iphone
iphone timepassonline
Lifestyle

Iphone ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வழக்கு பதிந்த காவல்துறை !

டைம்பாஸ் அட்மின்

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள 25 வயதான இளைஞர் அக்டோபர் மாதம் ஆன்லைனில் ரூபாய் 46,000 மதிப்புள்ள ஐஃபோன் ஒன்று ஆர்டர் செய்துள்ளார் .

ஆர்டர் செய்த ஐஃபோன் அக்டோபர் 9 ஆம் தேதி அவருக்கு வந்தது. ஆர்டரை பிரித்து பார்த்த இளைஞருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அந்த பார்சலில் ஐஃபோனிற்கு பதிலாக பாத்திரம் விளக்கும் சோப்பு கட்டிகள் மூன்று இருந்தன. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை எடுத்த காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையின் படி, தவறு ஆர்டரை பேக் செய்த இடத்தில் ஏற்படவில்லை என்றும் கொண்டுவரும் வழியில்தான் தவறு நடந்திருக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர். மேற்கொண்டு போலீஸார் IPC Section 420 - ன் படி அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

- புனித்.