Swiss : உலகின் மிக விலை உயர்ந்த வீட்டை வாங்கிய இந்திய வம்சாவளி குடும்பம் !

4.2 லட்சம் சதுர அடியில இந்த அழகான பங்களா கட்டபட்டிருக்கு. 200 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்புல ரூ.1649 கோடி கொடுத்து தான் ஓஸ்வால் தம்பதி இந்த வீட்ட வாங்கியிருக்காங்க.
Swiss
SwissSwiss

உலகின் மிக விலை உயர்ந்த வீடுகளில் ஒரு வீட்டை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பம் வாங்கியுள்ளது.

"வில்லா வாரி" அப்படின்னு பெயரிடப்பட்டிருக்க இந்த விலை உயர்ந்த வீட்ட இந்திய வம்சாவளிய சேர்ந்த கோடீஸ்வரரான பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவருடைய மனைவி ராதிகா ஓஸ்வால் வாங்கியிருக்காங்க. சுவிட்சர்லாந்துல இருக்க ஜெனீவால இருந்து 15 நிமிட தூரத்துல ஜிங்கின்ஸ் கிராமம் இருக்கு. இந்த அழகான கிராமத்துல தான் வில்லா வாரி வீடு அமஞ்சிருக்கு‌.

4.2 லட்சம் சதுர அடியில இந்த அழகான பங்களா கட்டபட்டிருக்கு. உலகத்தில் இருக்க மிக விலை உயர்ந்த 10 வீடுகள்ல இந்த வீடும் ஒன்னு. 200 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்புல ரூ.1649 கோடி கொடுத்து தான் ஓஸ்வால் தம்பதி இந்த வீட்ட வாங்கியிருக்காங்க.

Swiss
'ரெண்டு பேருக்கும் பிடிச்சா எதுவும் தப்பில்ல' - நான் நிருபன் தொடர்-3

கிரேக்க கப்பல் அதிபரான அரிஸ்டாட்டில் ஓனாசிஸ்சுடைய மகளான கிறிஸ்டினா ஓனாசிஸ்க்கு சொந்தமானதா தான் இந்த வீடு இருந்துச்சு. அதுக்கப்புறம் ஓஸ்வால் தம்பதி இவங்ககிட்ட இருந்து இந்த பிரம்மாண்டமான வீட்டை விலை கொடுத்து வாங்கியிருக்காங்க. வாங்கின வீட்டை மறுசீரமைப்பு செஞ்சு அவங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி மாத்தி அமைச்சிருக்காங்க.

ஓபராய் ராஜ்விலாஸ், ஓபராய் உடைவிலாஸ் மற்றும் லீலா ஹோட்டல் போன்ற சொத்துக்கள அழகுபடுத்துன பிரபல கட்டட வடிவமைப்பாளரான ஜெஃப்ரி வில்கஸ் தான் இந்த வீட்ட புதுப்பிச்சிருக்காரு.

இந்த விலை உயர்ந்த வீட்ட வாங்கியிருக்க பங்கஜ் ஓஸ்வால், ஒஸ்வால் அக்ரோ மில்ஸ் மற்றும் ஓஸ்வால் கிரீன் டெக் போன்ற நிறுவனங்களுடைய நிறுவனரான அபய் குமார் ஓஸ்வால்யுடைய மகன். தி ஓஸ்வால் குரூப் குளோபல் நிறுவனத்தை வழி நடத்திட்டு இருக்க பங்கஜ் ஓஸ்வால் பெட்ரோ கெமிக்கல்ஸ், உரங்கள், சுரங்கத் தொழில், ரியல் எஸ்டேட் மாதிரியான தொழில்கள்லயும் ஈடுபட்டு இருக்காரு.

Swiss
Wifi, முதலுதவி, Snacks, Tissue என எல்லாம் இலவசம் - அசத்தும் Uber Driver !

பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவருடைய மனைவியான ராதிகா ஓஸ்வால் ஆஸ்திரேலியால இருந்து குடிப்பெயர்ந்து பத்து ஆண்டுகளா ஸ்விட்சர்லாந்துல அவங்களுடைய இரண்டு மகள்களான வசுந்தரா மற்றும் ரெடி கூட இருக்காங்க.

இந்த ஓஸ்வால் குடும்பத்துடைய நிகர மதிப்பு மூன்று பில்லியன் டாலருக்கும் மேல இருக்குமாம் . அது மட்டும் இல்லாம தனியார் ஜெட், படகு, ஸ்போர்ட்ஸ் கார்களான லம்போர்கினி, பென்ட்லி போன்ற சொத்துக்கள்ல இந்த குடும்பம் வச்சிட்டிருக்கு. கூடவே உலகம் முழுக்க ஆடம்பரமான பல சொத்துக்களையும் இவங்க வச்சிருக்காங்க.

இந்த பிரம்மாண்டமான வில்லா லாரி வீடு நமக்கென்னமோ பிரமாண்டமா தான் இருக்கு. பிரமாண்டமா வாழ்ற இவங்களுக்கு இது பத்தோட பதினொன்னா தான் இருக்கும்.

Swiss
Udhayanidhi : உதயநிதியின் Pet Dog பெயர் என்ன தெரியுமா?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com