Balakrishna
Balakrishnatimepass

சட்டமன்றத்தில் தொடையை தட்டி சவால் விட்ட Balakrishna - பாலய்யாவின் Reallife Punch dialogues தெரியுமா?

ஊரு மாறலாம், தின்ற Food மாறலாம், படுக்கிற Bed மாறலாம். Blood எதுக்கு மாறப்போது... Blood Donate செய்யிங்க, ரிஸ்க்கா? எனக்கா? உங்களுக்கு ஒரு கதை சொல்றேன். தண்டவாளத்துல ரயிலை எதிர்த்து ஓடுறான். எதிர்ல..
Published on

அண்மையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகரும் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினருமான பாலகிருஷ்ணா அம்மாநில சட்டப்பேரவையில் தொடையை தட்டி சவால் விடுத்தார். இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது.

அவ்வகையில் நம்ம மாஸ் நடிகர் பாலகிருஷணன் என்கிற பாலய்யா படங்களில் மட்டுமல்ல, நிஜத்திலும் பன்ச்கள் அதிரி புதிரிதான்! சாம்பிளுக்கு மூனு எறக்குறேன் பாருங்க.

`ஊரு மாறலாம், தின்ற ஃபுட்டு மாறலாம், படுக்கிற பெட்டு மாறலாம். ப்ளட் எதுக்கு மாறப்போது...  ப்ளட் டொனேட் செய்யிங்க!’

`இங்கே இருக்குற வோட்டர் ஒவ்வொருத்தனும் ஷூட்டர் டா!’

`ரிஸ்க்கா... எனக்கா..? உங்களுக்கு ஒரு கதை சொல்றேன் கேளுங்க. ஒருத்தன் தண்டவாளத்துல ரயிலை எதிர்த்து ஓடுறான். எதிர்ல வந்த டிரெயின் மோதி செத்துட்டான். இன்னொருத்தன் ரயிலுக்கு முன்னாடி ஓடினான். ரயில் மோதி செத்துட்டான். இந்தக் கதையில டிரெயின் யார் தெரியுமா... நான்தான். ஒருத்தன் என்னை எதிர்த்தா, அவனுக்குதான் ரிஸ்க். ஒருத்தனை நான் எதிர்த்தாலும் அவனுக்குதான் ரிஸ்க்!’

வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், கலகலப்பான மீம்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.

Follow us : https://bit.ly/3Plrlvr

Balakrishna
தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா - வித்தியாசங்கள பார்ப்போமா?
Timepass Online
timepassonline.vikatan.com