Delhi
Delhi டைம்பாஸ்
Lifestyle

Delhi: "துத்தநாகம் உடலை பலப்படுத்தும்" - 39 நாணயங்களை விழுங்கிய நபர் சொல்லும் காரணம்!

டைம்பாஸ் அட்மின்

டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் ஆண் ஒருவரின் குடலிலிருந்து 39 காசுகள் மற்றும் 37 காந்தங்களை எடுத்துள்ளனர்.

மன நோயால் பாதிக்கப்பட்ட அந்த நபர் துத்தநாகம் உடலைக் பலப்படுத்தும் என நினைத்து நாணயங்களையும் காந்தங்களையும் விழுங்கியதாகக் கூறியுள்ளார். 26 வயதான அந்த நபர் மனநலம் குன்றி, அதற்கான சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இவர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். என்ன நோய் என்று தெரியாமல் குழம்பிய மருத்துவர்கள் வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, குடல் பகுதியில் சில நாணயங்கள் மற்றும் காந்தங்கள் இருந்தைக் கண்டறிந்துள்ளனர்.

உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை வெளியே எடுத்துள்ளனர். இந்தக் காந்தங்கள் இதயம், நட்சத்திரம், துப்பாக்கி தோட்டா மற்றும் முக்கோணம் போன்ற பல வகைகளிலிருந்தாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக உள்ளார். எதற்காக நாணயங்கள் சாப்பிட்டீர்கள் எனச் அவரிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு, "துத்தநாகம் உடலைப் பலப்படுத்தும் என்பதால் அதை உண்டேன்" என்றார். அது சரி காந்தத்தை எதற்கு விழுங்கினீர்கள் என்று கேட்டதற்கு, "காந்தம் உள்ளே இருந்தால் தானே நாணயமும் உள்ளேயே ஒட்டிக்கொண்டு இருக்கும், காந்தம் இல்லையென்றால் நாணயம் வெளியே வந்து விடும் அல்லவா" என்று கூறியுள்ளார்.

- மு. இசக்கிமுத்து.