Thug Life Cricketers : Meme Template குடோன் ரவி சாஸ்திரி | Epi 1

ரவி சாஸ்திரிகிட்ட என்ன ஸ்பெஷல்னா இதைலாம் கண்டுக்கவே மாட்டாரு. ஆமா நான் அப்படிதான் என்ன பண்ணப் போறன்ற மாதிரிதான் அவர்ட்ட இருந்து ரிப்ளே வரும்.
ravi
ravitimepass

டன் கணக்கான ரன்களும் பக்கெட் ஃபுல்லா விக்கெட்டுகளும் மட்டும் கிரிக்கெட் இல்ல. அதுக்கும் மேல வார்த்தைப்போர்கள், பழிவாங்குற படலங்கள்னு கணக்குல வராத இன்ட்ரெஸ்டிங் இத்யாதிகளும் இங்க உண்டு. அந்த வகையில கிரிக்கெட்டர்கள் கெத்துகாட்டி ஜீரோ இல்ல ஹீரோனு தன்னை நிருபிச்ச பல சந்தர்ப்பங்கள் இதுல இன்னமும் கொஞ்சம் மசாலாவ தூவிட்டுப் போகுது.

லார்ட்ஸுல வச்சு கங்குலி சட்டைய சாட்டையா மாத்தி சுத்துன மொமெண்ட், யுவ்ராஜோட ஆறு சிக்ஸர்கள் சரவெடின்னு யூ ட்யூபர்களுக்கான கண்டெண்ட் மட்டுமில்லாம கண்ணாடி, செய்ன், வாய்ல சுருட்டோட Thumbnailகான சப்ளையர்களாவும் கிரிக்கெட்டர்கள் இருந்த அப்படிப்பட்ட Thug life தருணங்களத்தான் அடுத்த சிலவாரங்கள் பார்க்கப்போறோம்.

ravi
'சேட்டைக்கார சச்சினின் அலப்பறைகள்' - கலாய் கிரிக்கெட்டர்கள் | Epi 2

சில மாசங்களுக்கு முன்னாடி வரைக்கும் மீம் கிரியேட்டர்களோட டெம்ப்ளேட் குடோனை நிரப்புற வேலைய இந்திய கோச்சாக இருந்த ரவி சாஸ்திரி பார்ட்டைம் ஜாப்பா பண்ணிட்ருந்தாரு. ஐசிசியே அவர் ஆர்ம்ஸ ஸ்ட்ரெட்ச் பண்ற ஃபோட்டோவ போட்டு Caption Plsனு ஒருதடவ வம்பிழுத்துச்சு. இதுக்கு டைட்டானிக் போஸ், 'ஹேங்க் ஓவர் பார்ட் 4'னு அவரோட ரெண்டு கைலயும் கேரிபேக்ல பீர் பாட்டில்கள் இருக்க மாதிரிலாம் போட்டு ரசிகர்கள் கலாய்ச்சுட்டு இருந்தாங்க.

ரவி சாஸ்திரிகிட்ட என்ன ஸ்பெஷல்னா இதைலாம் கண்டுக்கவே மாட்டாரு. ஆமா நான் அப்படிதான் என்ன பண்ணப் போறன்ற மாதிரிதான் அவர்ட்ட இருந்து ரிப்ளே வரும்.

ஒருதடவ போட்டியப்போ இங்கிலாந்து அணிகூட ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்சினைய எப்படி டீல் பண்ணீங்கனு இன்டர்வ்யூ பண்ணவரு ரவி சாஸ்திரிய கேட்டாரு. அதுக்கு அவரு, "ஸ்டூவர்ட் என்கிட்ட வந்து இத நான் செக்ரட்டரிவரை எடுத்துட்டுப் போகப்போறேன்னு சொன்னாரு, அதுக்கு நான் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, இன்னும் கிளாஸ்ல பீர் மிச்சமிருக்கு அத நான் முதல்ல குடிச்சு முடிச்சுடறேன் சேர்ந்தே போகலாம்னு சொன்னேன்" அப்படின்னு அவரோட தக் டைம ஷேர் பண்ணிருந்தாரு.

ravi
'Gavaskar-ம் Friends சீரியஸும்' - கலாய் கிரிக்கெட்டர்கள் | Epi 1

கிளாசிக்கல் ரவி சாஸ்திரி இன்னமும் கெத்து காட்டுன மனுஷர். ஆஸ்திரேலியா டூர்னாலே ஸ்லெட்ஜிங் எபிசோட்டுளால நிரம்புனதுதானே? 91-ல இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் போனப்போவும் இதுதான் நடந்துச்சு. ரவி சாஸ்திரி பேட்டிங் பண்ணிட்ருந்தாரு. அதுவும் ஆட்டமிழக்காம ஆட்டம்காட்டிட்டு இருந்தாரு.

ஒருசில பவுண்டரிகளோட போட்டியோட கியரையும் மாத்துனாரு. அவுட் ஆகிப் போகமாட்டாரான்னு ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடுப்பாக ஆரம்பிச்சுடுச்சு. அதுல சப்ஸ்யூட்டா நின்னுட்ருந்த மைக் வொய்ட்னியும் ஒருத்தர். ஏற்கனவே நடுநடுவுல ரவி சாஸ்திரியோட கவனத்த சிதற வைக்குற மாதிரி பேசிட்டே இருத்தாரு மைக்.

ஒரு பந்த அடிச்சுட்டு ரவி சாஸ்திரி சிங்கிள் ஓட முயற்சிக்க உடனே மைக் பந்த பிடிச்சுட்டு, "கிரீஸ்குள்ள நில்லு இல்லேன்னா உன் மண்டைய உடைச்சுடுவேன்"னு கத்துனாரு. விட்டுடுவாரா ரவி? "இவ்ளோ பேசுற அளவுக்கு உனக்கு பௌலிங் பண்ணவும் தெரிஞ்சுருந்தா உன் டீமோட 12-வது வீரரா இருந்திருக்கவே மாட்ட"னு திரும்பக்கொடுத்தாரு. மைக் அப்படியே பதில் சொல்லாம அமைதியா நகர்ந்துட்டாரு.

கிரிக்கெட்டர்களோட திறமைய சதங்களும் அவங்களோட விக்கெட்டுகளின் ஹால்களும் நிரூபிச்சாலும் அவங்க உண்மைலயே எப்படிப்பட்ட கேரக்டர்ன்ற இந்த மாதிரியான Thug Life தருணங்கள்தான் காட்டிக் கொடுக்கும்.

ravi
'ஆல்தோட்ட பூபதி அஷ்வின்' - கலாய் கிரிக்கெட்டர்கள் - Epi 7

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com