Pink ODI timepass
Lifestyle

IND vs SA : Pink Ball டெஸ்ட் தெரியும், அது என்ன Pink ODI ? | Kohli

Ayyappan

பகல் நேரத்துல நடக்குற டெஸ்ட் போட்டிகளுக்கு ரெட் பால் பயன்படுத்துவது வழக்கம், அதே நேரம், பகல் இரவு ஆட்டமா நடக்குற டெஸ்ட் போட்டிகளுக்கு ரெட் பாலை பயன்படுத்தாம இரவு நேரத்துல, விளக்கு வெளிச்சத்தில சுலபமா கண்களுக்குத் தென்படும்ன்றதால பிங்க் கலர் பந்து பயன்படுத்தப்படுது. சரி, Pink ODI அப்படின்றது என்ன? வொய்ட் பால் பயன்படுத்துற இடத்துல பிங்க்ன்ற வார்த்தைக்கு என்ன வேலை?

பிங்க் ஒடிஐ பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்பாக பிங்க் டெஸ்ட் பத்தி தெரிஞ்சுப்போம். ஆஸ்திரேலியா பிங்க் பால் டெஸ்ட் வழக்கத்துக்கு வர்றதுக்கு முன்னாடி 2009ல இருந்தே பிங்க் டெஸ்ட் ஆடுது. ஒவ்வொரு வருஷமும் சிட்னில நடைபெறக் கூடிய முதல் டெஸ்ட் போட்டி பிங்க் டெஸ்ட் ஆக கடைபிடிக்கப்படுது. இது மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வ கொண்டு வர்றதுக்காக அனுசரிக்கப்படுது‌.

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மெக்ராத்தோட மனைவி ஜேன் மெக்ராத் மார்பகப் புற்றுநோயால தான் இறந்து போனாங்க. அவங்க நினைவா மெக்ராத்தால 2005ல ஆரம்பிக்கப்பட்ட மெக்ராத் ஃபவுண்டேஷனுக்கு நிதியுதவிய இந்த டெஸ்ட் போட்டி மூலமா வசூலிச்சுக் கொடுக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் 2009-ல இருந்து வருடம்தோறும் இத நடத்திட்டு வர்றாங்க.

குறிப்பிட்ட அந்த டெஸ்ட் போட்டியோட மூன்றாவது நாள் மொத்த ரசிகர்களும் பிங்க் கலர் டிரஸ்லயும் ஆஸ்திரேலிய வீரர்கள் பிங்க் கலர் தொப்பிகளோடும் ஆடுறது வழக்கம். தென் ஆப்பிரிக்காவும் இதே போலத்தான் பிங்க் ஒடிஐனு ஒன்றை ஆடுறாங்க. ஆஸ்திரேலியா மாதிரியே மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கான நிதி வசூல் பண்ணவும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுது.

இதற்கு முக்கியக் காரணம் தென் ஆப்பிரிக்கால மார்பகப் புற்றுநோயால இறந்த போற பெண்கள் எண்ணிக்கை அதிகம். அதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிச்சா குணப்படுத்திட முடியும். ஆனா பெண்களுக்கு அது குறித்த தகவல்கள் சரியாக சேர்வது கிடையாது. அதனால் தான் கிரிக்கெட் போன்ற பெரிய பிளாட்ஃபார்மை இதற்காக தென் ஆப்ரிக்கா பயன்படுத்துது. இதில் வழக்கமான பச்சை நிறத்துக்கு மாற்றாக பிங்க் கலர்ல தென் ஆப்ரிக்க வீரர்கள் ஜெர்ஸி அணிஞ்சிருப்பாங்க.

இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆடிய முதல் ஒருநாள் போட்டி பிங்க் ஒடிஐயாக அனுசரிக்கப்பட்டுச்சு. பொதுவாக இந்த பிங்க் ஒடிஐக்கள்ல தென் ஆப்ரிக்காவோட டாமினேஷன் அதிகமாக இருக்கும். இதற்கு முன்பாக ஆடியிருந்த பதினோரு போட்டிகள்ல ஒன்பது போட்டில அவங்கதான் ஜெயிச்சிருந்தாங்க. ஏலியன் ஏபிடி வில்லியர்ஸ் 2015ல வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா அடிச்ச 31 பால் செஞ்சுரி கூட இப்படியொரு பிங்க் ஒடிஐல அடிக்கப்பட்டது தான்.

இந்தியாகூட இதுவரை எந்த பிங்க் ஒடிஐலயும் தென் ஆப்ரிக்காவை வீழ்த்துனது இல்லை. ஆனா இந்த தடவை அந்த ஹிஸ்ட்ரியை மாத்தி எழுதி அந்தப் போட்டியை ஜெயிச்சிருந்தாங்க. அர்ஷ்தீப் சிங் மற்றும் அவீஸ் கான் தங்களோட அதிவேகத்தால அதை மாற்றி எழுத வச்சிருக்காங்க.

`Go Green'னு வலியுறுத்த ஆர்சிபி பச்சை நிறத்துக்கு மாறி ஆடுறதையும், துக்கத்தையோ எதிர்ப்பையோ தெரிவிக்க சில வீரர்கள் சமயத்துல கறுப்பு நிற பேண்ட் (Band) அணிந்து ஆடுவதையும் பார்த்திருக்கோம். ஒருமுறை Black Lives Matterன்றத வலியுறுத்தி இந்திய, ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லாம் போட்டிக்கு முன்பாக முழங்கால் போட்டு ஒருங்கே அது குறித்து தங்களோட பங்களிப்ப செஞ்சுருந்தாங்க.

என்னதான் கிரிக்கெட் நம்மோட ஒரு அங்கமாக மாறி இருந்தாலும் இது போன்ற சந்தர்ப்பங்கள் தான் கிரிக்கெட்டர்கள நமக்கு நெருக்கமாகக் கொண்டு வருது.