Beer Powder Beer Powder
Lifestyle

Beer Powder : இனி 2 Minsல பீர் ரெடி - இணையத்தை கலக்கும் உடனடி பீர் பவுடர் !

சு.கலையரசி

லோ பட்ஜெட் பார்ட்டியில் முக்கிய பங்கு வகிக்கும் மதுபான வகைகளில் ஒன்றான பீர்களை பவுடர் வகையில் ஜெர்மன் நாட்டில் உள்ள  மதுபான ஆலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் வாழ்க்கையில் ஒரு முறையாவது பீர் குடித்திருப்பார்கள் அப்படியாக உலகளவில் பீர் தயாரிக்கும் நிறுவனங்களின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருவது, அதன் மீது அனைவருக்கும் உள்ள ஆர்வத்தை காட்டுகிறது.

ஆனால் பீரை நம் தேவைக்கேற்ப அடிக்கடி சென்று வாங்குவது சற்று கடினமான ஒன்று தான். ஆனால் ஜெர்மன் நாட்டின் பீர் பவுடரை வைத்து எப்போது வேண்டுமானாலும் நம் தேவைக்கேற்ப, உங்களுக்கு விருப்பப்பட்ட நேரத்தில் தயாரித்து குடிக்கலாம்.

Neuzeller Klosterbrau என்ற ஒரு ஜெர்மன் நாட்டு மதுபான நிறுவனம் கண்டுபிடித்த இந்த இன்ஸ்டன்ட் பீர் பவுடர், ஒரு இன்ஸ்டன்ட் காபி மற்றும் இன்ஸ்டன்ட் ப்ரோட்டீன் ஷேக் போல பயன்படுத்தலாம்.

இந்த பீர் பவுடரை குறிப்பிட்டுள்ள அளவில் எடுத்து, அதை தண்ணீரில் கலந்தாலே போதும் அற்புதமான பீர் நொடிகளில் ரெடியாகி விடுமாம். இதுவரை ஆல்கஹால் இல்லாத பீர் பவுடர் தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் ஆல்கஹால் உள்ள பீர் பவுடர் அறிமுகமாகும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பு, பீரின் உலகளாவிய சந்தையின் போக்குவரத்து மற்றும் உற்பத்தி அளவை குறைக்கும் என்று அந்த மதுபான நிறுவன மேலாளர் ஸ்டீபன் ஃபிரிட்சே தெரிவித்துள்ளார்.

1 கிலோ பீர் பாட்டில்கள் எடுத்துச்செல்லும் இடத்தில் வெறும் 45 கிராம் பீர் பவுடர் எடுத்துச்சென்றால் போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த நிறுவனம், பீர் பிரியர்கள் பீரிலேயே குளிப்பதற்காக குளியல் பீர், க்ளுட்டன் இல்லாத பீர் என்று பல வகை பீர்களை தயாரிக்க ஆவணம் செய்து வருகின்றதாகவும் கூறியுள்ளது.