Surabhi  டைம்பாஸ்
Lifestyle

80s Kids: Doordarshan Surabhi நிகழ்ச்சி ஞாபகம் இருக்கா? - பழைய பேப்பர் கடை | Epi 15

மொத்தம் 415 எபிசோட்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வந்தது. பிறகு ஸ்டார் ப்ளஸ் கோடிகளை கொட்டிக் கொடுத்து இந்நிகழ்ச்சியை வாங்கிக் கொண்டது.

Saran R

இவர்களை ஞாபகம் இருக்கா..? தூர்தர்ஷன் பார்த்த 80-ஸ் கிட்ஸ்களுக்கு இவர்களை நன்கு தெரிந்திருக்கும். சுரபி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரொம்பவே பாப்புலர். இணையம் வருவதற்கு முன் இவர்கள் இருவரும் தான் கலாச்சார கூகுள். நேயர்களுக்கு கேள்வி கேட்டு பதில்களை போஸ்ட் கார்டு மூலம் அனுப்பி வைக்கச் சொல்லி மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டவர்கள்.

1990- 2001 வரை தூர்தர்ஷனில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி இந்தியில் இருந்தாலும் இந்தியா முழுவதும் இவர்களுக்கு ரசிகர்கள் இருந்தார்கள். வயலின் வித்வான் எல்.சுப்ரமண்யம் தான் டைட்டில் மியூஸிக் அமைத்துக் கொடுத்து, மிகப்பெரிய ஹிட் நிகழ்ச்சியாக அமைந்தது இது. 

மொத்தம் 415 எபிசோட்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வந்தது. பிறகு ஸ்டார் ப்ளஸ் கோடிகளை கொட்டிக் கொடுத்து இந்நிகழ்ச்சியை வாங்கிக் கொண்டது. நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்கிய சித்தார்த் கக் மற்றும் ரேணுகா சஹானேவின் வீடுகளைத் போய் பழைய நினைவுகளை அசைபோட்டு பேசி மகிழும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். 

தற்போது வயது முதிர்வின் காரணமாக இருவரும் எந்த நிகழ்ச்சிகளும் பண்ணவில்லை என்றாலும், சுரபி என்ற அந்த ஹிட் நிகழ்ச்சியின் பெயரிலேயே ஒரு சேவை அமைப்பை ஆரம்பித்து கிராமப்புற முன்னேற்றம், ஏழை குழந்தைகளின் கல்வி என தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அதற்கான ஆயுட்கால உதவியை ஃபோர்டு கார் நிறுவனம் அவர்களுக்கு வழங்கி வருகிறது என்பது சிறப்பு. 

விஷயம் அது அல்ல... இவர்களுக்கு வாராவாரம் லட்சக்கணக்கில் போஸ்ட் கார்டுகள் வருமாம். ஒருமுறை 14 லட்சம் போஸ்ட் கார்டுகள் நேயர்களிடமிருந்து வந்து குவிந்ததுதான் இப்போதுவரை உலகின் அதிக ரசிகர்களின் பங்களிப்பு என்ற அசைக்க முடியாத சாதனையைப் படைத்திருக்கிறது.