90s Kids டைம்பாஸ்
Lifestyle

90s Kids Cricket: 'ப்ளேயர்ஸோட இந்த செண்டிமென்ட்ஸ கவனிச்சுருக்கீங்களா?' | Epi 4

மார்க் ராம்பிரகாஷ், இன்னிங்ஸ் முழுவதும், ஒரே பப்பிள்கம்மதான் மெல்லுவாரு. ஆட்டமிழக்காட்டி, அதே பப்பிள்கம்ம பேட்ல ஒட்டிவச்சுட்டு, அடுத்த நாளும் அதையே மெல்லுவாரு.

Ayyappan

நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும், ரெண்டெழுத்துதான் வித்தியாசம்னாலும், அர்த்தத்த வச்சுப் பார்த்தா, ஒளிவருஷக் கணக்குல தூரமிருக்கும். கிரிக்கெட்டர்கள்கிட்டயும், யாரையும் பாதிக்காத வெள்ளந்திப் பொய்களா, சில மூடநம்பிக்கைகள் இருந்திருக்கு.

90களோட பிற்பகுதில வந்த விகடனோட பின்அட்டைல, வாரம் ஒரு 3டி படம் வரும். கண்களால நுனிமூக்கப் பார்த்துட்டு அதப்பார்த்தா, அதுக்குள்ள ஒரு புகைப்படம் தெரியும். அதுக்கும் எனக்கும், ஒரு சின்ன டீல் இருக்கும்.

அதப்பார்க்கறப்போ, முதல் முயற்சிலயே, படம் தெரிஞ்சுடுச்சுன்னா, அதுக்கடுத்த வாரம் நடக்குற போட்டில இந்தியா ஜெயிக்கும்கிறது என் நம்பிக்கை. அங்க ஆரம்பிச்சது, கோலி, 71-வது சதம் அடிச்ச அன்னிக்குக் காலைல வச்ச அவரோட வால்பேப்பர மாத்த மனசில்லாதது வரைக்கும் தொடருது. நம்ம வீரர்களிடமும் திறமைமேல இருக்க நம்பிக்கை, மூடநம்பிக்கைகள் மேலயும் உண்டு. அதப்பத்தின ரவுண்ட் அப்தான் இது.

பேட், பேடு விஷயத்துலலாம், வீரர்களுக்கு செண்டிமெண்ட் அதிகம். கிரேக் ஈவன்ஸ் லெஃப்ட் பேடையும், டிராவிட் ரைட் பேடையும்தான் முதல்ல கட்டுவாங்க. கோலிகூட, ஆரம்பத்துல ஒரேஜோடி கையுறையத்தான் தொடர்ந்து பயன்படுத்துனாரு, ஒருகட்டத்துலதான் மாத்திட்டாரு.

மொஹிந்தர் அமர்நாத், ஜாகீர்கான், சுப்மன்கில்னு மூன்று தலைமுறையைச் சேர்ந்தவங்களும், குறிப்பிட்ட கைக்குட்டைய, ஃபீல்டுல வச்சுருப்பாங்க.

ஜயசூரிய, பந்தைச் சந்திக்கறதுக்கு முன்னாடி, கையுறை, ஹெல்மெட்டை செக் பண்ணுவார்னா, ஸ்டீவ் ஸ்மித், டான்ஸ் ஸ்டெப்ஸ் மாதிரி, லெஃப்ட் பேட, ரைட் பேட தொடறதுன்னு, ஆறு விஷயங்கள பண்ணிட்டுதான் பேட்டிங் பண்ணுவாரு.

ரன்அப்ப ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, மலிங்கா, பந்துக்கும், ஜயவர்தன அப்பப்போ பேட்டுக்கும் பாசமா கிஸ் பண்ணுவாங்க. வாஸ், கிராஸ் போடுவாரு.

111ன்றது நம்பர நெல்சன் நம்பர். ஸ்கோர்போர்ட்ல அது வர்றப்போ கெட்டது நடக்கும்னு பயமிருக்கு. அம்பயரானாலும், ஷெப்பர்ட், அதுவர்றப்போ, ஒரு கால்ல கொக்கா தவம் பண்ணுவாரு.

மார்க் ராம்பிரகாஷ், இன்னிங்ஸ் முழுவதும், ஒரே பப்பிள்கம்மதான் மெல்லுவாரு. அன்னைக்கு ஆட்டமிழக்காட்டி, அதே பப்பிள்கம்ம பேட்ல ஒட்டிவச்சுட்டு, அடுத்த நாளும் அதையே மெல்லுவாரு.

மார்க் டெக்கர் - கிராண்ட் ஃப்ளவர் ஆடறதுக்கு முன்னாடி, "உன் தலைல இன்னைக்கு அடிபடனும்"னு சொல்லிப்பாங்க.

க்ளார்க் ஆடப்போறதுக்கு முன்னாடி, ஒரு குறிப்பிட்ட பாட்டக் கேப்பாரு.

டீம் பஸ்ல வாசிம் ஜாஃபர் ஒரே இடத்துலதான் உட்காருவாரு.

நாமல்லாம், நம்ம அணி ஆடறப்போ, பொசிஷன் மாத்தாம அப்படியே உட்கார்றது, ஒரே டிரஸ் போடறதுன்னு பண்ணி இருப்போம்தானே? அப்படிதான் இதெல்லாம்.

1989 - சச்சின், பாகிஸ்தான் டூர்ல, தூக்கத்துலயே நடந்துபோய், டெலிவரி ஆகவேண்டிய பேட் பத்தி, மணீந்தர்கிட்ட விசாரிச்சாராம். இந்த அதிதீவிர Passion, 100 சதமடிச்ச திறமைகளும் இருந்தாலும், சச்சினுக்கும் செண்டிமெண்ட்கள் இருந்துச்சு.

லெஃப்ட் பேடை எப்பவும் முதல்ல கட்டுறது, 2006ல பாகிஸ்தானுக்கெதிரா, தோனி-யுவ்ராஜ் வெளுத்துட்டிருந்தப்போ, ஷவர்ல தொடர்ந்து குளிச்சுட்டே இருந்தது, 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டில, சேவாக்க இருந்த இடத்தவிட்டு நகரவிடாம பண்ணதுன்னு.

முன்னாடி சொன்ன விகடன் 3டிபிக்சர்ல சொன்னதுபோல, நிகழ்வுகள் ஒரே பேட்டர்னா மனசுல நின்னு, இப்படி செஞ்சாதான் இது நடக்கும்னு நம்மள நம்ப வைக்குற ஒரு உளவியல்தான் இது.
 
"இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்"னு ஜெயம் சதா மாதிரி கேட்காம, "யாருக்குமே தப்பு நடக்கலனா, எதுவுமே தப்பில்ல"னு ஃபாலோ பண்ண வேண்டியதுதான்....