அண்ணன் தம்பிகள் Cricket
Lifestyle

90s Kids Cricket: 'அசத்தலான அண்ணன் தம்பிகள்' | Epi 8

83 உலகக்கோப்பை ஸ்டாரான அமர்நாத் சகோதரர்கள். இயற்கையா அமைஞ்ச பிரதர்ஸ் கூட்டணிகள் ஒருபக்கம்னா, கோலி - ஏபிடி, பாண்டியா - பொல்லார்ட் மாதிரி தானா அமைஞ்சது, இன்னமும் ஆழமானது, அர்த்தமுள்ளது.

Ayyappan

"Bromance" - என்னதான் வீட்டுக்குள்ள ரிமோட்டுக்காக அடிச்சுக்கிட்டாலும், ஸ்வீட் ரிவென்ஜோட, பில்லோ ஃபைட்டக்கூட ராக் - ஜான் செனா அளவுக்கு போட்டாலும், அம்மா தந்த ஜுஸ் கிளாஸை, சியர்ஸ் சொல்றோம்ன்ற பேர்ல அளவு செக் பண்ணிக்கிட்டாலும், பிரதர்ஸுக்குள்ள இருக்கும் நெருக்கமே தனிதான். நம்மோட ரகசியக் காப்பாளர்கள், கிரைம் பார்ட்னர்கள் எல்லாமே அவங்கதான்.

கிரிக்கெட்லயும் அப்படி, கண்பட்டுடப் போகுதுன்னு ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த சகோதரர்களதான், ஒரு ரவுண்டு பார்த்துட்டு வரப்போறோம்.....

*நியால், கெவின் ஓ பிரையன், அயர்லாந்து - ஒருநாள் போட்டிகள்ல பெரிய தாக்கத்த நெடுநீண்ட காலம் ஏற்படுத்தினவங்க.

நியால், கெவின் ஓ பிரையன்

*க்ராண்ட், ஆன்டி ஃப்ளவர் ஜிம்பாப்வே - `ஃப்ளவர் பவர்'தான் கிட்டத்தட்ட பத்து வருஷத்த ஜிம்பாப்வேவோட பொற்காலமா மாத்தி வெச்சுருந்தது.

*டாம், சாம் கரண், இங்கிலாந்து - சுட்டிக் குழந்தை சாம், 2021 ஐபிஎல்ல, டாம் பால்ல, ரெண்டு பவுண்டரி, ரெண்டு சிக்ஸர் அடிச்சு நமட்டுச் சிரிப்பு சிரிச்சது நினைவிருக்கா?!

*கிரேக், ஜேம்மி ஓவர்டன், இங்கிலாந்து - கிரேக் நமக்கு பழக்கமானவர்தான், அவரோட ரெட்டைச் சகோதரர் ஜேம்மியும் சமீபத்துல இங்கிலாந்து டெஸ்ட்ல அறிமுகமாகிருக்காரு.

*கம்ரான், அட்னான் மற்றும் உமர் அக்மல் - சகோதரர்களான இந்த மூணுபேருமே, பாகிஸ்தான் ஜெர்ஸில ஆடுனது கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல்.

*ஆல்பி, மார்னே மார்கெல், தென்னாப்பிரிக்கா - ஆல்பி ஆல்ரவுண்டரா அசத்துனார்னா, மார்னே பேஸ் பௌலரா கட்டம்கட்டி கலக்குனாரு.

ஆல்பி மார்கெல், மார்னே மார்கெல்

*நியூசிலாந்து அணிலயும் நிறைய சகோதரர்கள் ஆடியிருக்காங்க.

ஹேமிஸ், ஜேம்ஸ் மார்ஷல் - டெஸ்ட் கிரிக்கெட் களத்துல சேர்ந்து ஆடுன முதல் ஐடென்டிகல் ட்வின்ஸ்!

பிரெண்டன், நாதன் மெக்கல்லம் - அதிரடி பேட்ஸ்மேனா பிரெண்டனும், பௌலிங் ஆல்ரவுண்டரா நாதனும் ஒரே காலகட்டத்துல ஆடினாங்க.

மார்டின், ஜெஃப் க்ரோவ் - தோனிக்கு முன்னோடியா ஸ்ட்ராடஜில கில்லாடியா இருந்த மார்டின் க்ரோவும், அவரது சகோதரர் ஜெஃப் க்ரோவும், பல சம்பவங்கள பண்ணவங்க.

ரிச்சர்ட், டேய்ல், பேரி ஹார்ட்லி - மூணு பேருல ரிச்சர்ட், அதிஅற்புத ஆல்ரவுண்டரா பெயரெடுத்தவரு.

*மேற்கிந்தியத் தீவுகள்ல இருந்து ட்வெய்ன் மற்றும் டேரன் பிராவோ பிரதர்ஸ் அதகளப்படுத்தியிருக்காங்க.

*ஆஸ்திரேலியால இருந்துகூட, கிரேக், இயான் மற்றும் ட்ரிவர் செப்பல், மார்க் மற்றும் ஸ்டீவ் வாக், மைக்கேல் மற்றும் டேவிட் ஹசி, ஷான் மற்றும் மிட்செல் மார்ஷ், ஷேன் மற்றும் ப்ரட் லீனு கிரிக்கெட் சகோதரர்கள் நிறையவே இருந்திருக்காங்க.

*இந்தியால இருந்து இந்த பிரதர்ஸ் நம்பர்ஸ் ஆர்மி வைக்குற அளவு ஜாஸ்தி,

1983 உலகக்கோப்பை ஸ்டாரான மொஹிந்தர் அமர்நாத் அவரோட சகோதரர் சுரிந்தர் அமர்நாத்.

இந்தியாவோட தலைசிறந்த ஸ்பின்னர்களான சுபாஷ் மற்றும் பாலூ குப்தே.

ஒருசில போட்டிகளில் மட்டுமே ஆடுன மாதவ் மற்றும் அரவிந்த் ஆப்தே.

ஐபிஎல் கிட்ஸுக்குக்கூட ரொம்பவே பரிட்சயமான பதான் மற்றும் பாண்டியா பிரதர்ஸ்.

இப்படி இயற்கையா அமைஞ்ச பிரதர்ஸ் கூட்டணிகள் ஒருபக்கம்னா, கோலி - ஏபிடி, பாண்டியா - பொல்லார்ட் மாதிரி தானா அமைஞ்சது, இன்னமும் ஆழமானது, அர்த்தமுள்ளது.

சமீபத்துல இந்தியா பாகிஸ்தான வீழ்த்துன பிறகு, பிசிசிஐ, `Bromance'ன்ற பேர்ல, ஷேர் பண்ணிருந்த கோலி - ரோஹித் ஃபோட்டோ, Cricket Hall Of Loveனு ஒன்றை உருவாக்கி, அதுல ஃப்ரேம் போட்டு மாட்ட வேண்டியது. நெகிழ்ச்சி நிறைந்த, கண்கள் கலங்குன அந்த ஃபெடரர் - நடால் படத்த அது மறுபடி நினைவுக்கு கொண்டு வந்துடுச்சு.