சச்சின் கிரிக்கெட்ல எவ்ளோ ஃபேமஸோ அதே அளவு கிரிக்கெட்டும், சர்ச்சைக்கு ஃபேமஸ்.....
1932-ல நடந்த ஆஷஸ் டூர்ல சர்ச்சையக் கிளப்புன பாடி லைன் டெஸ்ட்ல தொடங்கி, COMBAT-னு சொல்லப்படற அலுமினியம் பேட்லதான் பேட்டிங் பண்ணுவேன்னு அடம்பிடிச்சு தூக்கிட்டு வந்த டென்னிஸ் லில்லி வழில தடம்பிடிச்சு, டிவி ஷோல போய் காபி குடிக்க ஆசைப்பட்டு காத்து வாக்குல கான்ட்ரோவர்ஸில சிக்குன ரெண்டு கிரிக்கெட்டர்ஸ் வரைக்கும் பலபல சர்ச்சைகள கிரிக்கெட் உலகம் பார்த்துருச்சு. அதுல ஒருசிலதுக்குள்ள நாமும் நுழைஞ்சு பார்ப்போமா?
*1999 உலக கோப்பைல தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் முட்டி மோதிட்டு இருக்க, ஹன்சி கிரோனியே வெளிய இருந்த கோச் பாப் உல்மர்கிட்ட, "இப்போ யார பௌலிங் போட சொல்லலாம்?, இந்த ஃபீல்டிங் பொஸிஷன் ஓகேயா, இன்னும் கொஞ்சம் லெக்சைட் லோட் பண்ணவா?!",னு Earpiece மூலமா பேசிட்டு இருந்தத பேட்டிங் பண்ணிட்டிருந்த கங்குலி பார்த்துட்டு, அம்பயரிடம் போட்டுக் கொடுத்தாரு. ஒருவழியா பேசி அத பறிமுதல் பண்ணாங்க.
*பால் டேம்பரிங்னு சொல்லப்படற பந்த சேதப்படுத்துன சர்ச்சைல பாகிஸ்தான் பலதடவ மாட்டிருக்கு. ஒருதடவ, டிராவிட், சச்சின் மேலகூட இந்தப் புகார் எழுந்திருக்கு.
1994-ல மைக்கேல் ஆதர்டனோட "டர்ட் இன் பாக்கெட்" சர்ச்சை பூகம்பத்தையே உண்டாக்குச்சு. 2005 ஆஷஸ் தொடர்ல நான் Mint யூஸ் பண்ணி பால ஷைன் பண்ண வச்சேன்"னு, மார்கஸ் டிரெஸ்கோதிக், தொடர் முடிஞ்சு மூணு வருஷம் கழிச்சு அவரோட சுயசரிதையில ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரு.
*இந்தியால கேப்டன் - கோச் சண்டையோட உச்சகட்டமா கங்குலி - செப்பலோட ஆர்ம் ரெஸ்ட்லிங் இருந்துச்சு. இவரு அவரக் குறைசொல்ல, பதிலுக்கு அவரு கொளுத்திப் போடனு ரெண்டு பேரும் வாகா பார்டருக்கு ரெண்டு பக்கமும் இருக்க மாதிரி அடிச்சுக்கிட்டாங்க.
*மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங், பெட்டிங் சர்ச்சைகள் கால் முளைச்சு, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கானு எல்லா நாட்டையும் சுத்திப் பார்த்துருக்கு.
*பந்தை வீசல, எறியறாங்கனு ஒலாங்கோ, கிராண்ட் ஃப்ளவர், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட பல பௌலர்கள் பலதடவ குற்றவாளிக் கூண்டுல ஏத்தப்பட்ருக்காங்க.
*மொகம்மத் ஆசிஃப், அக்தர், ஷேன் வார்னே உள்ளிட்ட சில வீரர்கள், தடை செய்யப்பட்ட வஸ்துக்கள உட்கொண்டு, Doping Testல ஃபெயிலாகி மாட்டிருக்காங்க.
*ஸ்டம்ப் மைக்னு ஒன்னு இல்லேன்னா ஸ்லெட்ஜிங்ன்றது இன்னமும் பல மடங்காகி இருக்கும். 1996-ல இயான் ஹீலே - அர்ஜுனா ரணதுங்க, அதே வருஷம், வெங்கடேஷ் பிரசாத் - அமீர் சொகெய்ல், 1999-ல பாண்டிங் - இஜாஸ் அஹமத்னு பலருக்கிடையே ஸ்லெட்ஜிங் புகார் எழுந்திருக்கு. Monkeygate சம்பவம் மாதிரி சமயத்துல இனப்பாகுபாடு சர்ச்சைகளும் கிளம்பியிருக்கு.
*2003 - 2007 காலகட்டத்துல ஜிம்பாப்வே கிரிக்கெட்ல, வெள்ளையின வீரர்கள் பாதிக்கப்படற மாதிரியான சட்டங்கள் இயற்றப்பட, அத எதிர்த்து வீரர்கள் கிரிக்கெட்ல இருந்தே விலக, பெரிய பூசலே வெடிச்சது.
இந்த சர்ச்சைகள் வந்த வழியே தெரியாம பலசமயம் காணாம போய்டும். அதேநேரம், இத்தனை சர்ச்சைகள்ல சிக்குனாலும், கிரிக்கெட் உலகத்தோட ஓட்டமோ தடைபடாம, இன்னமும் அதிவேகமாத்தான் சுத்திட்ருக்கு, இனிமேலும் சுத்தும்.....