World Cup Finals timepass
Lifestyle

World Cup Finals : விமான சாகசம், வாணவேடிக்கை, இசை நிகழ்ச்சி, லேசர் ஷோ - இறுதி போட்டி ஸ்பெஷல்கள்!

டைம்பாஸ் அட்மின்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இப்படி ஒரு நிகழ்வை கண்டிராத  வகையில் 2023 உலகக் கோப்பையின் நிறைவு விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ரசிகர்களை மகிழ்விக்க பிசிசிஐ விரும்புகிறது. எனவே ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதம் இறுதிப் போட்டியின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மிகப்பெரிய நிகழ்ச்சிகள நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. 

இதற்காக பல பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த இறுதிப் போட்டியை காண சுமார் 1,32,000க்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்கு வருவார்கள். இது தவிர, டிவி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் பல ஸ்ட்ரீமிங் சாதனைகள் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை இறுதி விழாவின் பிரமாண்ட அட்டவணை:-

1. இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி:-   

இறுதிப் போட்டி விழாவின் முதல் பகுதியான மதியம் 12.30 மணிக்கு இந்திய விமானப் படையால் 10 நிமிட விமான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்திய விமானப் படையின் சூர்யகிரண் அக்ரோபாட்டிக் குழுவின் விமான தளபதி மற்றும் துணைக் குழுத் தலைவர் விங் கமாண்டர் சித்தேஷ் கார்த்திக் தலைமையில் நடத்தப்படுகிறது.

வானத்திலிருந்து 9 ஹாக் அக்ரோபாட்டிக் விமானங்கள் மூலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் செங்குத்து விமான சல்யூட் காட்சி நடத்தப்படவுள்ளது. இந்த ஏர்ஷோவிற்கு கட்டணம் ஏதும் இல்லை. ஆனால், பிசிசிஐயிடம் பெற்ற ஒப்புதல் கடிதம் மட்டும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க வேண்டும்.

2. சாம்பியன் கேப்டன்களின் அணிவகுப்பு:-   

இறுதிப் போட்டி வரலாற்றில் முதல்முறையாக, இந்த இறுதிப் போட்டியைக் காண உலகக் கோப்பையை வென்ற அனைத்து அணித் தலைவர்களையும் ஐசிசி அழைத்துள்ளது. விழாவின் இரண்டாம் பகுதியான இந்த நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு நடக்கவுள்ளது.

1975-ம் ஆண்டு வெற்றி கேப்டன் கிளைவ் லாயிட் முதல் சமீபத்திய வெற்றி கேப்டன் இயோன் மோர்கன் வரை 9 கேப்டன்கள் மொத்தம் 5 விதமான உலகக் கோப்பைகளுடன் 15 நிமிட அணிவகுப்பு நடைபெறுகிறது. இது தவிர, அவர் வென்ற தருணத்தின் 20 வினாடி ஹைலைட் ரீல் வீடியோ பெரிய திரையில் காண்பிக்கப்படும் மற்றும் பிசிசிஐ நியமித்த ஸ்டார் அறிவிப்பாளருடன் கேப்டன்கள் தங்கள் உலகக் கோப்பை வெற்றியின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவார்கள்.

3. இசை நிகழ்சிகள்:-     

மூன்றாவது பகுதியில் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைக்க சுமார் 500 நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் தேவ தேவா, கேசரியா, லஹரா தோ, ஜீதேகா ஜீதேகா, நகதா நகாடா, தூம் மச்சலே, தங்கல், தில் ஜாஷ்ன் போலே, ஐசிசி CWC 23 கீதம் போலே போன்ற பாடல்கள் இசைக்கப்படுகிறது.

4. லேசர் ஷோ மற்றும் ட்ரோன் காட்சிகள்:-   

இறுதியாக இரண்டாவது இன்னிங்ஸின் போது இரவு 8.30 மணிக்கு 90 வினாடிகளுக்கு லேசர் ஷோ நடைபெறுகிறது. ஆட்டத்தின் கடைசி பந்து போட்டவுடன், எந்தவொரு விளையாட்டு நிகழ்விலும் இதுவரை நடைபெறாத வகையில், சாம்பியன் பட்டம் வென்ற அணியின் பெயரானது சுமார் 1200 ட்ரோன்களின் உதவியால் வானத்தில் ஒளிரும். அதைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய வானவேடிக்கை நிகழ்ச்சி போட்டியில் வெற்றி பெற்ற அணியை ஆச்சரியப்படுத்தும் வகையில் நடைபெறும்.

- மு.குபேரன்.