கிரிக்கெட்
கிரிக்கெட்டைம்பாஸ்

தொடர்: 90-ஸ் கிட்ஸ் கிரிக்கெட் - கிரிக்கெட் கார்ட் அலப்பறைகள்

ஒரு கிரிக்கெட்டரப் பிடிக்கும்னு Wordல சொல்றதவிட, Cardல, எத்தனை கார்டு வச்சுருக்காங்கன்ற நம்பர வச்சுதான் நண்பர் உலகம் நம்பும்.

இந்திய 90-ஸ் கிட்ஸ ஹிப்னாடிசம் பண்ணி, அவங்க மெமரி யூனிட்ட சாவி போட்டு தொறந்து பார்த்தா, அதுல டாப்3-ல இருக்குறது,
கிரிக்கெட்,
கிரிக்கெட்,
கிரிக்கெட்தான்....

என்ன சாப்பாடு பிடிக்கும்னு கேட்டா "ஃபுட்டே பிடிக்கும்"னு ஃபுட்டீஸ் சொல்லுவாங்க. அதேபோல, கிரிக்கெட்டையே பிடிக்கும்னாலும், அந்தக் கெமிக்கல் பாண்டிங்க (Ponting இல்லேங்க, Bonding - பிணைப்பு) இன்னமும் ஸ்ட்ராங் ஆக்குனது, "Favouritism" - பிடிச்ச கிரிக்கெட்டருக்காகவே கிரிக்கெட் பாக்குறது.

வால்பேப்பர், எக்ஸ்டெண்டெட் மெமரினு எல்லா இடத்துலயும் அவங்களோட போட்டாவால நிரப்புறதுதான், இப்போ டிரெண்ட். எஸ்டி கார்டில்லா காலத்துல கிரிக்கெட் கார்டுதான், எல்லாமே.....

பப்பிள்கம் மெல்லப் பிடிக்காட்டினாலும், வாங்கியிருப்போம், அதுவும், எல்லா பிராண்ட்லயும். ஏன்னா, ஃப்ரியா கார்டு கிடைக்கும். அதுபோக, பஸ், ஸ்னாக்ஸ் காசுலாம் கார்டாதான் மாறும். ஒரு கிரிக்கெட்டரப் பிடிக்கும்னு Wordல சொல்றதவிட, Cardல, எத்தனை கார்டு வச்சுருக்காங்கன்ற நம்பர வச்சுதான் நண்பர் உலகம் நம்பும். புதுப்பட ரிலீஸப்போ முந்தியடிக்குற மாதிரிதான், ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்க கடைல கூட்டம் பிச்சுக்கும்.

கிரிக்கெட்
'Koffee with Modi' - இந்தியன் கிரிக்கெட் டீமுக்கு சில ஐடியாக்கள்

அதுலயும் சச்சின் கார்டுக்குதான், டிமாண்ட் அதிகம். வாங்கணும்னா, கடைக்காரரோட வெய்டிங் லிஸ்ட்ல பேர சேர்த்துட்டு வெய்ட் பண்ணனும். நியூட்ரல் ஃபேனா இருந்தாலும் ஆசை விடாது. பிளேயிங் லெவன்ல இருக்க எல்லாரோட கார்டையும் சேர்த்துடுவாங்க.

இந்த கார்ட பத்திரப்படுத்துறதுக்குல்ல படுறபாடுதான், கொடுமை. வீட்ல வைக்கலாம்னா, "காசை கார்டாக்குறயா"னு, தர்ம அடி சர்வநிச்சயம். சரி, ஸ்கூல்ல வைக்கலாம்னா, அதுமேல ரொம்ப நாளா குறிவச்சிருக்க ஆந்தைக்கண் நண்பர்கள், டிரெ‌ஸர் ஹண்ட் ஆடிருவாங்க.

கங்காரு குட்டிய தூக்கிட்டு சுத்துற மாதிரிதான், பாக்கெட்லயே வச்சுக்கணும். தலையணைக்கு அடியில, புத்தகத்துக்கு நடுவுலனு, பதுக்கணும். பொண்ணுங்கதான் இன்னும் பாவம், டிராவிட், அஜய் ஜடேஜா மாதிரி வீரர்களோட கார்டுலாம், Piggy Bankலதான் போடுவாங்கன்றது, காத்துவாக்குல வந்தசேதி.

ஐபிஎல்ல பிளேயர்கள டிரேடிங் பண்ற மாதிரி, அப்போலாம் ஃப்ரெண்ஸுக்குள்ள கார்டுங்க டிரேடிங் ஆகும். சென்டர் ஃப்ரெஷ் கார்டு 10 கொடுத்தா, க்ளாரிட்டியோட இருக்க பெப்ஸியோட பெரிய கார்ட ஒன்னு வாங்கிக்கலாம். எட்டாவது ஸ்டாண்டர்லயே இதுக்காக என்னோட நண்பனோட மூன்றாவது உலகப்போர் அளவுக்குலாம் ஃபைட் வந்து, 2 வருஷம் கழிச்சுதான் சமாதானமே ஆச்சு... அந்தளவுக்கு இந்தக் கார்டுகள் எல்லோருக்கும் முக்கியமா இருந்துச்சு.

கிரிக்கெட்டர்களோட Stats தெரிய வெப்சைட்டுகள் இல்லேன்றதால, கிரிக்கெட் கார்டுகள்தான், தகவல் பலகைகள். அதுலயும், 1999 உலகக்கோப்பைகாக சிறப்பு சீரிஸ் கார்டுகள், Guts and Glory கார்டுலாம், வெறித்தனமா சேர்த்திருப்போம். பின்னாடி வந்த ஹாலோகிராம் கார்டுகள்ல, ஒரு ஆங்கிள்ல பிளேயரும் இன்னொரு கோணத்தில, அவங்களோட பௌலிங் ஆக்ஷனோ, பேட்டிங் ஷாட்டோ இருந்ததுகூட ஆச்சரியப்படுத்துச்சு.

கிரிக்கெட்
கிரிக்கெட்ல அரசியல் பண்ணலாமா?

நோட்டு, லேபில், பரிட்சை அட்டை, ஸ்டிக்கர்னு ஏதோ ஒரு வகையில அவங்கள நம்மகூடவே வச்சிட்டு இருந்தோம். ரூம் ஃபுல்லா அவங்களோட ஃப்ளோஅப் ஒட்டி, அவங்க முகத்துலதான் முழிப்போம். ஃப்ரெண்ட்ஸ் அனுப்புற க்ரீட்டிங் காட்டுல எப்போவாச்சும் நம்ம ஃபேவரைட் கிரிக்கெட்டர் ஃபோட்டோ வரும், அதுதான் உண்மைலயே பெரிய பண்டிகை.

இப்படி ஏதோவொரு வகையில, அவங்க, நம்மளோட வாழ்க்கையோட ஒவ்வொரு அங்குலத்திலயும் அங்கத்தினர்கள்தான்....

தன்னோட ஃபேவரைட் மேல் இருக்க பிரியத்த நிருபிக்க சோசியல் மீடியால இப்போலாம் நடத்துற ஆர்ம்ரெஸ்ட்லிங் இல்ல இது. முகம்கூட மறந்துட்ட முதல் காதலோட கலப்படமில்லாத அன்போட உச்சம்.....

கால இயந்திரத்த வாடகைக்கு எடுத்தாவது, 90-ஸுக்கு ஒருநடை போய், எப்படி தங்களுக்குப் பிடிச்ச கிரிக்கெட்டர்கள ரசிகர்கள் ஆராதிக்கிறாங்கன்னு பார்த்துட்டு வாங்க!!!!

நிகழ்காலம் போல இல்ல, அது ஒரு அழகிய நிலாக்காலம்.....

Related Stories

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com