Haryana : திருமணம் ஆகாதவர்களுக்கு Monthly Pension - ஹரியானா பாஜக அரசு அதிரடி !

45 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணமாகாதவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், அவர்களுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் வழங்கப்படும்.
Haryana
Haryana Haryana

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் முதியோர்களுக்குm கைம்பெண்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது. இந்த தொகை அவர்களுக்கு பொருளாத அளவில் சிறிது உதவியிருக்கிறது. 

இந்நிலையில் ஹரியானாவில் இதுபோன்ற இன்னொரு திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி திருமணமாகாதவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,750 பணம் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல், ஹரியானாவில் 45 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணமாகாதவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், அவர்களுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை பெற வேண்டும் என்றால் இதற்கு பல வழிமுறைகளும் உள்ளது.

1. 45 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

2. திருமணமாகாதவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

Haryana
Samantha : சினிமாவுக்கு தற்காலிகமாக டாடா காட்டும் சமந்தா - காரணம் இதோ !

இது குறித்து முதலமைச்சர் கட்டார் கூறுகையில், “ஒரு தனி ஆண், பெண் யாராக  இருந்தாலும்,அவர்களுக்கு சில தனிப்பட்ட தேவைகளும் உண்டு, அதனால் இந்த மாதாந்திர தொகையுடன் சேர்த்து அரசாங்கத்திலிருந்து சில உதவிகளும் கிடைக்கும்” என்றார்.

இந்த திட்டத்துடன் சேர்த்து கூடுதலாக ரூ.240 கோடியையும் மாநில அரசு இந்த திட்டத்திற்காக ஏற்கும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

மாநிலத்தில் 65,000 திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் 5,687 கைம்பெண்கள் குறிப்பிட்ட வயது மற்றும் வருமான வரம்பிற்குள் உள்ளனர். இவர்கள் 60 வயதை அடைந்தவுடன், முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆண்டு வருமானத்தில் இருந்தால் அவர்கள் தானாகவே முதியோர் ஓய்வூதியத்தைப் பெற முடியும் என்று கூறினார்.

மேலும், "திங்கள்கிழமை முதல், அனைத்து பதிவு செய்யப்பட்ட விண்ணப்ப வேலைகள் தானாகவே நடைபெறும் என்றும் மக்கள் சில திட்டங்களை பெற பல மாதங்கள், சில ஆண்டுகள் கூட காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், இனி புதிய முயற்சியின் மூலம், விண்ணப்பம் செய்யப்பட்டவுடன், அது மாநில அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும். யார் வேண்டுமானாலும் அதை போர்ட்டலில் பார்க்கலாம். பதிவுசெய்யப்பட்ட இந்த விண்ணப்பத்திற்கு யாராவது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால், அவர் 10 நாட்களுக்குள் அதைச் செய்யலாம். 10 நாட்களுக்குள் போர்ட்டலில் எந்த ஆட்சேபனையும் வரவில்லை என்றால், அடுத்த கட்ட வேலைகள் தானாகவே செய்யப்படும்” என்றும் கட்டார் கூறினார்.

Haryana
பள்ளிக் காதலிக்கு ப்ரபோஸ் செய்த 78 வயது மருத்துவர் - வைரலாகும் காதல் வீடியோ!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com