இம்பேக்ட் பிளேயர்னு இல்லாத ரூலை எல்லாம் தினுசு தினுசா பிசிசிஐ ரூம் போட்டு யோசிச்சுட்டு இருக்கப்போ ஏற்கனவே இருந்த எல்லோருக்கும் தெரியாத ரூல்களை தமிழன் பட விஜய் மாதிரி தூசிதட்டி எடுத்துட்டு வந்து களத்துல அனல் பறக்க வைக்கிறவருதான் ரவிச்சந்திரன் அஷ்வின்.
வித்தியாசமான நுணுக்கங்கள்ல வல்லவரான Breaking Bad கெமிஸ்ட்ரி டீச்சர் கொஞ்சமும், தந்திரமா வலைபின்றதுல கில்லாடியான Money Heist புரஃபசர் கொஞ்சமுமா கலந்த செஞ்ச கலவையா ஐபிஎல்ல அவரு பேசுபொருளான இரு சந்தர்ப்பங்கள ரீவைண்ட் பண்ணுவோமா?
சுனாமின்ற வார்த்தையோட அர்த்தம் எப்படி 2004-க்கு முன்னாடி இந்தியர்களுக்கு பரிச்சயம் இல்லையோ அப்படித்தான் 2019-க்கு முன்னாடி Mankading-ன்ற வார்த்தையும். இப்போ அஷ்வின் - பட்லர் இருவருமே ராஜஸ்தானுக்காக ஆடினாலும் அப்போ பட்லர் ராஜஸ்தான்லயும் அஷ்வின் பஞ்சாப் அணிலயும் இருந்தாங்க. 185 ரன்கள ராஜஸ்தான் சேஸ் பண்ணிட்டு இருக்க 69 ரன்களோட பட்லர் களத்துல இருக்க அணி 108/1ன்ற நிலைமைல இருந்துச்சு. பொதுவா பந்து வீசப்பட்ட பிறகுதான் நான் ஸ்ட்ரைக்கர் எண்ட்ல இருக்க பேட்ஸ்மேன் ஓடத் தொடங்கனும்.
ஆனா அஷ்வின் பந்து வீசுறதுக்கு முன்னாடியே பட்லர் ஓடத்தொடங்க, பந்தை வீசாம அந்த முனைல இருந்த ஸ்டம்ப் அஷ்வின் தகர்த்து பட்லரை அவுட் ஆக்குனாரு. இதுக்குப் பேருதான் மேன்கேடிங். ரூல் புத்தகத்துல இருக்குன்னு பலரும் விவாதம் பண்ண வார்னிங் கொடுத்துருக்கலாம்னு இன்னொரு தரப்பு கொடி பிடிச்சது. இந்தப் போட்டியில ராஜஸ்தான் பட்லரோட முக்கிய விக்கெட்ல விட்ட மொமெண்டத்த கடைசி வரை பிடிக்க முடியாம தோத்துட்டாங்க. எது எப்படியோ அஷ்வின் புண்ணியத்துல மேன்கேடிங்கை லீகல் ரன்அவுட்டா ஐசிசி சமீபத்தில மாத்திடுச்சு.
Retired Hurt கேள்விபட்ருப்போம் ஆனா Retired Out யாருக்கும் அவ்வளவா தெரியாத நடைமுறை. போன வருஷ ஐபிஎல்ல லக்னோவுக்கு எதிரான போட்டியில ராஜஸ்தானுக்காக ஆடுனப்போ அஷ்வின் இத ஃபாலோ பண்ணாரு.
9.5 ஓவர்ல அணி 67/4னு மோசமான நிலைமைல இருக்கப்போ அஷ்வின் களமிறக்கப்பட்டாரு. 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஹெட்மயர் கூட நின்னு கட்டமைச்சுட்டாரு. ஆனா 19-வது ஓவரோட ரெண்டாவது பால் வீசப்பட்டதும் ரிட்டயர்ட் அவுட் முறைப்படி வெளியேறுறதா அறிவிச்சு கடைசி பத்து பந்துகள சந்திக்க பராக் உள்ள வர்றதுக்கு வழிவிட்டாரு. அந்த சமயத்துல 23 பந்துகள்ல வெறும் 28 ரன்களை மட்டுமே அஷ்வின் எடுத்திருந்தார்.
10 ஓவர்கள் களத்துல நின்ன சோர்வு காரணமாக மட்டுமில்ல, பராக் வந்து அடிச்சு ஆடட்டும்ன்ற சமயோசிதம் காரணமாகவும் அஷ்வின் அந்த முறைல வெளியேறினாரு. கூட நின்ன ஹெட்மயருக்கே என்ன நடக்குதுன்னு புரியல. போட்டிக்கு பின்பாக இது பத்தி ஏற்கனவே கோச்கிட்ட பேசி முடிவெடுத்திருந்ததா அஷ்வின் சொல்லியிருந்தாரு.
இந்த முறைப்படி ஐபிஎல்ல வெளியேறுன முதல் பேட்ஸ்மேனும் அஷ்வின்தான். பராக் வந்து 4 பந்துகள்ல 8 ரன்கள மட்டுமே சந்திச்சு பெரிய தாக்கத்த ஏற்படுத்த தவறியிருந்தாலும் இப்படி ஒரு வழி இருக்குன்னு ரசிகர்கள் எல்லோருக்கும் தெரிய வச்சது அஷ்வின் தான்.
இப்பவும் பல பேட்ஸ்மேன்கள் டி20-ன்றத மறந்து டெஸ்ட் மோடுலயும் ஒன்டே மூட்லயும் ஆடுறப்போ எல்லாம் ரசிகர்கள் அஷ்வின் மாதிரி ரிட்டயர்ட் அவுட் ஆகி அடுத்தவங்களுக்காச்சும் வழி விடலாம்லன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இப்படி பல ரூல்களை பிராக்டிகல்லா ரசிகர்களுக்குப் புரிய வச்சுருக்கறது நம்ம அஷ்வின் தான், மன்னிக்கவும், சயின்டிஸ்ட் அஷ்வின் தான்.