Pakistan  டைம்பாஸ்
Lifestyle

Pakistan : ஒரே நாளில் அனைவருக்கும் பிறந்தநாள் - Guinness Record வாங்கிய குடும்பம் !

குடும்பத்துல இருக்க 9 பேருக்குமே ஆகஸ்ட் 1 தான் பிறந்தநாள். அதுமட்டுமில்லாம, அமிர்-க்கும் குதேஜா-க்கும் கல்யாணம் ஆனதும் இதே ஆகஸ்ட் 1 தானாம் !

ராதிகா நெடுஞ்செழியன்

பொதுவா ஒரு குடும்ப உறுப்பினர்கள்னு எடுத்துகிட்டா அவங்களுடைய இரண்டாவது பெயர் ஒன்னா இருந்து பார்த்திருப்போம். ஆனா பாகிஸ்தான்ல இருக்க ஒரு குடும்பத்த சார்ந்த 9 உறுப்பினர்களுக்கு ஒரே நாள்ல பிறந்தநாளாம்.

ஒரே குடும்பத்துல இருக்குற ஒன்பது பேருக்கும் ஒரே நாள்ல பிறந்தநாள் அப்டின்றதே ஆச்சரியமான விஷயம். அதையும் தாண்டி இந்த குடும்பத்துல இருக்க அப்பா அம்மாவுக்கு கல்யாணம் ஆனதும் அதே நாள்ல தானாம் !

பாகிஸ்தான், லர்கானால இருக்க மங்கி குடும்பத்த சேர்ந்தவங்க தான் இந்த குடும்பத்தினர். அப்பா, அம்மா 7 குழந்தைகள்னு இந்த குடும்பத்துல மொத்தம் 9 பேர். அப்பா அமிர் அலி, அம்மா குதேஜா, இவங்க பிள்ளைகளுக்கு 19- 30 வயது வரை இருக்கும். அம்மா, அப்பா, இரண்டு இரட்டையர்கள், அது இல்லாம 3 பிள்ளைகள் சேர்ந்தது தான் இந்த குடும்பம்‌‌.

இந்த குடும்பத்துல இருக்க 9 பேருக்குமே ஆகஸ்ட் 1 தான் பிறந்தநாள். அதுமட்டுமில்லாம, அமிர்-க்கும் குதேஜா-க்கும் கல்யாணம் ஆனதும் இதே ஆகஸ்ட் 1 தானாம் !

ஒரே நாள்ல பிறந்த குடும்ப உறுப்பினர்கள்ன்ற உலக சாதனையையும் இந்த குடும்பம் படச்சுருக்கு. இது எதுவுமே ஃப்ளான் எதுவுமே பண்ணாம நடந்ததா அமிர் சந்தோஷமா சொல்றாரு. அமீர் குதேஜா தம்பதிக்கு ஆகஸ்ட் 1, 1991 ஆம் ஆண்டு கல்யாணம் ஆயிருக்கு. 1992, அதே ஆகஸ்ட் 1ஆம் தேதி இவங்களுடைய முதல் குழந்தை பிறந்திருக்கு. இந்த விஷயத்த எதர்ச்சியா நடந்ததா நினைச்ச தம்பதிக்கு அடுத்ததா ஆச்சரியம் காத்திருந்தது..

அவங்களுடைய அடுத்த குழந்தையும் அதே ஆகஸ்ட் 1ம் தேதி தான் பிறந்திருக்கு. அடுத்தடுத்து அவங்களுடைய எல்லா குழந்தைகளும் அதே ஆகஸ்ட் 1ம் தேதியில பிறந்ததை பார்த்து அமிர்- குதேஜா தம்பதிக்கு ஆச்சரியம் தாங்கல.

இப்படி குடும்பத்துல இருக்க எல்லாருக்கும் ஒரே நல்ல பிறந்தநாள் அமைஞ்சது கடவுள் கொடுத்த வரம்னு அமர் நெகிழ்ச்சியா சொல்றாரு. அப்படி பார்த்தா இந்த குடும்பத்துல ஒரே நாள்ல ஒவ்வொருத்தரும் ஒன்பது ஹாப்பி பர்த்டே ஸ்டேட்டஸ் வைக்கனும் போல !!