IPL 2023 timepass
Lifestyle

IPL 2023 : வேட்டி, சட்டையில் Dhoni, Warner - வைரலாகும் Delhi அணியின் டுவீட் ! | CSK vs DC

"வணக்கம் வாழவைக்கும் சென்னை! இன்னைக்கு மேட்ச்-க்கு ரெடியா?" என்று பதிவிட்டுள்ளது.

டைம்பாஸ் அட்மின்

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன. சென்னை அணியானது 13 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் தோனி மற்றும் வார்னர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது டெல்லி அணி.

மேலும், அந்த டுவிட்டர் பதிவில், "வணக்கம் வாழவைக்கும் சென்னை! இன்னைக்கு மேட்ச்-க்கு ரெடியா?" என்று பதிவிட்டுள்ளது. தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.