ஆட்ட நாயகன் ரிசப் பண்ட்
ஆட்ட நாயகன் ரிசப் பண்ட்  Timepass
Lifestyle

India : ஆட்ட நாயகன் ரிசப் பண்ட் - Thug Life Cricketers | Epi 9

காட்டாற்றோட கட்டுக்கடங்கா வேகம், வீழ்த்த நினைக்குற எதிரியோட மூளைக்குள்ள அதே பயத்தை பிரதிபலிக்க வைக்குற அஞ்சாமை, எதையும் தனதாக்கிக் கொள்றதுல இருக்க பேராவல், எதிரணியோட கோட்டைலயும் தன்னோட கொடிய உயரமா ஏத்துற சாமர்த்தியம், மிகுதியான மைய ஈர்ப்பு விசையோட கூட்டத்தோட கவனம் மொத்தத்தையும் தன் பக்கம் திருப்பிக்குற அந்தக் கவர்ச்சி - இது எல்லாத்தோட கூட்டுக்கலவை தான் ரிசப் பண்ட்.

தன்னோட டெஸ்ட் மேட்ச் டெபுட்ல ரன்களுக்கான கணக்கையே ஆதில் ரஷித் பந்துல அடிச்ச சிக்ஸரோட தான் பண்ட் தொடங்குனாரு. அந்தப் புள்ளி அடிச்சு சொன்னது அவரோட நோக்கம் என்ன அவரால என்ன முடியும்ன்றத. அது அந்தக் கட்டத்தில இருந்து மேல ஏறுச்சே ஒழிய கீழ இறங்குனதே இல்ல. ஒரு சின்ன காந்தம் மண்ணுல உருட்டுறப்போ எப்படி சின்னத் துகள்கள தன்னோட சேர்த்துக்குமோ அப்படி தனக்கான ராஜ்ஜியத்த இப்படிப்பட்ட சம்பவங்களால பண்ட் கட்டமைச்சுக்கிட்டாரு.

முதலைக்கு தண்ணீர்ல இருக்க பலம் தான் ஆஸ்திரேலியாவுக்கு அதோட நாட்டுலயும். ஆனா அங்கேயும் போய் அவங்கள சீண்டி விளையாடவும் Baby Sitterனு ஸ்லெட்ஜிங் பண்ணா கோபத்த வெளிக்காட்டாம பதிலுக்கு Temporary Captainனு நக்கல் பண்ணவும் அங்கேயும் தன்னை ரசிக்குற கூட்டத்த சேர்த்துட்டு வரவும் பண்டால மட்டும் தான் முடியும். பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் கேரக்டரோட துடுக்குத்தனம், விளையாட்டுத்தனமும் இருக்கும் அதே சமயத்தில சத்தமே இல்லாம சகலத்தையும் கண்ணிமைக்கிறதுக்குள்ள முடிக்குற வல்லமையும் அவர்ட்ட இருக்கும்.

அட்டாக்கிங் ஃபீல்டிங் செட்டப் பண்ணா அதை அடிச்சு துவம்சம் பண்ணி போர்ல பின்வாங்குற படைகளப் போல அந்த ஃபீல்டிங்க டிஃபென்சிவ் மோடுக்கு மாத்தி விடவும் அவரோட சில ஒன் ஹாண்டட் சிக்ஸர்கள் போதும். ஆண்டர்சனோட அதிவேகப் பந்த ரிவர்ஸ் ஸ்வீப் செய்றதையும், ஸ்பின்னர்களோட பந்துகள டவுன் த டிராக்கில இறங்கி வந்து சிக்ஸருக்குத் தூக்குறதையும் மற்ற எந்த வீரரால கற்பனை பண்ணிப் பார்க்க முடியும்???? டெஸ்ட்ல Bazz Ball-ஐ இங்கிலாந்து இன்னைக்குத்தான் உருட்டி விளையாடுது அதை பல வருஷங்களாகவே தன்னோட ஆட்ட பாணியாக வச்சிருந்தவரு பண்ட்.

எட்ஜ்பஸ்டனில் இங்கிலாந்தை கலங்கடித்து 111 பந்துகள்ல அவர் அடிச்ச 146 ஆகட்டும், சிட்னில தன்னோட பராக்கிரமம் மொத்தத்தையும் வெளிப்படுத்தி ஸ்டார்க், கம்மின்ஸ், ஹாசில்வுட் எல்லாரோட பந்துகளையும் சிதறடிச்சு பண்ட் அடிச்ச அந்த 159 ரன்களாகட்டும், Gabba மொத்தத்தையும் கையகப்படுத்தி ஆஸ்திரேலியாவ நிராயுதபாணியாக்குன 89 ரன்களாகட்டும் எல்லாமே மாஸ்டர் பீஸ். ஒவ்வொன்னுமே அதிகத் தாக்கத்த உண்டாக்குன இன்னிங்ஸ்கள்.

நடந்து முடிஞ்ச பார்டர் கவாஸ்கர் தொடருலகூட ஒரு மிஸ்ஸிங் ஃப்ளேவரா சீரிஸ் முழுவதும் டிராவல் பண்ணது பண்ட் இல்லாத வெறுமைதான். ஸ்டம்புக்கு பின்னாடி நின்னு "Come On Ash"னு கத்தி சூழலை உயிர்ப்போட வச்சுக்குறத, அப்பாகிட்ட தாஜா பண்ணி சாக்லேட் வாங்க வைக்குற குழந்தை மாதிரி கேப்டனை சமாளிச்சு டிஆர்எஸ்க்கு போக வைக்கறப்போ அவரோட முகத்துல காணப்படற குதூகலத்த, ஸ்பின்னர்களோட பந்த ஏரியல் ஷாட்டா மாத்திட்டு நடக்கறப்போ தெரியற அந்த கம்பீரத்தனு எல்லாத்தையுமே ரசிகர்கள் மிஸ் பண்ணாங்க.

"என்னோட ஒப்பிடற அளவுக்கு பண்ட் பெரிய ஆள் இல்லை, நான் 200 - 300னு எட்டு வைப்பேன் அவர் 100-கே சமாதானம் ஆகிடுவாரு"னு சேவாக் சமீபத்துல சொல்லி இருந்தாரு. உண்மையில அந்தப் புள்ளியிலதான் பண்ட் இன்னமும் ஸ்பெஷல்.

நம்பர்களுக்குள் சிக்காத நபர், வட்டத்துக்குள் மாட்டாத வசீகரம், குமிழிக்குள் அடங்காத சுழல். அதுதான் கரியர் முழுவதும் ஒரு வீரர் கனவு காண வேண்டிய விஷயங்களை ஒருசில ஆண்டுகளிலேயே பண்ட பண்ண வச்சுருக்கு....