பிக்பாஸ் டைம்பாஸ்
Lifestyle

'இவ்வளவுதாங்க பிக் பாஸ் ஷோ' - பிக் பாஸ் பரிதாபங்கள்

சில பேருக்கு எல்லாம் இரவு ஒன்பது மணிக்கு பிக்பாஸ் பார்க்காம தூக்கமும் வராது. தினமும் காலையில வந்து பிக்பாஸ பத்தி கமெண்ட் சொல்லாம அந்த நாளும் போகாது.

சு.கலையரசி

பூமர் அங்கிள்: வேலை இல்லாதவர்களை கூப்பிட்டு 100 நாள் வேலைத்திட்டம் மாதிரி வேலை தரதுதான் இந்த பிக் பாஸ்னு தெரியாம, நம்ம வீட்ல இருக்கிறவங்களும் ஊரார்வீட்ட எட்டி பாக்குறதுக்கு அவசர அவசரமா ஒன்பது மணிக்கு கூப்பிடுவாங்க பாரு கோவிந்தா...

ஆர்மி அட்மின்: ஓய் அங்கிள், பிக்பாஸ்  பாக்குறவங்கடா நாங்க!! எங்க பிக்பாஸ் ஆர்மியோட பவர் என்னன்னு தெரியுமா உனக்கு....

பிக்பாஸ்  அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வற்றது டடடட டடட என்ற மியூசிக்தான். மியூசிக் போட்டதுமே நம்ம தலைவர் கமல் அழகா அயர்ன் பன்ன சட்டை பேன்ட்ட போட்டுட்டு வந்துடுவாரு. கமல்ஹாசன் அய்யாவுக்கு தெனாலி படத்துல அவரோட கண்களைக் காட்டி உலக நாயகன் கமல்ஹாசன் அப்படின்ற பட்டத்தோட அறிமுகப்படுத்துனாறு நம்ம கே.எஸ் ரவிக்குமார் அய்யா.

அவரு அறிமுகப்படுத்தும் நேரமோ என்னமோ கண்ணுக்கான தொடர்பு நம்ம கமல் அய்யாவ விட்டு விலகல. 2008ல பார்த்த அதே என்ட்ரிய 2017ல இருந்து பார்த்துட்டு வரோம். எப்படின்னு கேக்குறிங்களா 'கண்கள்' தான். அவரோட கண்ணுக்கும் பிக்பாஸ் கண்ணுக்கும் என்ன ஒரு பொருத்தம்ல.

சரி கண்ணுல இருந்து அப்படியே  விக்ரம் படத்துக்கு வருவோம்,  நம்மல்ல எத்தனை பேரு இதைக் கவனிச்சோம்னு தெரியல, விக்ரம் படத்துக்கு அப்புறம் நம்ம உலகநாயகன்  கமலஹாசன் அய்யாவோட உடையில சின்ன மாற்றம் வந்துருக்கு. இதுக்கு முன்னாடி கசங்காத கோட்சூட் ஆனா இப்போ கௌவ்பாய் சட்டை பேன்ட் போட்டுட்டு, சனி ஞாயிறு கிழமைகளில் தவறாம இரவு 9 மணிக்கு டான்னு வருகை தந்திடுவாரு. 

2017 பிக் பாஸ் சீசன் ஒன்னுல இருந்து இப்போ இருக்க பிக் பாஸ் சீசன் ஆறு வரைக்கும் தொடர்ந்து 100நாள் டான்னு 9 மணிக்கு  நாள் தவறாம பிரபல தனியார் தொலைக்காட்சியில ஒளிபரப்பாகுற நம்ம பிக்பாஸ் ஷோவுல எது மாறினாலும் அந்த டைமிங்கு மட்டும் மாறாது. தினமும் இரவு 9 மணிக்கு டான்னு ஆஜர் ஆகிடுவாங்க நம்ம கன்டஸ்டன்ட்டு. எப்படி நம்ம பிக்பாஸ் ஷோவோட கண்ணு 2006ல இருந்து மாறலையோ அதுபோலவே பிக் பாஸ் ஷோ நடத்துற டைப்பும் மாறல.

எல்லா மொழி பிக்பாஸ்லையுமே சனி ஞாயிறு கிழமைகளில் ஒரு நடுவர் வந்து குறும்படம் போட்டு காட்டுவாறு சனி, ஞாயிறு குறும்படத்துக்காகவே 100 நாளும் வீட்ல இருக்க கன்டஸ்டண்ட் விதவிதமா பிரச்சனையை கிளப்பிட்டு இருப்பாங்க. 

எல்லா மொழியிலையும் ஒளிபரப்பாகுற பிக் பாஸ் நிகழ்ச்சியில  வீட்டுக்குள்ள இருக்க கண்டஸ்டன்ட் எல்லாருக்குமே ஒரு தனித்தனி கேரக்டர் இருக்கும். ஒருத்தர் பிரச்சினை கிளப்புவாங்க, இன்னொருத்தர் அந்த பிரச்சனையை சால்வ் பண்ணுவாங்க, ஒருத்தர் அறிவாளியா இருப்பாங்க, ஒருத்தர் முட்டாளா இருப்பாங்க, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி இந்த உறவுக்கு மத்தியில க்ரிஞ்சு பொண்ணும், பூமர் அங்கிளும் இருப்பாங்க. பாக்கதா நான் பை ஸ்டார் ஹோட்டல் உள்ள இறங்குனா தர லோக்கல் அப்படின்னு சொல்லிட்டே உள்ள ஒரு கேரக்டர் சுத்திட்டு இருப்பாங்க..

இங்க தான் நாம சிந்திக்கணும் உண்மையிலேயே வீட்டுக்குள்ள வர எல்லா சீசன் கண்டஸ்டன்டும் மாறம ஒரே கேரக்டர்ல இருக்காங்களே அது எப்படி???  இந்த மாதிரி கேரக்டர்ஸ் எல்லா சித்தரிக்கப்பட்டதா? இல்ல பிக்பாஸ் வீட்டுக்குனே இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் வந்து சேருராங்களான்னும் தெரியல. இது கண்டுபிடிக்கவே நாம கோபிநாத் தலைமையில  தனியா ஒரு நீயா நானா ஷோலே நடத்தனும் போல. மாறாத பிக்பாஸ் டைமிங் போல அத பாக்குற மக்களும் மாறல.

சில பேருக்கு எல்லாம் இரவு ஒன்பது மணிக்கு பிக் பாஸ் பார்க்காம தூக்கமும் வராது தினமும் காலையில வந்து பிக்பாஸ பத்தி கமெண்ட் சொல்லாம அந்த நாளும் போகாது. சீசன் சீசனுக்கு ஒரு கன்டஸ்டன்ட்டு தேர்ந்தெடுத்து அவங்களுக்குன்னு ஒரு ஆர்மி. இந்த ஆர்மியோட அட்மின் இருக்காங்களே  அவங்க சோசியல் மீடியால அடிக்குற லூட்டி தாங்கல... யோவ் நீங்களா எங்கயா இருக்கீங்க.!!

பிக்பாஸ் வீட்ல இருந்து ஒரு கண்டஸ்டண்ட் வெளிய வந்தா அவங்கள வச்சு ஒரு மாசத்துக்கு சோவ போட்டுடுறாங்க அந்த தனியார் தொலைக்காட்சிகாரங்களும். ஒவ்வொரு கண்டஸ்டன்ட்டையும் வச்சு மாசம் ஒவ்வொரு ஷோ பண்ணாலே ஒரு வருஷம் ஓடிரும் திரும்ப புதுசா அடுத்த சீசன் பிக்பாஸும் வந்துடும் திரும்ப இதே கதை தான். 

அரைச்ச மாவையே அரச்சிட்டு இருக்காங்க. தனியார் தொலைக்காட்சி தான் இப்படின்னு பார்த்தா பிக் பாஸ் ட்ரோல்ஸ் அப்படின்னு சொல்லிட்டு நிறைய யூடியூப் சேனல்சும் இத கமெண்ட் பண்ணி நிறைய பணம் பார்த்துட்டு தான் இருக்காங்க.

சாதாரணமா நம்ம வீட்ல நம்ம பாக்குற வேலையவே அங்க ஒரு டாஸ்கா வச்சு விளையாடிட்டு இருக்காங்க அதுலயும் ஒரு சண்டை, பிரச்சனை, வம்பு, அடிதடி போயிட்டு இருக்கு. 100 நாள் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்துட்டு வெளிய வறவங்களுக்கு அவங்க வீட்ல இடம் கிடைக்குதோ இல்லையோ அந்த தனியார் தொலைக்காட்சியில ஒரு சீரியல்ல இடம் கொடுத்துடுவாங்க.

வேலையில்லாதவர்களை கூப்பிட்டு 100 நாள் வேலைத்திட்டம் மாதிரி வேலை தரதுதான் இந்த பிக் பாஸ்னு தெரியாம, நம்ம வீட்ல இருக்கிறவங்களும் ஊராவீட்ட எட்டி பாக்குறதுக்கு அவசர அவசரமா ஒன்பது மணிக்கு கூப்பிடுவாங்க பாருங்க.. அப்போ நம்ம மனசுல 'அடேய் ஆண்டியப்பா  இந்த கொடுமைய பாக்கவா என்ன பெத்துவிட்ட' அப்படின்னு தோனும்.பிக் பாஸ் கன்டஸ்டன்ட்டு கேரக்டர்  மாறாத மாதிரி இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் பிக்பாஸ் பாக்குற வளங்களும் மாற மாட்டாங்க.