இன்றைய தேதியில் தலையாயப் பிரச்னைகளில் ஒன்று ப்ளடி ஃபேக் ஐ.டிஸ்! பொண்ணுங்களோட பெயர்களில் ஃபேஸ்புக் பக்கங்களில் வான்டடாக போய் சிக்கிச்சின்னாபின்னமானவர்கள் நிறைய பேர்.
இதோ ஃபேஸ்புக் ஃபேக் ஐ.டி பக்கிகளை எப்படி அடையாளம் காண்பது என சிம்பிள் டிப்ஸ்!
எல்லா ஃபேக் ஐ.டிகளும் புரொஃபைல் போட்டோக்களில் பொண்ணுங்க படத்தைத்தான் வெச்சிருப்பாங்க.
அழகான கொரியன் பொண்ணோ, ஓவியர் இளையராஜாவோட தாவணிப் பெண் ஓவியமோனு இவனுங்க ரசனைக்காராய்ங்க பாஸ்.
புரொஃபைல் பிக்சருக்கு அவ்ளோ மெனக்கெடுவாங்க. கன்னிப்பெண்கள்தான் இவர்களின் பெஸ்ட் சாய்ஸ். அது கன்னி இல்லை. உங்களை வளைக்கவெச்சிருக்கிற கண்ணி!
அடுத்து கவர் போட்டோ. பெரும்பாலும் பொண்ணுங்களுக்குப் பிடிச்ச கலர்னு சொல்லப்படுகிற பிங்க் கலர்ல ‘நான் முழுமை பெறாத பெண்.
என்னை நிரப்ப வருவாயா..?’, ‘உன் விழிகளை எதிர் நோக்கியே என் பாதை’ என்ற அர்த்தம் வரும் ஆங்கில வாசகங்கள்கொண்ட ஃபேஸ்புக் கவர் போட்டோக்களை இணையத்தில் சர்ச் என்ஜின் உபயத்தில் எடுத்துவைத்திருப்பார்கள்.
பெரும்பாலும் மியூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் அதிகம் இல்லாமலே ‘ப்ளீஸ் அக்செப்ட் மை ஃப்ரெண்ட் ரெக்யூஸ்ட்’ என அனாமத்தாய் இன்பாக்ஸில் வந்து ஸ்மைலியோடு சிரிப்பார்கள்.
அழகான புள்ள... நட்புக்கோரிக்கை கொடுத்திருக்கேனு பயாலஜி ஒர்க் அவுட் ஆகிடும்னு நம்பிப்போனா, உங்களை எந்த ஜியாலையும் காப்பாத்த முடியாது பாஸ்!