Tamil Cinema வின் சேடிஸ்ட் வில்லன்கள் - மிரள வைக்கும் ஒரு லிஸ்ட் !

விஷால் இல்லன்னா ஒரு விதார்த்து, விக்ராந்துன்னு போகாம, விஷால்தான் வேணும்னு கழுத்து இல்லாத முண்டம் மாதிரி துடிக்கிறாங்க ஸ்ரேயா. ’விஷால் எனக்கு கெடைக்காட்டியும் பரவாயில்ல. எவளுக்கும் கெடைக்கக்கூடாது’னு.
Tamil Cinema
Tamil Cinematimepassonline

வில்லத்தன்ம வேற, சேடிஸம் வேற. வில்லத்தனம் எதிரிங்களை கூலிப்படை வெச்சிக் கொல்றது, அடியாட்களை அனுப்பி அடி வெளுக்குறது, கடத்திக்கிட்டுபோய் கட்டிவெச்சு அடிக்கிறதுனு ஒரே டெரர்ரா இருக்கும். ஆனா, சேடிஸ்ட் கேரக்டர்கள் மனுஷன பொழைக்கவும் விடாம, சாகவும் விடாம டார்ச்சர் பண்றதுதான். அப்படி பல கேரக்டர்ங்க நம்ம சினிமாவுல நெறையவே இருக்காங்க.

அது நடிப்புதான்னாலும் திரையில பாக்குற நமக்கு.. பி.பி எகிறி, கோவத்துல கொந்தளிச்சி, டென்ஷன்ல சீட்டை கிழிக்கிற அளவுக்கு போயிருவோம். ஜெண்ட்ஸை விட, லேடி சேடிஸ்ட் கேரக்டர்கள் படுபயங்கரமா மிரட்டுவாங்க. அப்டி சிலரைப் பார்த்துடுவோம்.

1 . கூட வந்த கொழுந்தியாளைக் கொத்தா தூக்கணும்னு, கட்டின பொண்டாட்டிய கை கழுவி விடணும்னு கொடுமைப்படுத்துற படம்தான் ’ஆசை’. ஹீரோ அஜித், ஹீரோயின் சுவலட்சுமி. சுவலட்சுமி மேல இருந்த தீராத ஆசையில, பேயாட்டம் ஆடுறவர்தான் வில்லன் பிரகாஷ்ராஜ். மனைவியை விட மச்சினிச்சி அழகா இருக்கிறது குத்தமாய்யா…? எப்படியாச்சும் அவங்களை அடஞ்சு, அந்தரங்க நாயகியாக்கிடணும்னு தவியா தவிக்கிறார் பிரகஷ்ராஜ். சுவலட்சுமிய ரெண்டாந்தாரமா கேட்டாதானே தப்பு.

Tamil Cinema
Tamil Cinema : அக்குள்ல வெங்காயம், சின்ன வயசு ஜட்டி, கிழிஞ்ச நோட்டு-Cringe காதல் காட்சிகள் லிஸ்ட் !

மனைவியை கொன்னுட்டா தாயில்லா தன் பிள்ளைக்கு சித்தியா இருந்தவ அப்றம் அம்மாவாயிடுவான்னு. கணக்கை கால்குலேட்டர் இல்லாம போடுறாரு. அதனால, மிலிட்டரிமேனா இருக்கிறவன் தப்பு பண்ணினா ஒருத்தனும் கேட்கமாட்டான்கிற தைரியத்துல மனைவி முகத்துல கேரிபேகை கட்டி மூச்சைடைக்க வெச்சி கொல்றது.

ஹீரோயினிக்கு, அஜித் கிஃப்டா கொடுத்த நாய் குட்டிய காருக்கு முன்னாடி போட்டுக் கொல்றது, அஜித்தை அபின் வெச்சிருக்கிறதா போலீஸ்ல மாட்டிவிடுறது, சுவலட்சுமி பைத்தியம்னு டாக்டர் சர்டிபிகெட் வாங்கறது, கூட இருந்த ராணுவ நண்பனை கொல்றதுன்னு மச்சினிச்சி மேலருந்த மோகத்துல சேடிஸ்டு சங்கத் தலைவர் மாதிரி பின்னிப் பெடலெடுத்திருப்பார் பிரகாஷ்ராஜ்.

2 . ’கடலோரக் கவிதைகள்’ படத்துல குடைப்பிடிச்சிகிட்டு, புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிகொடுத்துட்டு இருந்த அழகான ஜெனிஃபர் டீச்சரா வலம் வந்த ரேகா, கோர முகத்தை கொடூரமா காட்டின படம்தான் ’ரோஜாக்கூட்டம்’. ஸ்ரீகாந்த், பூமிகா ஹீரோ, ஹீரோயினா நடிச்ச படம். பூமிகாவோட அம்மாதான் ரேகா. எதிர்வீட்டுல குடியிருக்கிறவர்தான் ஸ்ரீகாந்த். வாசல்ல கோலம் போட்டாதை ஹூ காலால கலைக்கிற சேடிஸ் இன்ஸ்பெக்டர் ரேகா.

கோலத்தையே கால்ல கலைக்கிற ரேகா. பொண்ணு காதலிச்சா சும்மா இருப்பாரா..? இருக்கமாட்டார். இன்னொரு விஷயம் வயசுப் பையன்கள் இருக்கிற வீட்டுப் பக்கத்துல குடிபோனா, தன் பொண்ணை காதலிப்பானுங்கங்கிற காரணத்தாலதான் அங்கம்பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட வம்பா சண்டைக்குப் போயி எதிரியாக்குற அளவுக்கு சேடிஸ்டா இருக்காங்க ரேகா. அதையும் மீறி ஹீரோவுக்கு, ஹீரோயின மேல ஒன்சைடு காதல் பத்திக்குது. ஸ்ரீகாந்தை காதலிக்கிறான்னு தெரிஞ்சு ரேகா, மகளுக்கு வேற மாப்பிள்ளைப் பார்த்து மேரேஜுக்கு ஏற்பாடு பண்றதுன்னு மிரட்டியிருப்பாங்க ஜெனிஃபர் டீச்சர்.

Tamil Cinema
Tamil Cinema : காணாமல் போன கதாநாயகிகள் - ஒரு லிஸ்ட்

3 . வந்த இடத்துல கைய கால வெச்சிக்கிட்டு சும்மா இருக்காம. ’அடடே.. இந்தப் பொண்ணு அழகா இருக்காளேங்’கிற ஆர்வத்துல.. கெளசல்யாவுக்கு, எழுதின கடுதாசியால பிரசாந்த் படுறபாடு இருக்கு பாருங்க. கொடுமையிலும் கொடுமை. அந்தக் கொடுமை ’ஆசையில் ஓர் கடிதம்’ படத்துலதான் நடக்குது. கட்டுன புருஷன் ஆனந்துகிட்ட கெளசல்யா சிக்கிக்கிட்டு சின்னப்படுறாங்க பாருங்க.

பொடவை சுத்தின புல்லுகட்டுக்குக் கூட அந்த நிலமை வரக்கூடாது. பிரசாந்த் ஆனந்தோட நண்பன்தான்னாலும், கெளசல்யாவுக்கு கடுதாசி கொடுத்த விஷயம் தெரிஞ்சுபோயி முதலிரவுல.. ’இப்பதான் பழக்கமா இல்ல முன்னாடியே நீயும் பிரசாந்தும் லவ்வர்ஸா..?'னு கேட்கறதும், உங்களுக்குள்ள ’அந்த’ சமாச்சாரம் நடந்துருச்சா..?னு அக்னிய அள்ளி வீசுவாப்ல.

ஜன்னல் பக்கம் நின்னா சந்தேகம், பால்கனியில் நடந்தா சந்தேகம், ஒரு இடத்துல உட்காந்தா சந்தேகம்னு ஒண்ணும் தெரியாத மாதிரி மூஞ்ச வெச்சிக்கிட்டு உலுக்கி எடுப்பாரு ஆனந்த். ஆத்துல தற்கொலை பண்ணிக்கப் போன கெளசல்யாவை பிரசாந்த் காப்பாத்த, அது தெரிஞ்ச ஆனந்த் வீட்டுல மண்ணெண்னைய எடுத்து தன்மேல ஊத்திக்கிட்டு ’உன்ன காப்பாத்த வந்தவன் என்ன ஏண்டி காப்பாத்த வரலை…?’னு கேக்கிறதெல்லாம் சேடிஸ் தனத்தின் உச்சம்.

Tamil Cinema
Tamil Heroகளை காப்பாற்றும் மிருகங்கள் - ஒரு லிஸ்ட் !

4 . மேல புருஷன் சேடிஸ்ட்டுன்னா, இங்க மனைவி சேடிஸ்ட்டு. பாடகனான ரகுமானை, கோடீஸ்வரியான கீதா ஆசைப்பட்டு அடைஞ்சே தீருவேன்னு வெறிகொண்டு அலையிறாங்க. வீட்டுக்கு வந்த ரகுமான் கூலிங் கிளாஸை கீதா திருடி வெச்சுக்கிட்டு, அதை திருப்பிக் கொடுக்கிறதுக்காக, பிளைட் புடிச்சு பெங்களூர் போற அளவுக்கு காசு திமிர். அப்படி வந்த இடத்துல ரெண்டு பேருக்குள்ளும் தப்பு நடந்துடுது.

அப்புறம் ’நான் கர்ப்பமாயிட்டேன் கல்யாணம் பண்ணிக்க’ னு கீதா சொல்ல, மேரேஜ் முடிஞ்சு முதல் ராத்திரியில் ’நான் கர்ப்பம் இல்ல. பொய் சொன்னேன் சொல்றது, பெண் ரசிகர்கள்கிட்டப் பேசினா சந்தேகப்பட்டு சண்டை போடுறது, ரகுமான் புரோக்ராம் பண்ண பிளைட்டுல போகுறப்போ, அழகான ஏரோசிட்ஸ் பொண்ணுங்க லிஸ்ட் வாங்கறது, தற்கொலை பண்ணிக்கிறதுக்குகாக பாத்டப்புல தண்ணிய நிரப்பிக்கிட்டு அதுல மூழ்கிக்கிடக்குறது'னு ரகளையோ ரகளை பண்ணுவாங்க.

ஒரு கட்டத்துல ’இனிமே பாட்டே பாடக்கூடாது’னு ஹெவி டெஸிபல்ல கீதா கத்துறாங்க. அதைக்கேட்டு டென்ஷனாகி, வீட்டைவிட்டுமில்ல, ஊரைவிட்டே சொல்லாமக் கொள்ளாம ராவோட ராவா ஓடிப் போயிடுவாரு ரகுமான்.

Tamil Cinema : மாறுவேடப் போட்டி நடிகர்கள் - ஒரு கலக்கல் லிஸ்ட்

5 . ஹீரோயின் ரீமா சென்னோட, ஹீரோ விஷால் சின்சியரா லவ் பண்ணிட்டு இருக்க, ஊடால வந்த வில்லி ஸ்ரேயா ரெட்டி விஷாலைத்தான் கட்டிக்குவேன்னு ஊரு மத்தியில ஒத்தக்கால்ல நிக்கிறாங்க. விஷால் இல்லன்னா ஒரு விதார்த்து, விக்ராந்துன்னு போகாம, விஷால்தான் வேணும்னு மாலையும் கழுத்துமா, கழுத்து இல்லாத முண்டம் மாதிரி துடியா துடிக்கிறாங்க ஸ்ரேயா. அவங்களோட சேடிஸம் எங்க ஓவரா எக்ஸ்டாபிளிஸ் ஆகுதுன்னா… விஷால் அப்பா, அம்மாவை தூக்கிட்டு விஷாலை மிரட்டும்போதும், விஷால் அப்பாகிட்ட.. ’உன் பையன் வயசுல நீ இப்ப இருந்தின்னா என்ன மாதிரி ஒரு கட்டைப் பார்த்தா ஆசை வருமா.. வராதா…? ன்னு அவர் முகம் சுழிக்கிற மாதிரி கேள்வி கேக்குறப்பதான் வெளிப்படுது.

டார்ச்சர்னா விஷாலை அப்டி ஒரு டார்ச்சர் பண்ணுவாங்க. கடைசில நெருப்புல வெந்து உசுருக்குப் போராடிக்கிட்டு சாகக் கெடக்குறாங்க. அப்போ கூட அவங்க அண்ணன்கிட்ட, ’விஷால் எனக்கு கெடைக்காட்டியும் பரவாயில்ல. வேற எவளுக்கும் கெடைக்கக்கூடாது’ னு தன் உயர்ந்த லட்சியத்தை சொன்னதோடு, ’டாக்டரா திரியிற விஷாலை நோயாளியா அலையவிடணும்’னு தன் சேடிஸ்தனத்தை காட்டிட்டு செத்துருவாங்க. படம் பார்த்த நமக்கு வடிவேல் மாதிரி ’வெசம்.. வெசம்.. வெசம்’னு ஸ்ரேயா ரெட்டி தலையில நங்கு.. நங்கு..னு கொட்டணும்போல இருக்கும்.

- எம்.ஜி.கன்னியப்பன்.

Tamil Cinema
Tamil Cinema : கட்சி தொடங்கி ’கண்டமான’ ஹீரோக்கள் - ஒரு லிஸ்ட் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com