Dhoni Dhoni
Lifestyle

MS Dhoni Birthday : தோனி வென்ற கோப்பைகள் என்னென்ன?

2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்றார். இதன்மூலம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.

சு.கலையரசி

மகேந்திர சிங் தோனியின்  42 வது பிறந்தநாளை  இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் பெரிய பேனர்கள் வைத்து கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். இவருடைய கிரிக்கெட் வரலாற்றில் இவர் வென்ற கோப்பைகள் பற்றி பார்ப்போம்.

23 வயதில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொண்டதன் மூலம் எம்.எஸ்.தோனி தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். 2005ல் அவர் தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

2007 ஆம் ஆண்டு ஐசிசி உலக T20யில் இந்தியாவிற்காக கோப்பையை வென்று தந்தார்.

2008 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரான பார்டர்-கவாஸ்கர் டிராபியை வென்றார். இதுவரை மூன்று பார்டர்-கவாஸ்கர் டிராபிகளை வென்றுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனாக 2010ல் முதல் 5 ஐபிஎல் வெற்றியை கைப்பற்றினார்.

2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்றார். இதன்மூலம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.

2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவிற்கு பட்டத்தை வென்றார். அப்போதைய நிலையில், அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற உலகின் ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.

2016ஆம் ஆண்டு இந்தியாவிற்காக ஆசிய கோப்பை டி20யை வென்றார். இதுவரை இரண்டு ஆசிய கோப்பைகளை வென்றுள்ளார்.

இரண்டும் சிபி தொடர்களையும் வென்று தந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மேட்சில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐந்தாவது இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது.

மகேந்திர சிங் தோனி,  கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் ஆவார்.

சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னையின் கேப்டனாக தோனி விளையாடியதன் மூலம், கேப்டனாக 200வது போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் பெற்றார்.

சென்னை அணிக்காக 14வது சீசனில் கேப்டனாக விளையாடிய தோனி, இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தையும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் 11 முறை சென்னை அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.