LinkedIn timepass
Lifestyle

LinkedIn : என்ன மனுஷிடா! - Delivery Boyக்காக வேலை கேட்ட பெண்!

டெலிவரி பாயுடைய சூழ்நிலைய புரிஞ்சுகிட்ட ப்ரியன்ஷி, அவரு‌ ECE graduate அப்படிங்கிறதால LinkedIn தளத்துல அவருக்கு தகுதியான வேலை வாய்ப்பு கிடைக்கணும்னு ஒரு பதிவையும் போட்டு இருக்காங்க.

ராதிகா நெடுஞ்செழியன்

LinkedIn அப்படின்ற வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர தளத்துல டெலிவரி பாய் உடைய சூழ்நிலைய சொல்லி அவருக்கான சரியான வேலைய கொடுக்க சொல்லி ப்ரியன்ஷி அப்படிங்கிற பெண் கேட்டிருக்காங்க.‌‌ அவருக்கான சரியான வேலையும் கிடைச்சிருக்கு.

ப்ரியன்ஷி, ஸ்விக்கி மூலமா ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணியிருக்காங்க. டெலிவரி பாய் ஆர்டரோட வரதுக்கு ரொம்பவே தாமதமாச்சி. ஒரு வழியா, ப்ரியன்ஷி ஆர்டர் பண்ண ஐஸ்கிரீம் வந்துச்சு. கதவை திறந்து பாத்தா அந்த டெலிவரிபாய் படிக்கட்டுல உட்கார்ந்து, மூச்சு வாங்குறதுக்கு கூட சிரமப்பட்டு, ரொம்ப டயர்டா இருந்தாரு. ப்ரியன்ஷி, அந்த டெலிவரி பாய் கிட்ட, "என்ன ஆச்சு ?" அப்படின்னு கேட்டாங்க. இப்போதான் டெலிவரி பாயோட கதையே ஆரம்பிக்குது !

"மேடம் என்கிட்ட வண்டி இல்ல. நீங்க கேட்ட ஆர்டரை சீக்கிரமா கொண்டு வர, எந்த வாகன வசதியும் இல்ல. மூணு கிலோ மீட்டர் நடந்து வந்து தான், இந்த ஆர்டர் உங்க கிட்ட டெலிவரி கொடுத்திருக்கேன். என்கிட்ட கொஞ்சம் கூட பணம் கிடையாது‌‌. என்னோட ஃப்ளாட்ல என்கூட இருந்தவரு என்கிட்ட இருந்த கொஞ்சம் பணத்தையும் எடுத்துட்டு போய்டாரு‌‌. இப்போ எனக்கு 235 ரூபாய் கடன் தான் இருக்கு."

"நான் இருக்க பிளாட்டுக்கான வாடகை பணத்த கொடுக்கிறதுக்கு கூட என்கிட்ட காசு இல்ல. நான் பொய் சொல்றேன்னு நீங்க நினைக்கலாம் ! ஆனா நான் ECE படிச்ச ஒரு Graduate. கொரோனாக்கு முன்னாடி Byju'sல வேலையும் பாத்து இருக்கேன். அதுமட்டு இல்லாம நீங்க ஆர்டர் கொடுத்த இந்த ஐஸ்கிரீம டெலிவரி பண்றதுனால 20-25 ரூபாய் தான் எனக்கு கிடைக்கும்.

12 மணிக்குள்ள இன்னொரு ஆர்டர் எடுத்து ஆகணும். இல்லனா ரொம்ப தூரத்துல எனக்கு டெலிவரி பண்றதுக்கு ஆர்டர் கொடுத்துடுவாங்க. அப்படி டிராவல் பண்றதுக்கு என்கிட்ட வண்டி வசதியும் இல்லை. ஒரு வாரமா நான் எதுவுமே சாப்பிடல. தண்ணீர், டீ மட்டும் தான் குடிச்சிட்டு இருக்கேன். என்னோட அப்பா, அம்மாவுக்கும் ரொம்ப வயசாயிடுச்சு.‌ அவங்க கிட்ட என்னால காசும் கேக்கமுடியல" அப்படின்னு அந்த டெலிவரி பாய் வருத்தத்தோட சொல்லியிருக்காரு.

டெலிவரி பாயுடைய சூழ்நிலைய புரிஞ்சுகிட்ட நம்ம ப்ரியன்ஷி, அவருக்கு ஒரு கிளாஸ் தண்ணியும், 500 ரூபாய் பணமும் கொடுத்திருக்காங்க. அதுமட்டுமில்லாம அவரு‌ ECE graduate அப்படிங்கிறதால LinkedIn தளத்துல அவருக்கு தகுதியான வேலை வாய்ப்பு கிடைக்கணும்னு ஒரு பதிவையும் போட்டு இருக்காங்க.

ப்ரியன்ஷி, கூடவே அந்த டெலிவரி பாய் உடைய டிகிரி சர்டிபிகேட் மற்றும் மத்த ஆவணங்கள போஸ்ட்ல போட்டு இருக்காங்க.‌ இந்த போஸ்ட பாத்த நெடிசன்ஸ் டெலிவரி பாய்க்கு, பல விதத்துல உதவியிருக்காங்க. கூடவே டெலிவரி பாய்க்கு வேலையும் கிடைச்சிருக்கு. ப்ரியன்ஷி போட்ட அந்த போஸ்ட் உடைய அப்டேட்ல, "டெலிவரி பாய்க்கு வேலை கிடைக்க உதவி பண்ண எல்லாருக்கும் நன்றி, இதுக்கு உதவி பண்ண எல்லாருமே க்ரேட் !!"னு போட்டிருந்தாங்க.

நாம கடந்த வர மனிதர்கள்ல எத்தனையோ பேரு, அவங்க கிட்ட தகுதியும் திறமையும் இருந்தும், சூழ்நிலை காரணமா ஏதோ ஒரு வேலைய பண்ணிட்டு இருப்பாங்க. அதை கண்டுக்காம போகாம அதை சீரியஸா எடுத்து டெலிவரி பாய்க்கு ஒரு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்காங்க ப்ரியன்ஷி.

ப்ரியன்ஷியுடைய இந்த செயலையும் நெட்டிசன்ஸ் டெலிவரி பாய்க்கு பண்ண உதவிகளையும் நினைச்சு பாக்கும்போது, "என்ன மனுசங்கடா!!" அப்படின்னு தான் தோணுச்சு.