sambar bihar
Lifestyle

Bihar : சாம்பார் கொடுக்காத ஹோட்டல் மீது வழக்கு - ரூ.3500 அபராதம் விதித்த நீதிமன்றம் !

ராதிகா நெடுஞ்செழியன்

பீகார சேர்ந்த மனீஷ் பதக் ஒரு வழக்கறிஞர். 2022ல 'நமக்' ஹோட்டல்ல இவரு பார்சல் வாங்குன மசால் தோசைக்கு சாம்பார் குடுக்காததால அந்த ஹோட்டல் மேல வழக்கு பதிவு பண்ணி வெற்றியும் பெற்றிருக்கார்.‌

பீகார சேர்ந்த மனீஷ் பதக் அவரோட பிறந்த நாளான ஆகஸ்ட் 15 அன்னைக்கு 'நமக்' ஹோட்டல்ல அவரோட அம்மாவுக்காக மசால் தோசை பார்சல் வாங்கியிருக்காரு. இந்த மசால் தோசை பார்சலுக்கு ரூ.140 குடுத்து இருக்கார். பார்சல்ல வாங்கிட்டு அம்மாகிட்ட குடுக்கலாம்னு பாத்தா அதுல சாம்பார் இல்ல.

'விடுவனா நானு' அப்டின்னு டென்ஷன் ஆன நம்ம லாயர் நமக் ஹோட்டல்க்கு போய் சாம்பார் எங்கன்னு கேக்க, அவர யாருமே கண்டுக்கல. 140 ரூபாய் குடுத்து மசால் தோசை வாங்கியிருக்கேன். என் சாம்பார் எங்கன்னு மறுபடியும் கேட்டாரு பதக்.

140 ரூபாய்க்கு இங்க இருக்க எல்லாத்தையும் வாங்கவா முடியும்னு கடைக்காரர் கேட்டிருக்கார். கோவம் வந்து நம்ம லாயர், நமக் ஹோட்டலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு பண்ணார். வக்கீல் நோட்டீஸ்க்கு பதிலளிக்காத ஹோட்டல் மேல பீகார் நுகர்வோர் நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தார் பதக். வழக்கு தொடர்ந்து சுமார் 11 மாதம் பிறகு தீர்ப்ப சொல்லியிருக்கு நுகர்வோர் நீதிமன்றம்.

ரூ‌. 3,500 அபராதம் கட்ட மாவட்ட நுகர்வோர் ஆணையத் தலைவர் வேத் பிரகாஷ் சிங்கும் உறுப்பினர் வருண்குமாரும் உத்தரவிட்டிருக்காங்க. இதுல, ரூ.2,000 பதக்கிற்கு "மன, உடல் மற்றும் நிதி நெருக்கடியை" ஏற்படுத்துனதுக்காகவும், மீதி இருக்க ரூ. 1,500 வழக்கு கட்டணமாகவும் அபராதம் தெரிவிச்சிருக்காங்க.

ஒரு பாக்கெட் சாம்பார் குடுத்து பிரச்சினையே இல்லாம போயிருக்கலாம். ஆனா, இப்போ 3500 ரூபாய் அபராதம். எதுக்கு !!