டாக்டர் vs பேஷன்ட் மைண்ட் வாய்ஸ்
Lifestyle

டாக்டர் vs பேஷன்ட் : மைண்ட் வாய்ஸ் பரிதாபங்கள்

"இதுக்குப் பேரு அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர். லட்சத்துல ஒருத்தருக்கு வரும்!’’ (லட்சத்தில் ஒருவன்... நல்ல சினிமா டைட்டிலா இருக்கே!)

Saran R

டாக்டர் - பேஷன்ட் உறவும் புனிதமானதுதான். டாக்டர் பேசுறதுக்கு பேஷன்ட்ஸ் சொல்ற பதிலும் அவங்க மனசுக்குள்ள நினைக்கிறதும் வேற வேறயாத்தானே இருக்கும்.

டாக்டர்: ‘‘ஸாரிங்க... இதை ஆபரேட் பண்ணித்தான் சரிபண்ண முடியும். ஆனா, அதுக்குக் கொஞ்சம் செலவாகும்!’’

பேஷன்ட்: ‘‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். ஆபரேஷன் பண்ணிடுங்க!’’ (ஐயய்யோ... வாய் தவறி உளறிட்டேனே. சொத்தெல்லாம் காலிதான்!)

டாக்டர்: ‘‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள் ! உங்களுக்கு இருக்கிற பிரச்னைக்கு நீங்க எழுந்து நடக்கிறதே ஆச்சர்யம்... நீங்க ஓடுறீங்க... காட் இஸ் கிரேட்!

பேஷன்ட்: ‘‘எல்லாம் உங்க ட்ரீட்மென்ட்டோட பவர்தான் டாக்டர் !’’

(எழுந்திரிச்சு ஓட ஆரம்பிக்கலைனா, என்னை வெச்சே இன்னும் ஒரு ஃப்ளோர் கட்டி இருப்பீங்களே டாக்டர்!)

டாக்டர்: ‘‘என்னோட இத்தனை வருஷ புரொஃபஷனல்ல, இத்தனை க்ரிட்டிக்கலான கேஸைப் பார்த்ததே இல்லை!’’

பேஷன்ட்: ‘‘ஐயய்யோ... இதை சரி பண்ணவே முடியாதா டாக்டர்!’’

(நல்ல வார்த்தையே வராதா உங்க வாய்ல ? இதையேதான் எங்க அப்பத்தாவுக்கும் நாலு வருஷத்துக்கு முன்னாடி சொன்னீங்க... ‘36 வயதினிலே’ படம் பார்த்துட்டு கெழங்கு மாதிரி வீட்ல கெடக்கு!)

டாக்ட ர் : ‘‘நான் எழுதிக் கொடுக்கிற மருந்துகளை ஒரு மாசம் விடாம சாப்பிடணும். கிழே இருக்கிற மெடிக்கல்ல வாங்கிக்கங்க!’’

பேஷ்ன்ட் : ‘‘ஓகே டாக்டர்!’’

(ஒரு வாரத்துக்கு வாங்கிட்டுப் போவோம். அவர் மெடிக்கல் ஓட்டத்துக்கு நம்மளை போண்டியாகக்க பார்க்கிறார்!)

டாக்டர் : ‘‘எதுக்கும் ஈ.ஸி.ஜி., ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், ஐ டெஸ்ட் எடுத்திடுங்க. லேப் மாடியில இருக்கு!’’

பேஷ்ன்ட் : ‘‘கண்டிப்பா டாக்டர்!’’ ( தலைவலின்னு வந்திடக் கூடாதே!)

டாக்டர்: ‘‘இதுக்குப் பேரு அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர். லட்சத்துல ஒருத்தருக்கு வரும்!’’

பேஷன்ட் : ‘‘அப்படியா டாக்டர்’’

(லட்சத்தில் ஒருவன்... நல்ல சினிமா டைட்டிலா இருக்கே!)