இங்கிலாந்து
இங்கிலாந்து டைம்பாஸ்
Lifestyle

ஒரு நாளைக்கு 22 மணி நேர தூக்கம் - இங்கிலாந்தின் அதிசயப் பெண் !

சு.கலையரசி

இது வரமா, இல்ல சாபமா? ஸ்லீப்பிங் பியூட்டி கதையை உண்மையாக்கிய இங்கிலாந்து பெண்

இங்கிலாந்தை சேர்ந்த ஜோனா என்ற  38 வயதான பெண் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்கி மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இவருக்கு அக்டோபர் 2021 இல் இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டே  இடியோபாடிக் ஹைபர் சோம்னியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பல மருத்துவ சிகிச்சைகளுக்குப் பிறகும் தனது தூக்கத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை. இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா என்பது ஒரு நரம்பியல் தூக்கக் கோளாறு.  இது ஒரு முழு இரவு தூக்கத்திற்குப் பிறகும் உடலை சோர்வடையச் செய்து தூக்கத்தை ஏற்படுத்தும். இந்த நோய்க்கு சிகிச்சைகள் இருந்தாலும், இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.

ஒரு நாளைக்கு சுமார் 22 மணி நேரம் தூங்குவதாகவும், கடந்த 2017 ஆம் ஆண்டு தான் சோர்வாக இருப்பதை உணர தொடங்கி கார், கிளப், வேலை செய்யும் இடம் என எப்போதுமே தூக்கம் வந்து கொண்டே இருந்ததால் வேலையை விட்டுவிட்டு வீட்டில் தூக்கம் வந்தபோதெல்லாம் தூங்கியதாகவும் பல மருத்துவர்களிடம் சென்று பலனற்ற ஆலோசனைகள் மற்றும் சிகிச்சையை பெற்றதாகவும் கூறினார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக அவரது நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் ஒரு சில மணி நேரங்கள் அவர் விழித்திருந்தாலே அது மிகப்பெரிய விஷயமாக தெரிகிறது என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையானதை கூட செய்ய முடியவில்லை என்றும், தனக்கு ஒரு நல்ல மருத்துவர் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எப்போது தூங்கினேன்? எப்போது எழுந்தேன்? என்பது கூட தெரியவில்லை என்றும் இன்றைய தினம் என்ன? என்று கூட தெரியாது,  அந்த அளவுக்கு நான் என்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.