Balakrishna
Balakrishna டைம்பாஸ்
சினிமா

Veera Simha Reddy: Balakrishna-வின் மிரட்டலான Punch Dialogues

சு.கலையரசி

படம் என்றாலே அங்கங்க கட்டிங், ஒட்டிங், எடிட்டிங் அப்படின்னு எல்லாமே இருக்கும். ஆனா படம் முழுக்கவே எடிட்டிங் எபக்ட்ஸ் மட்டுமே இருந்தா அந்த படம் எப்படி இருக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க  ப்பாபா அப்படின்னு இருக்கு.

நெனச்சு பாக்கவே இப்படி இருக்கே உண்மையிலேயே தெலுங்கு திரைப்படங்கள் என்றாலே மிகைப்படுத்துதல்தான்.. அத்துடன் எடிட்டிங் இணைந்த காம்போ என்றாலே தெலுங்கு படம் தான். அப்படி எடிட்டிங்கே எடிட்டிங் சொல்லிக் கொடுத்து இதை ஒருத்தர் சாத்தியமாக்கியிருக்காரு அவர் தான் நம்ம பாலையா பாபு.

பால கிருஷ்ணான்னு இவர் பெயர் சொல்லி தெரியாத மக்கள் கூட ரசிகர்களால் இவருக்கு கொடுத்த "Coca cola pepsi balayya Babu sexy" ன்ற டேக்லைன்ல ஃபேமஸ் ஆகிட்டாறு.

அப்படி இவர் நடிப்பு திறமையாலும், எடிட்டிங் ஆலும், டயலாக்ஸாலும்  பல ஃபேமஸ் திரைப்படங்கள் கொடுத்து இருக்கார். அப்படிப்பட்ட பட வரிசை பட்டியல்கள் இதோ..

Palnati Brahmanayudu - 2003: பல்நாட்டி பிரம்மநாயுடு - இந்த படத்துல பாலையா  தன்னோட பிரம்மாண்டமான நடிப்பை கொடுத்திருப்பாரு. இவரோட நடிப்பில இந்தப் படத்தில வந்த ஒரு சீன் ரொம்ப மாஸான சீன் எந்த ஒரு திரை உலகிலும் இந்த மாதிரி ஒரு சீன் எடுத்திருக்க மாட்டாங்க. ரயில் நகர பச்சைக்கொடி காட்ட வேண்டாம். பாலையா  கை வித்தை செய்தாலேபோதும் நிற்காத ட்ரெயின் கூட நின்றுடும் ஓடாத ட்ரெயின் கூட ஓடிடும்.

Simha - 2010: இந்த படத்துல வர்ற சிங்கிள் டேக் டயலாக் தான்  "Don't trouble the trouble, if you trouble the trouble, trouble...troubles you, I am not the trouble...I am the truth" இந்த டயலாக் பல பேருக்கு மோடிவேட்டிங் டயலாக்கா இருந்ததாம். பல பேர் எந்த பிரச்சனை வந்தாலும் இந்த டயலாக் இருக்கு நமக்கு கவலை எதுக்குன்னு சொல்லிட்டு இருந்தாங்க.

Lion - 2015 -  "(கொந்தரு கொடிதே x-rayலோ கனிபிஸ்துன்ந்தி மரி கொந்தரு கொடிதே scanningலோ கனிபிஸ்துன்ந்தி கானி நேநு கொடிதே மாதரம் historyலோ வினிபிஸ்துந்தி) சில பேர் அடிச்சா எக்ஸ்-ரேல தெரியும் இன்னும் சில பேர் அடிச்சா ஸ்கேனிங்ல தெரியும் ஆனா நான் அடிச்சா மட்டும் ஹிஸ்டரியில் தெரியும்".

5 வருடத்துக்கு முன்னாடி லையன்  படத்தோட இந்த  டயலாக் ட்ரெய்லர் அப்பவே ஆடியன்ஸுடைய நாடி நரம்பெல்லாம் பாலையா டயலாக் வெறி பிடிக்க வைத்தது.

Akhanda - 2021: இந்த படத்தை சூப்பர் மார்வெல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி, கதையிலேயே இவருக்கு ஒரு சூப்பர் நேசுரல் பவர் கொடுத்து படத்தை வேற லெவல்ல எடுத்து இருப்பாங்க. இந்தப் படத்துல இவருடைய சூப்பர் நேச்சுரல் பவர் எந்த அளவுக்கு வேலை செய்யும்னா அந்த படத்துல வர்ற ஜெய் பாலையா பாட்டுல சட்டையை கழட்டிட்டும், பந்து வைத்து நடனம் ஆடுறதும்னு ஒரே ஃபன் பண்ணி இருப்பாங்க.

Legend - 2014 :  நம்ம எல்லாருக்குமே லெஜன்ட் அப்படின்னு சொன்னாலே சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தான் ஞாபகம் வருவார். ஆனா தெலுங்கு திரையுலகுல லெஜென்ட்னு சொன்னாலே அது பாலையா தான். திரையுலகோட  முதல் லெஜென்ட் பாலையாதான்.   இந்த படத்துல வர்ற "(சென்ட்ரல் அயினா ஸ்டேட் அயினா பொசிஷன் அயினா பவர் அயினா ஏதயினா நேநு திகனன்தவருக்கே வரக்கே ஒன்ஸ் ஐ ஸ்டெப் இன் ஹிஸ்டரி ரிப்பீட்ஸ்) சென்ட்ரலோ ஸ்டேட்டோ பொசிஷனோ இல்ல பவரோ எதுவா இருந்தாலும் நா இறங்காத வரைக்கும் தான் Once I Step in History Repeats" இந்த டயலாக்கு ஆடியன்ஸ் சில்லறைய  சிதற விட்டு பார்த்தாங்க. 

இந்த மாதிரி ஒவ்வொரு படத்துலையும் புதுசு புதுசா ஏதோ ஒரு நடிப்பை கொடுத்துட்டே இருப்பவர் தான் பாலையா. இவருக்குனு எப்படி தனி ரசிகர் பட்டாளம் இருக்கோ அதுபோலவே, இவருக்குனு தனி டயலாக், தனி ஆக்சன், அடிச்சா ஆளுங்க பறக்குறதுன்னு தனித்தனி ஸ்கிரீன் ப்ளேவே  இருக்கும்.

சினிமா நடிப்புல இவரை அடிச்சிக்க ஆலே இல்ல. அதேப் போல இவரு அடிக்காத ஆலே இல்ல.