட்சம் டிக்கெட்டுகள் தெரியுமா?

டைம்பாஸ் அட்மின்

நான் ரெடி தான்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் முதல் ஷோ 9 மணி துவங்கும் என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே லியோ ரசிகர்கள் பட புக்கிங் குறித்து X வலைத்தளத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தனர்.

ஆரம்பத்திலிருந்து பல சர்ச்சை பிரச்சனைகளைச் சந்தித்து வந்த பட குழு, 9 மணிக்குப் பதில் 7 மணியளவில் முதல் ஷோவுக்கு அனுமதி கேட்டு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் பெட்டிஷன் ஒன்றினை அனுப்பினர். இப்படத்தின் கால அளவு 2 மணி நேரம் 45 நிமிடம். இதனை கருத்தில் கொண்டு அதிக ஷோஸ் கொடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு, இறுதியில் 5 ஷோஸ் 16.5 மணி நேரம் (9 AM - 1.30 AM) முழுவதுமாக வெளியிட இறுக்கினர் படக்குழு.

இதனை அடுத்து, சமீப காலத்தில் வந்த ஜவான் திரைப்படத்தின் முன்கூட்டியே டிக்கெட் விற்பனை (advance ticket sale) கணக்கை தாண்டி உள்ளது லியோ. நாளை திரையரங்குகளில் 2D மற்றும் imax இல் வெளியாக இருக்கும் லியோ திரைப்படம் இன்றளவு 2023 ஆண்டுக்கான அதிக அட்வான்ஸ் டிக்கெட் sale கொடுத்த படம் என்று மாறியிருக்கிறது.

லியோ படத்திற்கான 20 லட்ச டிக்கெட்கள் அப்படம் வெளியாவதற்கு முன்னமே விற்பனை ஆகும் நிலையில் உள்ளது. தளபதி விஜயுடன், திரிஷா, கௌதம் வாசுதேவ மேனன், அர்ஜுன், ஃபஹத் பாசில், அனுராக் காஷ்யப் என பல பிரபல சினிமா நட்சத்திரங்கள் ஒன்று கூடி LCUவில் (லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்) கலக்க இறுக்கினர்.

கூடுதலாக, அனிருத் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் குழந்தையாக உருவெடுத்து இருக்கிறது லோகேஷின் கதை. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா முதல், போஸ்டர் வரை பல பல சர்ச்சைகளை கடந்து நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் நா ரெடி தன்... என உற்சாகத்தோடு காத்துக்கொண்டு இருக்கின்றன!