South Korea
South Korea timepass
Lifestyle

South Korea : தென் கொரியா மக்களின் வயது பின்னோக்கி போகிறதா? - என்னவா இருக்கும்‌ ?

ராதிகா நெடுஞ்செழியன்

தென் கொரியா மக்களுடைய வயத கணக்கெடுக்க பாரம்பரியமா தென் கொரியா அரசாங்கம் ஒரு முறைய பின்பற்றுவாங்க. இந்த முறையதான் இப்போ மாற்றி அமைச்சிருக்காங்க. அவங்க பாரம்பரியமா பின்பற்றக்கூடிய முறைய சர்வதேச தரத்துக்கு மாத்தியிருக்காங்க. இதனால தென்கொரியா மக்கள் எல்லாருக்கும் ஒன்றிலிருந்து இரண்டு வயது வரைக்கும் குறஞ்சிருக்கு.

குழந்தைங்க தாயுடைய வயிற்றுல செலவிடக்கூடிய பத்து மாதங்கள ஒரு வயதா கணக்கிடுவாங்க. அப்படி கணக்கிடும் பொழுது குழந்தை பிறந்த உடனே அந்த குழந்தைக்கு ஒரு வயதா இருக்கும். இதுதான் தென்கொரியர்கள் பாரம்பரியமா வயத கணக்கெடுக்கறதுக்கு பயன்படுத்துற முறை.

கூடவே பிறந்தநாள் அன்னைக்கு வயது ஏறாம, ஒவ்வொரு ஜனவரி 1ஆம் தேதி அதாவது வருடத்துடைய முதல் நாள் தான் அவங்களுடைய வயதும் ஏறும். இப்படி ஜனவரி 1ஆம் தேதி வயது ஏறுறதால, டிசம்பர் 31 பிறக்குற‌ குழந்தைக்கு ஜனவரி 1ஆம் தேதி இரண்டு வயதாக இருக்கும்.

ஆனா, சர்வதேச முறைப்படி குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆனதுக்கு அப்புறம்தான் அந்த குழந்தைக்கு ஒரு வயசு ஆகும். இந்த சர்வதேச வயது கணக்கெடுப்பு முறையதான் தென் கொரியா மக்களும் பின்பற்றணும்னு சட்டத் திருத்தத்த கொண்டு வந்திருக்கு தென் கொரியா அரசாங்கம் .

2022 செப்டம்பர்ல நடத்தப்பட்ட அரசாங்க கணக்கெடுப்பு படி, 86 % மக்கள் சர்வதேச முறையில வயத கணக்கெடுக்கவும் அன்றாட வாழ்க்கையில பயன்படுத்தவும் விருப்பம் தெரிவிச்சிருக்காங்க.

இதனால, தென் கொரியா போன டிசம்பர்ல பாரம்பரிய முறைய கைவிட்டு, சர்வதேச தரத்தை முழுமையா பின்பற்ற தேவையான சட்டத்த நிறைவேற்றிடுச்சு. இதனால தான் தென்கொரியா மக்கள் எல்லாருக்கும் ஒன்றிலிருந்து இரண்டு வயது வரைக்கும் குறைஞ்சிருக்கு.