ஒவ்வொரு தடவ, மழைவந்து "தடங்கலுக்கு வருந்துகிறோம்" போடறப்பலாம், "ரெய்ன் ரெய்ன் கோ அவே" ரைம்ஸ, நர்சரியிலவிட அதிகமா பாடிருப்போம். நொடிக்கொருதடவ லவ்வர்ட்ட இருந்து மெசேஜ் வருதானு மொபைல பார்க்குறாப்ல, ஹைலைட்ஸ், Liveஆக மாறணும்னு, "வைதேகி காத்திருந்தாள்" வெள்ளைச்சாமியா வெய்ட் பண்ணிருப்போம்.
அப்படி, மழை தவிர்த்து, மேட்ச் ஆரம்பிக்கறத தாமதப்படுத்துன, நிறுத்துன விநோதமான சந்தர்ப்பங்களின் தொகுப்புதான் இது.
Cow corner-ஐ நோக்கி ஓடுற மாடு, 'BEE Careful'னு நுழையற தேனீக்கள், பாம்பு, பறவைகள், வளர்ப்பு பிராணிகள்னு டிக்கெட்டே இல்லாம, எண்ட்ரி கொடுத்திருக்காங்க. 1983-ல, போத்தம் மற்றும் எட்டீயோட பெயர்கள் எழுதப்பட்ட பன்றி ஒன்று, இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மேட்ச் அப்போ வந்து களேபரப்படுத்திடுச்சு.
மழையால, பனிப்பொழிவால, வெளிச்சக்குறைவு காரணமாகக்கூட மேட்ச் தடைபட்டிருக்கு. 2019ல இந்தியா - நியூசிலாந்து போட்டி, அதிக வெளிச்சத்தால, தாமதமாச்சு. 1980ல இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட், சூர்ய கிரகணத்தால ரெஸ்ட் டே எடுக்கப்பட்டு, ஒருநாள் தள்ளிப்போச்சு.
அடாத நிலஅதிர்வுலயும் விடாம கிரிக்கெட் ஆடறவங்களப் பார்த்திருக்கீங்களா? இந்தாண்டு ஜனவரில, ஜிம்பாப்வே - அயர்லாந்துக்கு இடையேயான அண்டர்19 போட்டியில, பூமி லைட்டா ஜெர்க் ஆக கமெண்டேட்டர்கள்கூட பதற, ப்ளேயர்ஸோ கேசுவலா ஆடிட்டுருந்தாங்க.
போன வருஷம், ஜிம்பாப்வே - பங்களாதேஷ் போட்டியப்போ, மொகம்மத் சாய்ஃபுதீன் ஸ்ட்ரைக்ல இருக்கப்போ, பெய்ல்ஸ் தானா கீழவிழுந்தது இன்னமும் மர்மமாத்தானிருக்கு. "பேய் எடுத்த முதல் விக்கெட்"னு நெட்டிஷன்கள் காமெடி பண்ணாங்க.
1995ல நடந்த CastleCup போட்டில, பந்து பறந்துபோய், Barbequeகுள்ள விழுந்துடுச்சு. கண்டுபிடிச்சு எடுத்தா, லெதர் ஓரளவு குக்காகி, சாப்பிடவே தயாராகிடுச்சு. இருந்தாலும், அம்பயர் அடம்பிடிச்சு அடுத்த சில ஓவர்கள், அதே பந்ததான் வீசவச்சாரு.
நாதன் லயன், பிரிஸ்பேன்ல, உள்ளூர் போட்டியப்போ, டோஸ்டர்ல பிரட்ட போட்டுட்டு மறந்துட, ஓவர்குக்காகி, ஃபயராகி, அலாரம அலறவிட்டு, ஃபயர் என்ஜின் வர்ற அளவுக்கு ஆகிடுச்சு. போட்டிய அரைமணிநேரம் நிறுத்தினாங்க.
பந்து பீர் க்ளாஸ்லலாம் விழுந்து, தெறிக்க விட்டிருக்கு. பந்த உடனே கொடுக்காம, அதோடவே சேர்த்து, பீர் குடிச்சுகூட ஆடியன்ஸ் Fun பண்ணியிருக்காங்க. இன்னும் ஒரு தடவ, பந்து பக்கத்துல இருக்கவங்க கார்ல போய் ஹிட் பண்ணி, "இதுக்கு யாரு காசு தருவாங்க?!"னு அவங்க கத்துனதெல்லாம் ரெக்கார்ட் ஆகியிருக்கு. அந்தப் பந்து திரும்ப வந்திருக்கும்னா நினைக்கிறீங்க?
Kit Bag லேட்டா வந்ததால, இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் போட்டி தாமதமானது தெரிஞ்சதுதான். 2017ல பங்களாதேஷ் - தென்னாப்பிரிக்கா போட்டி, லஞ்ச் லேட்டா தரப்பட்டதால, தடைபட்டுச்சு.
1944ல லார்ட்ஸ்ல ஒரு உள்ளூர் போட்டியப்போ, ஜெர்மனோட Doodlebug Bomb, லார்ட்ஸ்ல லேண்ட் ஆகப்போதுன்ற நியூஸ்வர, ப்ளேயர்கள், மக்கள்னு அத்தன பேரும், தரைல படுத்துட்டாங்க. ஆனா பாம், ரீஜன்ட் பார்க்ல போடப்பட்டுச்சு.
2019 அபுதாபி டி10 போட்டியொன்று, மழைநின்னும், DLS டாக்குமெண்ட்கள் காணாம போனதால ரத்தாச்சு.
2005ல, ஃபைசலாபாத்ல இங்கிலாந்து ஆடிட்ருந்தப்போ, கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வெடிக்க, தீவிரவாதத் தாக்குதல்ன்ற பயத்தால போட்டி கொஞ்சநேரம் நிறுத்தப்பட்டுச்சு.
'ஜார்வோ 69' மாதிரி உள்ள ஊடுருவுற ஆட்களால பலதடவ போட்டி தடைபட்ருக்கு. சிலநேரங்கள்ல கார்ல, பைக்லகூட உள்ள வந்திருக்காங்க.
யார் ஜெயிக்கறாங்க, தோக்கறாங்கன்றதுகூட, காலப்போக்குல மறந்துடலாம். ஆனா, இப்படிப்பட்ட இடைஞ்சல்கள் வர்ற போட்டிகள், காலத்துக்கும் பேசப்படற நியூஸாகி, வியூஸ் வந்துட்டே இருக்கற வீடியோக்களாகும்.