Reality
Reality Reality
Lifestyle

Expectation vs Reality : போட்டது சுறா மீன் கிடைச்சதோ ஜிலேபி மீன் - Trending Photo !

சு.கலையரசி

கட்டிடம்னாலே பல டிசைன்கள்ல இருக்கும். இன்ஜினியர் போட்டு தர ப்ளானிங்க எக்ஸிக்யூட் பண்ணாலே சரியாக வேலைப்பாடுகள் முடிந்து விடும். ஆனால், அந்த எக்சிக்யூஷன் தான் கொஞ்சம் கஷ்டம். அப்படி எக்ஸிக்யூஷன்ல சொதப்புன கட்டிடம் தான் இந்த NFDB கட்டிடம்.

ஒரு கட்டிடம் கட்டுவதற்கு ப்ளானிங் இன்ஜினியர் தொடங்கி வீட்டுக்கு குடிபோற வரைக்கும் எல்லாமே பாத்து பாத்து செய்யுவோம்.  அப்படி ப்ளான் செய்தும் சொதப்பிய ஒரு பில்டிங் கன்ஷ்ட்ரக்ஷன் தான் render vs Realityன்னு ட்ரெண்டாகிட்டு இருக்கு.

இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம்(NFDB) கட்டிடம் மிமிடிக் கட்டிடக்கலை என்று கூறப்படுகிறது. என்னதான் மிமிடிக் கட்டிடக்கலை என்றாலும் ப்ளானிங் தப்பு தானப்பா!

2012 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மீன் வடிவ கட்டிடம் காற்றில் மீன் நீந்துவது போல் உள்ளது. செவ்வக வடிவ ஜன்னல்கள் மீன் உடல் மேல் இருக்கும் செதில்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாய் திறந்த அமைப்பு, கண்களுக்கு நீல கண்ணாடி என அனைத்தும் முறையாக பொருந்தியுள்ளது. ஆனால் மீன் வகை மட்டும் மாறிவிட்டது.

மூன்று அடுக்குகள் 1920 சதுர மீட்டர் அளவில் உள்ள இந்த கட்டமைப்பு  இந்திய மத்திய பொதுப்பணித் துறை வடிவமைத்தது.  இது மீன்வள மேம்பாட்டு வாரிய கட்டிடம் என்பதால் மீன் வடிவில் கட்டப்பட்டுள்ளது.

“இந்தியாவின் மீன்வளத் துறையின் தலைமை அலுவலகமாக ஹைதராபாத்தில் இருப்பதால், இங்கு இருக்கும் கட்டிடம் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மீன் வடிவில் அரசாங்கம் இந்த கட்டிடத்தை வடிவமைத்தது" என்று NFDBயின் மேலாளர் ஸ்ரீ எம்.எஸ்.சித்தார்த்தா கூறினார்.

NFDB கட்டிட  படங்கள் இப்போது உலகளவில் வைரலாகிவிட்டது காரணம் இன்ஜினியர் போட்ட ப்ளானிங் படமும் மேஸ்திரி கட்டிய கட்டிட படமும் தான். இன்ஜினியர் போட்டதோ சுறா மீன் வடிவிலான ப்ளானிங் ஆனா மேஸ்திரி கட்டுனதோ ஜிலேபி மீன் கட்டிடம்.