Cricket
Cricket டைம்பாஸ்
Lifestyle

IPL, SA20, ILT20, BBL, BPL : அதிகரிக்கும் T20 Leagueகள் - Cricketஐ அழிக்கிறதா, வளர்கிறதா?

Ayyappan

கிரிக்கெட் காலண்டரோட நாட்களை மிச்சம் மீதியே வைக்காம தின்னு செரிச்சுட்டு இருக்கு டி20 லீக்குகள்!

அழகர் திருவிழா மாதிரி ஐபிஎல் ஆரம்பிச்சு களை கட்டப் போகுது. ஆனா ராஜாவுக்கு முன்பாக வர்ற பரிவாரங்களாக மற்ற நாட்டோட டி20 லீக்குகள் ஊர் பக்கம் நடக்குற திருவிழாக்கள் மாதிரி கேப்பே விடாம நடந்து ரசிகர்கள தெளிய விடாம திணற அடிச்சுட்ருக்கு.

ஆஸ்திரேலியா நடத்துற பிக் பேஷ் லீக், அரபு எமிரேட்ஸ் நடத்துற இண்டர்நேஷனல் லீக் டி20, பங்களாதேஷோட ப்ரீமியர் லீக், பாகிஸ்தானோட ப்ரீமியர் லீக், தென்னாப்பிரிக்காவோட டி20 லீக், மேற்கிந்திய நாடுகள்ல நடக்குற கரீபியன் ப்ரீமியர் லீக், லங்கா ப்ரீமியர் லீக்னு திரும்புற பக்கம்லாம் திருவிழா தான். சரி ஏன் கடந்த 20 வருடங்கள்ல இந்த அளவில் எல்லா நாடுகளும் போட்டி போட்டு டி20 லீக்குகள நடத்துறாங்க? இது ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?

'Talent Hunt'ன்றது தான் ஐபிஎல்லோட அடிப்படை சாராம்சம். அதோட அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட எல்லா டி20 லீக்குகள்லயும் வியாபார நோக்கத்தைத் தாண்டி இந்த எண்ணம் ஒளிஞ்சுட்டுதான் இருக்குது. என்னதான் டொமெஸ்டிக் கிரிக்கெட் தொடர்களும், கவுண்டி போன்ற தளங்களும் இருந்தாலும் Instant ஆக திறமை வெளிப்படணும்னா ஓவர் நைட்ல உலகப்புகழ் கிடைக்கணும்னா அதுக்கு டி20 லீக்குகள்தான் ஒரே வழி. ஐபிஎல் டு இந்தியன் கிரிக்கெட் டீம்ன்ற பாதைல பலரும் பயணிச்சுருக்காங்க. மற்ற நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

ரெண்டாவதாக இந்த அணி நிர்வாகம் அந்தந்த வீரர்களுக்காக ஏற்படுத்தி தர்ற கிரிக்கெட் சார்பான வசதிகள். அவங்களோட திறனை வளர்த்துக் கொள்வது மாதிரியான வாய்ப்புகளை தகுதி வாய்ந்த உலகத் தரம் வாய்ந்த பயிற்சியாளர்கள் வாயிலாக உண்டாக்கிக் கொடுக்கறாங்க. நடராஜன், உம்ரான் மாலிக் போன்ற எளிய நிலைல இருந்து வர்ற வீரர்களை ஸ்டெய்ன் மாதிரி மலிங்கா மாதிரி சாதித்த பௌலர்களோட இந்த டி20 லீக்குகள் தான் இணைக்குது.

இதோடு கூட வெவ்வேறு களங்கள்ல வெவ்வேறு வீரர்களோட ஆடுற அனுபவத்த இந்த டி20 லீக்குகள் கொடுக்குது. இந்தியக் களங்களை ஆஸ்திரேலியா எவ்வளவு தெளிவாக ஐபிஎல் மூலமாக அறிஞ்சு வச்சிருக்காங்கன்றதுக்கு போன உலகக்கோப்பையே ஒரு உதாரணம். இந்திய வீரர்களை வேறு டி20கள்ல ஆட அனுமதிங்கன்ற கோரிக்கை பிசிசிஐ நோக்கி நீண்டதுக்கும் இந்த டி20 லீக்குகள் தர்ற பழுத்த அனுபவம்தான் காரணம்.

இதையும் தாண்டி கொழுத்த லாபத்தை கிரிக்கெட் போர்டுகளுக்கு இந்த டி20 லீக்குகள் கொடுக்குது. மீடியா உரிமைகள்னு இன்னொரு பக்கம் லாபம் சம்பாதிக்குது. ஒவ்வொரு போட்டிக்கும் வர்ற வருமானம், ஸ்பான்சர்ஷிப் டீல்கள் வாயிலாக கிடைக்குற அனுகூலங்கள் தவிர்த்து நெருக்கடிகள் இல்லாத ஒரு ரிலாக்ஸான டூர் மாதிரி இது வீரர்களுக்கு அமையுது.

இதுல பாதகங்களும் இல்லாமல் இல்லை. மேற்கிந்தியத் தீவுகள் டீமே உடைஞ்சு போற அளவு இருக்குற வீரர்கள் எல்லாம் டி20 லீக்குகள் பக்கம் போய்ட்டாங்க. டி20 ஃபார்மட்லயே ஆடிப் பழகிய வீரர்கள் டெஸ்ட் ஃபார்மட் ஆடவே யோசிக்கிறாங்க.

இங்கிலாந்தோட வில் ஜாக்ஸ் இந்தியா - இங்கிலாந்து டெஸ்டைப் புறக்கணிச்சுட்டு டி20 லீக்கள் பக்கம் ஓடுவதும் அதே காரணத்தாலே தான். டி20 டெஸ்டோட குரல்வளைய நெறிக்குதுன்னு சொல்லப்படறதும் அதனாலே தான்.

ஆக, மொத்தம் குடை காளான் மாதிரி திரும்புற பக்கம்லாம் முளைச்சிருக்க டி20 லீக்குகளால நன்மைகளும் இருக்கு கூடவே இலவச இணைப்பாக சில பின்விளைவுகளும் சேர்ந்தே தான் வருது.