அடே ராமா இதெல்லாமா சாப்பிடுவாங்க?
இருபது வருடங்களாக ஒரு பெண் மெத்தையைச் சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் என்ற பெண் தனது ஐந்து வயதிலிருந்தே மெத்தையைச் சாப்பிட்டு வருகிறார். மெத்தைகள், ஃபோம் , ஸ்பான்ஞ் போன்றவைதான் உணவுகள் என்றும் கூறுகிறார்.
ஜெனிபர் ஐந்து வயதில் குடும்பத்தின் காரில் உள்ள ஸ்பான்ஞ் சாப்பிடத் தொடங்கியபோது அவரது இந்தப் பழக்கம் தொடங்கியது. தினமும் ஒரு சதுர அடி மெத்தை சாப்பிடும் திறன் கொண்ட ஜெனிஃபர் 'My Strange Addiction' என்று இதனை கூறுகிறார்.
வினோதமான பொழுதுபோக்குகள், பல போதை பழக்கங்கள் இருக்கலாம். சிலேட் குச்சி, பென்சில், மண், திருநீர், சுவர் போன்றவற்றை உண்ணும் பழக்கம் பெரும்பாலான மக்களிடம் இருந்தாலும் இந்த மெத்தை உண்ணும் பழக்கம் சற்று விசித்திரமாகதான் உள்ளது.
ஃபோம் , ஸ்பான்ஞ் சாப்பிடுவதிலும் வெரைட்டி உள்ளதாம். அவருக்கு மிகவும் பிடித்தது தலையணையாம். மயோனைஸ், வெண்ணெய் மற்றும் மது எதுவுமில்லாமல் மெத்தையை சாப்பிடுவதைதான் அவர் விரும்புகிறார்.
மெத்தையில் இருந்து துர்நாற்றம் வீசினால் அதை சாப்பிடுவதை நிறுத்துவதாக கூறினார். ஜெனிபரின் இந்தப் பழக்கம் உயிருக்கு ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தவில்லை. மெத்தைகளை சாப்பிடுவதால் எந்தவித பக்கவிளைவுகளும் அவருக்கு இல்லையாம்.
மருத்துவர்கள் ஜெனிபர் மெத்தைகளைச் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், அவர் தீவிர உடல்நல குறைபாடும், கல்லீரல் பாதிப்பு மற்றும் குடல் அடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறார்கள்.