Hayden
Hayden  IPL
Lifestyle

IPL சுவாரஸ்யங்கள் : CSK Hayden ஓட Mongoose bat நியாபகம் இருக்கா? | IPL 2023

Ayyappan

டென்னிஸ் லில்லியோட அலுமினியம் பேட், பாண்டிங்கோட கார்பன் கிராஃபைட் பேட், ரசலோட பிளாக் பேட் எல்லாம் உண்டாக்காத ஈர்ப்ப மேத்யூ ஹெய்டனோட மங்கூஸ் பேட் ஏற்படுத்துச்சு.

சிஎஸ்கேவோட நட்சத்திர ஓப்பனர்கள்ல ஒருத்தரா இருந்தவரு மேத்யூ ஹெய்டன். மிடில் ஆர்டர் வரைக்கும்கூட பேட்டிங் நகராம அட்டாக்கிங்ல அசால்ட் பண்ணவரு. மூணே சீசன்தான் சிஎஸ்கேவுக்காக ஆடினார்னாலும் பல போட்டிகள்ல வின்னிங் பெர்ஃபார்மன்ஸக் கொடுத்தவரு. அதுல ஒரு போட்டியிலதான் இந்த மங்கூஸ் பேட்டோட ஹெய்டன் களமிறங்குனாரு.

2010ல டில்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான போட்டி அது. தல தோனி இல்லாததால சின்ன தல ரெய்னா கேப்டன்ஷி பண்ணினாரு. அந்தப் போட்டியில ஹெய்டன் ஆடுன வெறியாட்டத்துல மொத்த டில்லி மைதானமும் சைலண்ட் மோடுக்கு போயிடுச்சு. 43 பந்துகள்ல 83 ரன்கள விளாசி அஞ்சு விக்கெட் வித்தியாசத்தில சிஎஸ்கேவ ஜெயிக்க வச்சாரு. ஹெய்டன் - ரெய்னா பார்ட்னர்ஷிப்ல 39 பந்துகள்ல வந்த 78 ரன்கள்தான் வெற்றிய உறுதிப்படுத்துச்சு. சமீபத்துலகூட இது தன்னோட ஃபேவரைட் இன்னிங்க்ஸ்கள்ல ஒன்னுன்னு ரெய்னா சொல்லியிருந்தாரு.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இந்தப் போட்டியில ஹெய்டன் பயன்படுத்துன பேட்தான் டாக் ஆஃப் த டவுன். ப்ளேடு பகுதி ரொம்ப சின்னதா அதாவது ரெகுலர் பேட்டவிட 30% குறைவாகவும் ஹேண்டில் வழக்கமான பேட்டவிட 40% ரொம்பவே நீளமாவும் இருக்க மாதிரி ஒரு பேட்டோட ஹெய்டன் களமிறங்குனாரு. அதுக்குப் பேரு மங்கூஸ் பேட்னே ரசிகர்களுக்கு பின்னால்தான் தெரிய வந்துச்சு.

"பாதி பேட் இங்க இருக்கு மீதி எங்க இருக்கு"னு கவுண்டமணியோட வாழைப்பழக் காமெடி டயலாக்லாம் கேட்க வச்சது. அதுவும் ஆஜானுபாகுவான ஹெய்டன் அவ்ளோ குறுகலான பேட்டை வச்சிருந்தது பார்க்கறதுக்கு கையில ஒரு குச்சிமிட்டாயப் பிடிச்சுக்கிட்டு ரெஸ்ட்லிங் ரிங்குக்குள்ள ராக் இறங்குன மாதிரி தான் இருந்துச்சு.

மத்த நார்மலான பேட்களவிட மங்கூஸ் பேட் டி20-க்காகவே ஸ்பெஷலா வடிவமைக்கப்பட்டிருந்தது. ஸ்வீட் ஸ்பாட் வழக்கத்தவிட பெருசா இருந்ததால பவர் ஹிட்டிங்கிற்கு பேட் ஆதரவளிச்சது. சரியா டைமிங் மட்டும் பண்ணாப் போதும் பந்து பவுண்டரிய தாண்டுச்சு.

இந்தப் போட்டியிலயே ஹெய்டன் 9 பவுண்டரிகளயும் 7 சிக்ஸர்களயும் அசராம விளாசுனதுக்கு பேட்டோட மகிமையும் காரணம். உண்மையில இந்த பேட்டோட வித்தியாசமான தோற்றத்த பார்த்துட்ட தல தோனி ஹெய்டன்கிட்ட, "இந்த பேட் வச்சு மட்டும் ஆடாதீங்க, நீங்க என்ன கேட்டாலும் தர்றேன்"னு முன்னாடி சொன்னாராம். ஆனா ஹெய்டன், "இதுல பலதடவ பயிற்சி பண்ணிருக்கேன், என்ன நம்பி இந்தப் போட்டியில மட்டும் இதால பேட்டிங் பண்ண விடுங்க"ன்னு சொன்னாராம். சொன்ன மாதிரியே ஒரு மிகப்பெரிய இன்னிங்ஸ அந்த பேட் மூலமா ஹெய்டன் ஆடிக்காட்டிட்டாரு.

டிஃபென்சிவ் ஸ்ட்ரோக்கள சரியா ஆடமுடியல அதுல ரிஸ்க் இருக்கு, அதேபோல இதுல ஆடிப் பழகவே கடுமையான பயிற்சிகள் தேவைன்றது காலப்போக்கில இந்த பேட்டோட பயன்பாட இல்லாமலே ஆக்கிடுச்சு. இருந்தாலும் அந்த ஒரு இன்னிங்ஸ் காலத்துக்கும் ஹெய்டன் பத்தியும் மங்கூஸ் பேட்னால அவரு எடுத்த 93 ரன்கள் பத்தியும் பேசிட்டேதான் இருக்கு.