பேட்ஸ்மேன் டைம்பாஸ்
Lifestyle

90s Kids Cricket: பேட்ஸ்மேன்களும் பேட்களும் | Epi 10

Kookaburra பேட்டுகள், ஆஸ்திரேலியால உருவானது, பேட்டிங் பீஸ்டுகளுக்கானது. பாண்டிங், ஜயசூரிய, ஹசி, கில்கிறிஸ்ட், டாமியன் மார்ட்டின், ஏபிடி வில்லியர்ஸ், சங்கக்காரானு பலரும் இதப் பயன்படுத்திருக்காங்க.

Ayyappan

"பேட் என்னோட விளையாட்டுப் பொருளல்ல, ஆயுதம்"னு, கோலி ஒருதடவ சொல்லிருப்பாரு. ஜயசூரியவோட ஸ்ப்ரிங்பேட் ரூமர்ல இருந்து, மேத்யூ ஹெய்டனோட மங்கூஸ் பேட் வரைக்கும்னு 90-ஸ் கிட்ஸோட வாழ்க்கையோட ஒவ்வொரு சென்டிமீட்டரையும், கிலோமீட்டர் கணக்குல பேட்டுகளைப் பத்திய நினைவுகளும், அதுல ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களும் ஆக்கிரமிச்சுருக்கு.

அதுவும், வீரர்களோட முகத்தப் பாக்காமலே, அவங்க கைல வச்சுருக்க பேட்ல இருக்க ஸ்டிக்கர வச்சே, அவர் இவராக இருக்கலாம்னு நாம் கண்டுபிடிச்சுருக்கோம்.

நம்ம வாழ்க்கையில வர்ண ஜாலம் பதிச்ச அந்த ஸ்டிக்கர்களையும் அதப் பயன்படுத்துன வீரர்களப் பத்தியும்தான் ரீவைண்ட் பண்ணப் போறோம்.....

Gray Nicholls பேட்டுகள், ராயல் லுக் கொண்டவை. இங்கிலாந்துல தயாரிக்கப்பட்ட இந்த பேட்டுகள, ஆலன் பார்டர், கிரெக் செப்பல், போன்ற ஆஸ்திரேலிய பிரபலங்கள் பயன்படுத்திருக்காங்க. அதுக்கப்புறம், ஹெய்டன், குக், சந்தர்பால், ஸ்ட்ராஸ்ல இருந்து வார்னர் வரை இதவச்சு ஆடிருக்காங்க. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டுகளோட அபிமான பேட் இது.

Gunn and Mooreனு அழைக்கப்பட்ட ஜிஎம் பேட்டுகள் இன்னுமொரு இங்கிலாந்து ப்ராடெக்ட். ஸ்டீவ் வாக் இத யூஸ் பண்ணி 25 டெஸ்ட் சதங்கள அடிச்சுருக்காரு. லாங்கர், மைக்கேல் வாகன், கிப்ஸ், ஸ்டீஃபன் ஃப்ளமிங், க்ரீம் ஸ்மித்னு பலரும் இத சுத்த விட்டிருக்காங்க.

Kookaburra பேட்டுகள், ஆஸ்திரேலியால உருவானது, பேட்டிங் பீஸ்டுகளுக்கானது. பாண்டிங், ஜயசூரிய, ஹசி, கில்கிறிஸ்ட், டாமியன் மார்ட்டின், ஏபிடி வில்லியர்ஸ், சங்கக்காரானு பலரும் இதப் பயன்படுத்திருக்காங்க. பாண்டிங், இந்த பேட் தனக்கு ரொம்ப உணர்வுப்பூர்வமானதும்னும், தான் அடிக்கற சதங்கள, அந்த பேட்களோட ஹேண்டிலோட க்ரிப்புக்கு அடில குறிச்சு வைக்கிற பழக்கத்த, தன்னோட கரியரோட பின்பகுதில ஏற்படுத்திக்கிட்டதா சொல்லி, 2005 ஆஷஸ்ல, தான் 156 ரன்கள அடிச்ச Kookaburra பேட்டோட ஃபோட்டோவ ஷேர் பண்ணாரு.

Slazenger பேட்டுகள விவியன் ரிச்சர்ட்ஸ், ஆலன் பார்டர், மார்க் வாக், காலீஸ்லாம் பயன்படுத்திருக்காங்க. இந்தியாவுக்கெதிரா தன்னோட முதல் டெஸ்ட் சதத்த, மைக்கேல் க்ளார்க் அடிச்சு, இந்த பேட்டத் தூக்கிக் காட்டுனத மறக்க முடியுமா?

Spartan பேட், மைக்கேல் க்ளார்க், தோனி, வார்னர், கெய்ல்ன்ற ஆளுமைகளால பிரபலமாச்சு.

பேட் தயாரிக்கற இந்த நிறுவனங்களோட பேட்டவிட, அதிக கிரேஸ் இருந்தது, ஸ்பான்சர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பேட்டுகளுக்குத்தான்.

MRF, தங்களோட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டப் பயன்படுத்த இப்போ கோலிக்கு, 8 வருஷத்துக்கு 100 கோடி கொடுத்துருக்கு. ஸ்டார் பேட்ஸ்மேன்கள  தங்களோட விளம்பரத்தூதுவராக்குறது, அவங்களுக்கு புதிதல்ல. அதுவும் இதப் பயன்படுத்துன எல்லாருமே ரன் மிஷின்களா உருவெடுத்தவங்க.

ஸ்டீவ் வாக், லாரா மட்டுமில்லாம, எம்ஆர்எஃப்-கான அடையாளத்தையே, நம்ம மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின்தான் கொடுத்தாரு. அடம்பிடிச்சோ, பேர்த்டே கிஃப்டாவோ, நம்மள்ல பலருக்கு அதே ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட் கிடைச்சது.

Brittania பேட்டுகள ஸ்டைலா சதமடிச்சுட்டு, பேட்டத் தூக்கி டிராவிட், சேவாக், கங்குலி காட்டுன நினைவுகள் அப்படியே இப்பவும் பசுமையா இருக்கு.

Puma பேட்டுனாலே பவர் ஹிட்டர்ஸோட ரிலேட் பண்ணலாம். கில்கிறிஸ்ட், மெக்கல்லம், ரசல் வரைனு அதிரடி மன்னர்கள், இதப் பயன்படுத்திருக்காங்க.

Reebok பேட்டுகள், அசாருதீன், யுவ்ராஜ், ஜயவர்தன, தோனினு மிகமுக்கிய முகங்கள நினைவுக்குக் கொண்டுவரும்.

இவற்றைத் தவிர கபில்தேவோட பவர் ஸ்டிக்கர் பேட், கங்குலியோட ஹீரோ ஹோண்டா பேட், டிராவிட்டோட வில்ஸ், அஜய் ஜடேஜாவோட கிங் ஃபிஷர்னு அந்த வீரர்களயும் அவங்க அடிச்ச முக்கியமான இன்னிங்ஸ்களைப் பத்தி நினைச்சாலே இந்த பேட்டுகளும் சேர்ந்துதான் ஞாபகத்துக்கு வந்துடும்.

இப்பவும் வீட்டை சுத்தப்படுத்தறப்போ, எம்ஆர்எஃப் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பழைய பேட்டுகள் கண்லபடுறப்போ, மனசு ஒரே சமயத்தில கனமாகுறதையும், லேசாகுறதையும் உணரலாம்.

வருடங்கள் ஓடினாலும், உருவங்கள் மாறினாலும், எல்லா 90-ஸ் கிட்ஸ்குள்ளயும், இந்த பேட் ஸ்டிக்கர்கள் பற்றிய நினைப்பு, சிலிர்ப்ப ஏற்படுத்தும்.....